
பஞ்சபூதங்களில் ஒரு ரவுடியாய்
ராட்சத அலை எடுக்கப்படுமா?
ENCOUNTER
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
26.12.2004 விடியற்காலை இது
எத்தனையோ பேருக்கு விடியாத காலை.கதிரவன் வரவை கண்டிட காத்திருந்த கண்கள்,
காற்றுடன் அலையின்ரீங்காரம் ரசித்திருந்த காதுகள்,
இளங்காற்றை எதிர்த்து ஓடி இளைப்பாறியஇதயங்கள்,நண்டுகளை அலையுடன் துரத்தி விளையாடிய மழலைகள்,
இரவுநேர உணவுக்காக வலைவீசி கலமேறிய மீனவர்கள்,
கடலை தொட்டியாய்நினைத்து குளித்திடும் கடற்கரைவாசிகள்,
காதலை வாழவைக்க பலசமயம் மறைக்கஉதவிய படகுகள்,
எரிகிற கதிரவன் முன்னே எரியாத அடுப்போடு போராடும்தள்ளுவண்டிக்காரன்- என இவைகளோடு அன்றி
அன்று தான் அப்பாவுடன் புதிதாக வந்த அந்த குழந்தையும் கேட்டது மகிழ்வுடன்
இதுபோல விடியல் தினம் வேண்டுமென!!
மகிழ்ச்சிமுடியுமுன்னே மடித்து
அடித்துச்சென்றாயே
அலைகளை அனுப்பி. எங்களின் கண்ணீர் அலைகளோடு
இல்லையில்லை- எங்களின் கண்ணீரோடு ஒப்பாரி
வைக்கிறோம் வேண்டாம் இப்படி ஒரு
விடியல் என..
அதுமட்டுமல்ல இனி எங்களுக்கு கண்ணீரால்
வரும் அலை கூட
வேண்டாம்.