
என் காலண்டர் கிழமை கிழிக்கப்படுவதில்லை
உன் பிறந்தநாளுக்கு பின்னே
நீ பிறந்தநாளிலே கூவும் குயிலினம்
குழப்பத்தில் கூவிட மறந்துபோனது.
பிறந்த நீ தன் இனமோ என எண்ணி.
நீ பிறந்த நாளிலே மயிலினம் தன் ஆடல் மறந்து,
உன் நடை அழகை பயில உன் இல்லம் வரும் .
உன்னை இரவினில் காணாவிடில்,
நிலவினை காணவில்லை எனபுகார் தந்திடும்
நான் புதுமைபித்தன் இல்லையடி,
உன் புடவை முந்தானை சுற்றும் சூரியகோளடி நான்.
நீ சிரிக்கும் ஒவ்வொரு முறையும்
ரோஜாப்பூ தலைகுனியும் வெட்க்கத்தால்,
உன்போல தன்னால் மலரமுடியவில்லை
என்ற தன் இயலாமை எண்ணி.
உலக அழகியை கண்டேன் ஒருநாள்
ஒரு இரவு தான் உறக்கம் தொலைத்தேன்.
உன்னை முழுதாய் ஒருமுறை கூட காணவில்லை,
ஆனாலும் தினமும் உறக்கம் தொலைக்கிறேன்.
உனக்கு கனவில் வியர்த்ததற்கே கைவிசிறி தேடி,
கண்டிடாத கணத்தில் ஆடைகளை கழைந்து விசிறியாக்கி
விசிறிவிட்டு உன் வியர்வை போக்கிய உன் விசிறி நான்.
ஆனால் இன்று களவில் விளைந்த வியர்வைக்கு
உன் விசிறியான என்னால் உன் வியர்வைக்கும்
விடைகொடுக்க முடியவில்லை,கலைந்த உன்
உடைகளையும் கூட அளிக்க முடியாமல் தான்,
உன் உச்சி முகர்ந்து விடைகொடுக்கிறேன்.
கனவில் நீ நனைந்த்தற்கே குடைபிடித்து,
குதூகலமாய் மழையில் நனைந்து,
நட்சத்திரமாய் மின்னியவன் நான்.
இன்று களவில் நீ நனைந்து
நிற்க நான் மோகத்தின் முடிவில்
குனிந்து நிற்கேறேன் குற்ற உணர்வோடு.
என் சத்தத்தில் சங்கீதமாய் கலந்தவள் நீ
ஆனால் உன் சங்கீதத்தையே சத்தமாக்கியவன்
இங்கிதம் இன்றி.
கறுப்பான என் ரத்ததில் சிவப்பாய் கலந்தவள் நீ
ஆனால் உன் சிவப்பான கற்பையே கறுப்பாக்கியவன் நான்.
என் நடத்தையை நாட்டியமாய் நடனமாடியவள் நீ
ஆனால் உன் நடனத்தை நகைத்து உன்னை
நடத்தை கெட்டவள் ஆக்கியவன் நான்.
உன் கோலத்தில் என்னை புள்ளியாய் கலந்தவள் நீ
ஆனால் நானோ உன் கோலத்தையே
அலங்கோலமாக்கியவன் உன் ஆடை கழைந்து.