மலர்கள் மலர்ந்த வேளையில் தேனைத்
திருடிச் செல்லும் திருட்டுக்கூட்டம்
என மலர்கள் புகாரிட,
என மலர்கள் புகாரிட,
சேகரித்ததை சிரமம்பாராமல்
சீசாவிலைடைத்து சில்லறை பார்க்கும் அவனை
கயவன் என தேனீ புகாரிட,
தன்னை ஏழையாய் ஏன் ப்டைத்தான் என
ஏழை ஆன்டவனை புகாரிட
எப்படி அழைப்பது சாட்சிக் கூண்டிற்கு
சம்மந்தமானவைகளை
எந்த காலத்து நாட்டாமை எழுதிய தீர்ப்போ!
மலர்களை பூஜைக்கு எனவும்,
தேனியை ஊழியனாகவும்,
அவனுக்கு தொழிலாகவும் தீர்ப்பு ஆனதால் வந்ததோ
பூஜையும் பூ அலங்காரமும்.
No comments:
Post a Comment