மூங்கில் அல்ல அது இசையின் முதுகுத்தண்டு
கைதி அல்ல. அவன் மனிதனின் மறுவாழ்வின் வடம்
தண்டினில் வலம் வந்த காற்று
வலுவூட்டும் வருந்திய மனத்தையும்.
தண்டனை முடிந்து வந்தவன் சுவாசம்
வலியுறுத்தும் வருந்தியவன் மனத்தையும்
பிஞ்சினில் வெட்டி குழலானது அழிந்திட அல்ல
மூங்கிலின் பெருமை சேர்த்திட
கைதியாகி வெளிவந்தது அழிந்திட அல்ல
மனித மனத்தின் பொறுமை காத்திட
துளைவலம் வந்த குழல் யாரையும் வருத்துவதில்லை
மனம் கசிந்திட.
சிறைவலம் வந்த இவனும் தவிர்த்திட மறப்பதில்லை
மற்றவன் கைதியாகிட
மூங்கில் குழல் ஆனபின்னே அதனை மூங்கீல்
என்பதில்லை யாரும்
கைதியான பின்னே அவனை மனிதன் என
அழைப்பதில்லை யாரும்
தினம்தினம் ஆயிரமாயிரமாய் ராகங்கள்
சுவாசமாக உட்ச்செல்லும் குழலினுள்
தினம்தினம் ஆயிரமாயிரமாய் அறிவுரைகள்
சுவாசமாக இல்லை சுட்டிகாட்டியபடி
புல்லாங்குழலையும் மனிதன்தான் இயக்குகின்றான்
பலரும் களித்திடவேண்டி
கைதியான மனிதனையும் மனிதன் தான் இழிக்கின்றான்
பலர் இளித்திட வேண்டி
குழல்கொண்டு கலையும் வளர்க்கலாம்
கொலையும் செய்யலாம்
இவனையும் கலைஞனாவும் ஆக்கலாம்
கொலையும் செய்யலாம்
குழலானபின்னே அதனை காண்பவர் யாரும் கவனித்து
சுவாசம் கொடுக்க மறப்பதில்லை.அறியாத போதிலும்
கைதியான பின்னே கண்ட யாவரும் அவனை பலித்து
பேசிடாதிருப்பதில்லை.அவனைப் பற்றி அறியாத போதும்
புல்லாங்குழல் போலவே கைதியும் அனைவரின் வாயிலும்
அங்கலாய்ந்தாலும் கைதியான இவனின் பயணமும்
குழல்போல மற்றோறை மகிழ்வித்து இருப்பது மட்டுமேயன்றி
மனிதனை கைதியாக்கிடாமல் இருப்பதுவே
No comments:
Post a Comment