நிழல் கூட காதலில்.ஆமாம்
உன் பிரிவில் சிறியதாகி விட்டதே!
பிரம்மன் படைத்ததும் பிரமித்து தன்
இயலாமை நொந்து, இட்ட சாபமோ
அவளின் அழகை அனைவரும்
வருணித்து.
இயலாமை நொந்து, இட்ட சாபமோ
அவளின் அழகை அனைவரும்
வருணித்து.
வேலை தேடி அலைந்ததை விட
உன்னைத் தேடி அலைந்ததே
அதிகம்.
இரண்டுமே கிடக்கவில்லை.
வேலை இல்லாமல் அவளும்-
அனுபவம் இல்லாமல்
வேலையும்.
விண்-மண்,வானவில்-மேகம், நட்சத்திரம்- நிலவு,
மழை- அலை, என எல்லாம் பிடித்த உனக்கு,
ஏனோ என்னைப் பிடிக்கவில்லை.
உன்னை மட்டுமே பிடித்த எனக்கு மட்டும்,
பைத்தியம் பிடித்தது.ஆனால் மாற்றங்கள் மட்டும்
எதுவும் இல்லை நான் பைத்தியம் ஆன போதும்.
என்னை மறந்த நிலையில்,உன் நினைவில்.
பொய் முன்னே மெய் தோற்ற உணர்வு.
உன்னை அழகி என்ற போது.
அழகு போலி என
எனக்கு உணர்த்திய வனப்பூ நீ.
சின்னதாய் நீ சிரித்த சிரிப்பில்
சிறையில் அறையப்பட்டவன் நான்.
யேசுவவும் நாங்களும் ஒன்று தான்.
உன் நினைவென்னும் சிலுவை சுமப்பதால்.
சின்னதாய் புண்ணகைத்து புயலாய்
புகுந்து கொண்டவள் புதிர்
போடுகிறாள்.
"முடிந்தால் கண்டுபிடி"நான் வந்த வழியை
என?
பெண்ணே உறக்கமும் நீயும் வேறில்லை.
இரக்கமற்று வராமல் துடிக்கச் செய்வதும்
வந்ததும் சுகமாய் என்னை மறக்கச் செய்வதும்.
பிரசவ வலியில் துடித்தவள் அமைதியானாள்,
குழந்தையின் அலறல் கேட்டதில்.
குழந்தையின் அலறல் மட்டும் ஓயவே இல்லை
ஒருத்தனை மணந்த பின்னும்.
கோழையின் முதல் முயற்சி தற்கொலை.
பால்யம் முதல் பருவம் வரை தொலைத்தன,
எல்லாம் புதிதாய் பெற்றேன்.
பெற்றோரின் அன்பினால்.
பருவத்தில் என்னைத் தொலைத்தேன் உன்னிடம்.
திரும்ப பெறவே இல்லை.
என்னை மட்டுமல்ல, பெற்றோரின் அன்பையும்.
யாரோடோ கொண்டு விட்ட
காதலால்-
கைகுழந்தை பெறும்
முத்தம்,
யாரோ நட்டுச் சென்ற
மரத்தால்-
நடைபயணி பெறும்
நிழல்,
யாரோ பொழுதுபோகாமல் தன்
மெய்ஞானத்தால் தொடர்ந்திட்ட
விஞ்ஞானம்,
பொறாமை பொங்கிட வளரும்,
விஞ்ஞானம் தரும் பலன்
இதோ! இன்று மனித இனத்தின்
வரவான
அந்த கைக்குழந்தையே, உடல்கள்
சேராமல்
தேவைக்கு ஏற்ப செய்யச் சொல்லுதலை
என்னவென சொல்வது?.
விஞ்ஞானத்தின் சாதனை
என்றா?இல்லை
இறைவன் இவனுக்கு இட்ட சோதனை
என்றா?
தபால் தலைகளை சேகரித்தவன் பைத்தியமாய்.
இன்று உன் தலை உதிர்ப்பூக்களை சேகரிக்கிறேன்
வைத்தியமாய்.உன்னை காதலிப்பதால்.
சிரித்து சூரியஒளி வீசிய போது
அறியவில்லை குடிசைவாசி,
கூரையின் ஓட்டையை.
அழுது வானம் பொழிந்த போது மழை
அறியவில்லை குடிசையும்
இல்லாதவர்களை.
நீ கவிதை படிப்பதால், நான் கவிதை படைக்கிறேன்.
அப்படியாவது என் பெயரை நீ உச்சரித்திட.
நீ அழகாய் இருப்பதால் நான் உன்னை
காதலிக்கவில்லை.
உன் காதலால் காதல் அழகாகிறதே,
அதனால் உன்னை காதலிக்கிறேன்.
ஆடை அது எத்தனையோ முறை தடையாய்
உன் வெட்கத்தினைப் போல.
மூடி நீ வைத்திருந்தும் காற்றால் சற்றே
விலகி சலாம் போடும் நீ மூடி வைத்த முன்னழகு.
ஆனால் என்னை கண்டதும் உன் வெட்கத்திற்கே
முலாம் போடும் உன் விரலும் இதழும்
நாத்தீகம் பிடித்த என்னை ஆத்தீகம் பிடித்த
நீ பிடித்தாய்.உன் தாமதத்தால் உதடுகள்
தானாக ஓதுது மந்திரம் உன் வரவுக்காக.
நான் அமைதியாய் படிப்பதாய் என் பெற்றோர்கள்.
நான் உன் பெயரை உச்சரிப்பது அறியாமல்.
எறும்புக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால்
இரவெல்லாம் நான் உறங்காமல் உன்அருகில்.
காவல் இருக்கிறேன் உன்னை காதலிப்பதால்.
திருமணத்தில் சாப்பிடாமலையே எழுந்து
வந்ததில் பொலம்பியவன் அறியவில்லை.
எடுத்துச் சென்று திண்ற ஏழை வாழ்த்தியதை.
ஆண்டுகள் மாறியும் மாறாத புண்ணகையோடு
அவள் மட்டும் அதே சுவற்றில்.என்னை போலவே
என் அறைத்தோழரயும் நிர்வாணமாய் ரசிக்கிறாள்.
நான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி
சிரித்தவள் நீ.இதோ இன்று என்னை கண்டாலே
சிரித்திடும் ஊரார் மத்தியில் நீ மட்டும் கண்கள்
கலங்கி செல்வதை அறியாத
நிலாக் காதலன் அல்ல- நான் உன் நிழல் காதலனடி.