நினைத்தாலே கண்கள் மட்டுமல்ல என்
பேனாவும்
கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி அது. நீ வீடு காலி செய்து
பக்கத்து
டவுனுக்கு பயணப்பட்ட நேரம், பள்ளிவிடுமுறை
நாளான போதும்கூட நண்பர்கள் உடன்
அரட்டை அடிக்க
ஆற்றங்கறை சென்றிடாமல், அத்தனை தட்டுமுட்டுச்
சாமான்களுடன்,
நீயும் ஏறும்வரை கண்கள் கலங்கிட
காத்திருந்தேன். உன் அப்பா கொடுத்த ஜ்ம்பது
ரூபாயை
வாங்க மறுத்த என் கைகள், நீ
கொடுத்த ஜந்துரூபாயை
அழுதகண்ணோடு வாங்கி
கொன்டேன.இன்னமும் உன்
கைரேகை அழியாமல் உறையிட்டு
பத்திரப்படுத்தி வருகிறேன்.
நீ பெரியவளாகிவிட்டாய் என்று விசேஷ
அழைப்பு
வீட்டுக்கு வர, அம்மாவிடம்
ஆயிரம்முறை
விசாரித்திருக்கிறேன்
உன்னைப்பற்றி.
எத்தனையோ தடைகளுக்குப் பிறகு உன்னை,
உன்வீட்டில் சந்தித்திட உன்
அண்ணனின்
திருமனநிச்சயம் வழிசெய்தது.வீட்டில்
அத்தனையும் புதியமுகங்களாயின
உன்னைத்தவிர.
யாரிடமும் விசாரிக்க மணம்இன்றி
உன்னைத்தேடி
அலைந்த விழிகள் இதயத்தை
இரும்பாக்கியது.
நான் உன்னைத்தேடி வருவேன் என
அறிந்தவள் போலே-கரைஒதுங்கிய
வெண்சங்காய்,
மாமரத்தின் கீழே கிடந்த இலைகளை
கிள்ளி
எறிந்தவாறே தலைகுனிந்தபடி இமைகள்
விரித்தாய்.
விண்மீன்களை எண்ணி சொல்லச்சொல்லி
இருந்தால்
கணநொடியில் எண்ணி சொல்லி
இருப்பேன்.ஆனால்
நான் பேச வந்த வார்த்தைகள்,அதை
எவ்வளவு என
எழுதினால் யுகங்கள் பல
வேண்டும்.எழுதிட, கடல்நீரே!
"மை" ஆனாலும் கூட போதுமா என்பது
சந்தேகமே!.
ஆனால் அத்தனை வார்த்தையும்
இரண்டு
நிமிட மெளனத்தில்
இடம்மாறின.
எப்படியோ!! உன்னைப்பற்றி வருகின்ற
செய்திகளை
மட்டுமே என்காதுகள் கேட்பது போல,
மற்றன எதையுமே
கேளாமல்-நீ படித்திடும் பள்ளியில்
சேர ஆசைப்பட்டேன்.
என்ன செய்ய நான் "ஆடவன்" ஆனதால்
உன்னுடன்
சேர்ந்து படிக்க இயலாது உன்னை
மட்டுமே
படித்தேன் பள்ளிவாசல்களில்
காத்திருந்து.
உன் அண்ணன் அயல்நாடு சென்றிட,
உன்னையும்
அயல்நாட்டிற்கு அழைத்திட, அவன்
நண்பனை உன்னை-
கேட்காமலையே உறுதி செய்யத்
தொடங்கினார்கள்.
இந்த விசயம் அறிந்த நீயோ படிப்பினை
தவிர்த்தாய்.
நானோ விசயம் அறிந்து
துடித்தேன்.
நீயோ விஷத்தை
கையிலெடுத்தாய்.
என் உயிர் கெட்டியோ என்னவோ
உனக்கு ஒன்றும் ஆகிடவில்லை அன்று.
என் அம்மா-அப்பா எவ்வளவோ
சொல்லியும்
கேட்காமல் உன்னைத்தேடி உன்
இல்லம் வந்த
நான் அசிங்கப்படுத்தப்பட்டேன்
உன்பெற்றோர்களால்.
நீ மண்டியிட்டு கேட்டும்
மசியாத உன்பெற்றோர்கள்,
கையில் அட்சதைக்குப் பதிலாய் உயிர்
மாய்த்திடும்
வழியில் விஷம் கையிலெடுக்க,
விதியை நொந்து
நீ சொன்ன சொல் எல்லாம்
தானே
இன்றைய என்
செல்வங்கள்.
திருமணம் ஆகியும் உன் மனம்
மாறவில்லை.
பணம் பலகண்டும் என்னுடைய
காதல்மனமும்
மாறவில்லை.!
"இன்னமும்
காதலிக்கிறேன்-
உன்னைப் போலவே
நானும்,"
அந்த ஜந்து ருபாய் தாளை
தடவியவண்ணம்.
உன்னை
மணக்காததால்!!
நானோ கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரி. நீயோ
மணமாகியும் மங்கலம் சூடிடாத
நெற்றிக்காரி-
திலகம் நான் இடாததால்.
நீ குங்குமம் சூடிடாதற்கு மதம்
காரணமாம்.
நான் மணம் கொள்ளாதற்கு ஜாதகம்
காரணமாம்.
காதலை அறியாத
அறிவாளிகளுக்கு.