வலையில் தப்பிய மீன்கள்
மாட்டிக்ககொண்டது தூண்டிலில்.பசிக்காக மீன்கள்,மீன்களுக்காக தண்ணீர் என
நீரோடும் யுத்தம் மனிதனால்.
தாவரங்களில் உண்டோ உயர்வு தாழ்வு
அங்கும் காதல் தோல்வி.ஆம்
தாவரங்களும் தாடி வளர்க்கின்றன.
சிலதரையின் உள்ளே!சில வெளியே!
விடியலுக்காக காத்திருக்கிறான்
விவசாயி தினமும்.யாருக்கோஎன்றோ!
எங்கோ அரிசியாகப் போகும்
விளைச்சலை வளர்த்திட பசியோடு!!
நீ கன்னி என உன் நிழல்
மிதித்து,வடம் பிடித்து வந்தடைந்தேன்
உன் வாசல் வரை.
அப்பா என்றது என்குழந்தை
இயற்கை இட்ட சாபமோ
அருவிகள்
அழுதுகொண்டே ஆயுள் முழுதும்.
உன் கால் பதிந்த முள் கூடவெட்கத்தில் முகம்(னை) சிவந்து.
கோழையின் முயற்சி கூடவெற்றி தான் தற்கொலை
மனிதனின் முதல் தேடல் மரணம்தேடல் கிடைத்ததில்
தொலைந்தவன்
உயிர் கொள்கிறான்.கல்லரையாக.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Wednesday, October 11, 2006
புலம்பல்கள் கிறுக்கல்களாய்
Subscribe to:
Posts (Atom)