
சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.
உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்
சிலைகள் சிலைகளாகவே.
தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.
நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய
அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,
உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .
விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்
இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது
இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின
உன்னுடன் என்னை
கண்டதால்.
ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்
உன் அப்பனை
கண்டவுடன்.