"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்" என்ற
வரியினை தந்தவர் யாரென்றே
அறிய இயலாத
வயதிலே முதன் முதலில்,உன்னை கண்ட கணங்கள்
கண் எதிரே கனவாய்
காட்சி தருகுதடி.
அழகு என்ற சொல்லின் விளக்கம் விளங்காத வயதிலேயே
நீஎன்னுள் விதைத்துவிட்டாய்.நீ தான் அழகின்உருவம்
என்றகிற விதையை.இதோ அந்த
விதை இன்று
என்னுள் நினைவு என்னும் இலைகளை
உதிர்த்த இலையிதிர்கால மரமாய்.
ஓரளவு என்னை அறிந்த வயதில் நீயோ
என்னைவிட்டு
தொலைவில். அந்த வயதில் அழகு என்பதை ஆராய்ந்ததில்
உன்னுருவம்
ஓடிவந்து ஒளிர்ந்திட ,உன்னைத் தேடுவதே
இமைகளின் பணியானது.இமைகள் இரண்டும்
இணையவில்லை உறக்கத்திலும்.ஆம் கனவில்
உன் உருவம் வரும்என்பதால்.
அன்று முதல் தேட ஆரம்பித்தேன்
உன்னை.அன்று
தெரியவில்லை நான் தேடியது உன்னை அல்ல
துன்பத்தை என!
கல்வி கற்றிடும் பருவத்தில் உன் காலடித் தேடி
காம்பெளண்ட் கம்பிகளுக்கு
கம்பெனி கொடுத்து
கல்வியின் தரத்தினை இழந்த்தை தந்தை
சுட்டிக்காட்டிய
போதும் உணரவில்லை.
அப்பாவின் ஆசை கனவு நான் I.A.S ஆவது.அவரின்
ஆசை
கனவுஉடைந்து போனது நான்+2 வில் தோற்றபோது.
+2 வில் தோற்ற நான் காதலில்
ஜெயித்து, உன்னுடன்
+2 ஆனதால், ஆனந்தத்தில் I.A.S போல
அதிகாரம் பன்னினேன்
உன்னிடத்தில்.
அப்பா கண்டிப்பதை விட்டுவிட்டார்.நீயோ கண்டுகொள்ள
ஆரம்பித்தாய்.அப்பாவின்
கண்டிப்பு இழந்ததற்கே
உன் கண் அசைவு கிட்டியதால்
எதையும்
இழந்திட துணிந்தேன்.
"ஒன்றைஇழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்" என்ற
மொழிமட்டுமே பொன்மொழியானது.ஆனால், உன்
ஒருத்தியை பெற நான் இழந்தது
ஓராயிரத்துக்கும் மேல் என்று உன்னையும்,
இழந்தபின்பு தான் தெரிந்தது.
படியினில் பந்தாவாக தொங்கி பயணஞ்செய்த
நாட்களில் பார்த்து ரசித்த
நீ-படியில் நிற்காதே எனச்
சொல்லியதால் சட்டை கசங்கியபடிஎத்தனையோ முறை
நெருக்கடியில் நெருங்கி நின்றிருக்கிறேன்.
ஸ்டைல் என்ற பெயரில்
உன்கவனம் கவர எத்தனையோ
முறைசிகரெட்டை வைத்து சாகசம் செய்த வேளைகளில்
கீழே
விழுந்தசிகரெட் எடுத்து மறுபடி வாயில் வைக்க சிரித்தாய்.
பின்நாட்களில்சிகரெட்
பற்றி பேசினாலே பார்வையாலே எரித்தாய்.
பொங்கல் பண்டிகையின் போது அனிதாவின்
வீட்டிற்கு
விருந்தாளியாய் வந்த நீ நிதானம் இன்றி போதையில்
நடந்து வந்தவர்
செய்த கோமாளித்தனத்தை நீ ரசித்திட-
பயத்துடன் பாதி குடித்து வந்த எனக்கு
மற்றுமொரு
கும்மாங்குத்து இனிமேல் குடிக்கக் கூடாது என!!
இப்படி நீ
சொன்னதெல்லாம் யோசிக்காமல் நிறைவேற்றிய
நான் உன்னை மணந்திடும் வரம் கேட்க- நீயோ
உன்னை மறந்திடும் வரம்கேட்டாய்!!!
உனக்காக இழப்பதையே பலனாய் கொண்ட நான்
முதன்முதலாய் காரணம் கேட்டேன்.அழகாக சொல்லி
அழச் செய்தாய் என் மனதினை.
நீ ஒரு I.A.S மாப்பிள்ளையை மணந்திட உன் அப்பா
ஆசைபடுவதாய்.
இன்றும்
நினைக்கிறேன்
ஒருவேளை
நானும் பேருந்தில் தொங்காமல்,கீழே விழுந்த
சிகரெட்
குடிக்காமல்,மது பழகாமல்,
அப்பாவின் ஆசைப்படி அறிவாய் படித்திருந்தால்
உன்னோடு சேர்த்து உன் அப்பாவும் என்மேல்
ஆசைப்பட்டு மாப்பிள்ளை ஆக்கி
இருப்பாரோ!!!
என இப்போதும் நினைக்கிறேனடி.
ஊருக்கும் உலகுக்கும்
வேண்டுமானால் நான் I.A.S இல்லாமல்இருக்கலாம்.உன்
Iதயத்தை
Aட்சி Sசய்தவன்
ஆதலால் நானும் I.A.S தானடி.
இதனால் உன் நினைவுகள்
என்றும் ரணங்கள் தானடி
எனக்கு .