
பிடிக்கலை! பிடிக்கலை!! எனக்கு
பிடித்தவளின்
குடும்பத்துக்கு என்னை பிடிக்கலை, பிடிக்கவே
இல்லை.
துடிக்கலை! துடிக்கலை!! கண் அசைத்தவள்
கைவிட்டு
சென்றதும் துடிக்கலை இதயம் துடிக்கவே
இல்லை.அடங்கலை! அடங்கலை!! அவள் நினைவென்னும்
துடிப்பு வாழ்க்கையில் அடங்கவேயில்லை.முடியலை! முடியலை!! அவள்
நினைவுதனை
மறந்திட
முடியலை.முடியவேயில்லை.வழியில்லை! வழியில்லை!! வந்துவிடு
என்னோடு என
சொல்வதற்கு ஒரு வழியும்
வாய்க்கவேயில்லைதுணிவில்லை த்ட்டிச்சென்றவனை எட்டி
மிதித்து
தாலி கட்டி அணைத்திட துணிவில்லை.
துணிவுசொல்ல அவளும் உடன்
இல்லை.பிழையில்லை! பிழையில்லை!! அது
பிழையேயில்லை,
அவளை கொன்றால் அது கொலையும் இல்லை.மனமில்லை மனமில்லை மணமேடையை
பினமேடையாய்
மாற்றி இணைந்திறந்திட மனமில்லை.புரியலை! புரியலை!! என்ன செய்வது என
புரியவே இல்லை,
தெரியலை! தெரியலை!! எவருக்குமே விடை
தெரியவேயில்லை,
விடையில்லை! விடையில்லை!! காதல் தோல்விக்கு
விடையேயில்லை.விடியலை! விடியலை!! விஞ்ஞானம் வளர்ந்த
பின்னும் விடியலை.
விருப்புண்ட மனங்கள் இணைந்து இன்புற்றிட
இதுவரை ஒரு
விடியல் விடியவே இல்லை.
லைலா மஜ்னு தொட்டு நம் காதல்
வரை.