
ஒரு சொல்லில் என்னை சுட்டு,
மறுவாக்கியத்தில் என்னை வாட்டி,
முற்றுப்புள்ளியில் என்னை முழுதாய்
கொளுத்தியவள் நீ.
நீர் ஊற்றியும் அணையவில்லை.
இறுக்கி அணைக்கவேண்டிய,
நீ அடுப்பு ஊதியதால்.
விடுமுறை என எண்ணி எல்லோரும்
போலவே ஏகமாய் குளித்து கும்மாளம் அடித்ததில்,
அப்பாவிடம் அடி விழுந்த்தது வழக்கம் போலவே.
அக்கம்பக்கத்தினர் கேலி செய்தபோதும்,
அழாத நான்- நீ மறுநாள் பள்ளியில் மற்றவ்ர்
சொல்லக்கேட்டு வலித்ததா என கேட்டாயே
அந்த சொல்லில் தானடி என் கண்களும்
தாரை வார்த்தது கண்ணீரை..
கவிதையின் தலைப்புக்கே வெட்கம் வந்து,
தரை தொடும் உன் துப்பட்டா தலைப்பு-
சொல்லும் வெட்கத்தின் விதியை.
கண்கள் கண்டதன் மீதியை
என் கவிதைகள் சொல்லும்.
உன்னால் கவிதையின் இலக்கணம் தலைகீழானது.
ஆம் கவிதையில் பொய்கள் வியக்கவைக்கும்.
மெய்யோ மெய் சிலிர்க்கவைக்கும்.
நீ மெய் தான். ஆனால் சிலிர்க்க
வைக்கவில்லை என்னை.
வியக்கவைத்தாய் பொய்யாய் கோவம்கொண்டு.
மழை பெய்யும் வேளைகளில் புதுக்குடை
பிடித்தும்கூட என் மனது நனைகின்றது
உன் நினைவுகளால்.
உன் துப்பட்டாவால் நீ குடை பிடிக்கும்போது
மட்டும் என் அழுக்கு மனசும் கூட
ஆடை போர்த்திக்கொண்டு ஆண்டவனை
பிரார்த்திக்கிறது அடைமழைவேண்டி.
ஒரு பெளர்ணமி நிலவுக்குள்
32 நட்சத்திரங்கள் நீ சிரிக்கும்போது.
உன் கூந்தல் நீளம் தேடிட தலை கோதினேன்.
பின்னிக்கொண்டது விரல்கள் மட்டுமல்ல
நமது முகங்களும் தான்.
வெட்கத்தால் கன்னங்கள் சிவந்ததா?
இல்லை கோபத்தால் கண்கள் சிவந்ததா?
தெரியாது.ஆனால் சிகரெட் பிடித்து
கருத்த என் உதடுகள் சிகப்பானது
உன் உதட்டுச் சாயத்தால்.
நீ என் மார்பில் தலைசாய்ந்த தருணம்
என் இதயம் உன் பெயர் சொல்லி
அழைப்பதாய் சொன்ன,உனக்குத் தெரியாத
என் நாக்கு பேச மறந்து போனது
உன் இறுக்கத்தினால் என்பது.
நான் ஊமையானலும் என் இதயம்
உன் பெயர் சொல்லித் துடிக்கும்
என் தூக்கத்திலும்.
என் மீசைமுடி உன் முகத்தில் காயம்
செய்தால் கவலை வேண்டாமடி
என் இதழ்களால் மருந்து தடவி
உன் வலி போக்குவேன். நீ தான்
என் மீசை முறுக்கை கூராக்கினாய்,
என் இதழ்கள் உன் பெயர் சொல்லி
முனுமுனுப்பதே மருந்து தடவிடத்தான்
என் மீசை முறுக்கை நீ கூட்டுவதே
காயம் செய்திடத்தான்.
நீ மட்டுமல்ல உன் மேனி மேல்
விழுந்துகிடப்பாதால் துப்பட்டாவும்
கவிதையானது- நானும் கூட கவிஞன் ஆனேன்.