என்னைச் சுற்றி ஆயிரம வண்ணத்துப் பூச்சிகள்,
என்னை சிறை எடுத்திட
.ஆமாம்!!
உன் இதழில் நான் தேன் எடுத்ததால்.
மலர்களுக்கு கூட நாம்
குற்றவாளி ஆனோம்.
ஆமாம்- மகரந்தச் சேர்க்கையின் மகத்துவம்
குறைகின்றதாம்
நாம் கூடும்போது.
காற்றுக்கு கூட நாம் இருவரும் பகைவர்களானோம்.
ஆம் நம்
நெருக்கத்தில் காற்றின் பயணம்
இடர்படுகிறதாம் இறுக்கியணைத்த வேளைகளில்.
சுடும் தீக்கும் கூட திருடர்களானோம். ஆம்-நம்
காமச் சூட்டின் அனல்
நாம் தீயிடம் திருடியதாம்.
அனைத்தால் அணைந்து போகும் அந்த
தீ அறியுமா?
அணைத்தால் கூடிப்போகும்
நம் சூட்டின் ரகசியம்.
நீருக்கும் கூட தீராத
கோபம் . ஆமாம்-
நீரும் புகுந்திடாத இடங்களில் நான்
அத்து மீறி நுழைந்து
ஆட்டம் போடுவதால்.
நான் என்ன செய்ய!!
இன்று சிறை எடுக்க வரும்
வண்ணத்துப்பூச்சிகள்,
அன்று ஆள் அரவம் கேட்டு நமக்காய்
காவல் காத்தது ஏன்?
இன்று குறை சொல்லும் மலர்கள் அன்று
உனக்காய் பறித்தபோது
சிரித்திருந்தனவே.
சிரித்த மலர்கள் சினம் கொள்வதில் நியாயம் என்ன?
காற்று,நாம் அன்று தள்ளித் தள்ளி அமர்ந்திருந்த
வேளைகளில் உன்
துப்பட்டா பறந்து வந்து
என் முகம் மூடியிருக்கக் கூடாது.
உன்னை
தொடர்ந்ததால் விழுந்த தீச் சூட்டிற்கு
வலி வழிமாறி போனதே உன் இதழ் அணைப்பில்.
இன்று கோபம் கொள்ளும் நீர் அன்று காவிரியில்
குளிக்கயில் நீர் அள்ளி
இறைத்து பேசிக் கொண்டநேரம்
நெருங்கி இருக்கக் கூடாது உன் மார்பினை.
இப்படி எல்லாமே எதிர்க்கின்றன
தீ, நீர்ப்பரப்பினைப் போல- உன் அப்பனைப்
போல
ஆனால் நான் கேட்கிறேன் இதேப் பிறப்பினை அடுத்தப் பிறப்பிலும்.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Monday, June 18, 2007
காதலின் தூது காமத்தில் கேது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment