
விரும்பி வாங்கிய விளையாட்டுப் பொருளை
தம்பி விளையாடிட கேட்டும் விட்டுக் கொடுத்ததில்லை
இதோ இன்றும் என்னிடம் பத்திரமாக.
அண்ணன் விளையாடிட போகாதே என விரட்டியதுண்டு
விட்டதில்லை நான் விளையாட்டினை.
இதோ இன்றும்நான் விளையாட்டுப் பிள்ளை.
அம்மாவும் ஏசியதுண்டு எல்லோரிடமும் பழகாதேஎன
பழகியவர்களில் பலர் கயவர்களாய். இதோ
இன்று பக்குவப்பட்டவனாக பலரின் முன்னே.
அப்பாவும் அடித்ததுண்டு புகை பிடித்ததற்கு
விட்டுக்கொடுத்ததில்லை புகைப் பிடிப்பதை.
மாறாக அப்பா தான் விட்டுக்கொடுத்தார் அடிப்பதை.
கும்மாளம் போட குடித்தவேளைகளில் எல்லாம்
குருவும் கண்டித்தார்.விட்டதில்லை குடியை.
குரு விட்டுவிட்டார் கண்டிப்பதை.
அறிந்த அனைவரும் அடித்து சொல்லியும்
கெஞ்சிக்கேட்டும் விட்டுக்கொடுக்காத நான்.
உன்ஒருத்திக்கு பிடிக்காததாலே விட்டேனடி
குடி,புகை தவிர பெண்களையும்.
ஆனந்தமாய் இருந்ததுண்டு இலட்சியம் அடைந்ததாய்
நினைத்ததுண்டு உன்னை நெருங்கியதாய்.
பின்பு தான் உணர்ந்தேன் நெருங்கியது உன்னை அல்ல
தோல்வியை என்று.ஆம் உனக்காக நம் காதலுக்காக
என் குணம் மாற்றிக் கொண்டேன் நீயோ மனம்
கொண்டு மறந்திடச் சொல்லி மன்னிப்பு கேட்கிறாய்.
நீ சொல்லி நான் செய்யாத ஒன்று ஏது உலகில்!
மறந்திட எண்ணி மறுபடி மதுவும் புகையும்
எடுத்துவிட்டேன்,ஆனாலும் கூட குடிக்க முடியவில்லையடி
என்ன செய்ய!!என்னுடைய இதயமும் என்னிடம் இல்லை
இருக்கும் உன் இதயமும் கூட என்சொல்
கேட்பதில்லை.
நீ சொல்லிய வார்த்தைகள் மட்டும் ஓயாமல்
கேட்டுக்கொன்டே