என்னிள் உன்னைத் தொலத்ததால்
உன்னுள் புது உயிர். குழந்தை
உன் மை விழிப்பார்வையால்
myவிழிப்பார்வை இழந்தது
கவிதை! நீ கண்ணீர் சிந்தினால்
என் பேனா சிந்தும் மை
கூட கவிதையே
தான் விழித்துக் கொண்டதால்
அனைவரையும் விழித்திடச் செய்யும்விடியற்காலை
விரோதி.
சிறைக்குள் சில்மிஷம் செய்யும்
காதல் ஜோடிகள் கடிகாரம்
ஊர்,பெயர் தெரியாத தேடி வந்த
எல்லோருக்கும்
ஆம்பள அம்மா.
சமையல்காரன்
காலையில மூதேவின்னு திட்டுன புருசன்,
ராத்திரி ராசாத்தின்னதும் சொக்கிப் போயி
மடியில விழுகிறாள்.
இன்னொரு ராசத்தி வராதிருக்க.
என்னைப் பற்றி நானே கவலைப்படாத
போது என்னைப் பற்றி கவலை கொண்டவள்
காதலை கொண்டதால்.
ஆடையும் வெட்கமும் ஒன்று
தான்.
எத்தனையோ முறை தடைகளாய்
நமக்குள்.
தடைகளை தகர்த்திட உன் முந்தானை
பிடித்து இழுத்தேன். புறமுதுகுகாட்டி நின்றாய்,
முகத்தினைப் பொத்தி வெட்கத்தில்.
கத்தியால் என்னை குத்தும்போதும்
காலாட்டியபடி நான். கனவில்
விசா இல்லை,விமானப் பயணம் இல்லை.
நான் மட்டும் அயல்நாட்டில்,
ஜந்து நிமிடப் பயனத்தில்.
கனவில் சிரித்துப் பேசியவள்
முறைத்துப் போகிறாள் நேரில்.
வாங்கிய முத்தத்தைதிருப்பிக் கொடுக்காததால்.
செய்யாத கொலைக்கு,இல்லாத நீதிமன்றத்தில்
வாதாடும் எல்லாக் குடிமகனும் அம்பேத்கார் தான்.
நிலவில் வடைசுட்டு விற்பதாய்,
பாட்டி கதை சொன்னாள்.
பாட்டியும் மறந்து போனாள்.
கதையும் மறந்து போனது,
நிலவு உன்னை நேரில் கண்டதால்.
யார் வைத்த மரமோ?.நம் பெயர் இணைந்திட
வளர்ந்து நிற்கிறது தனிமையாய்,
நம் எதிர்காலம் சொல்லியபடி.
சிரித்தால் ஆயுள் கூடும் என்பது
அறியாத வரைகுழந்தையும் சிரித்தது.