
உன்னை காணாத சோகம் எனக்கு மட்டுமல்ல
தூசியுடன் நாம் அமர்ந்திருந்த இருக்கை.

கலங்கரைவிளக்கம் திசை அறிந்திடத்தான்
எனபடித்த படிப்பு பொய்யானது.
என்வழி மறந்துஉன்னைத் தொடர்ந்ததால்.
சூரியன் உதிக்கும் திசை அல்ல கிழக்கு.
நீ வரும் திசையில் மட்டுமே நான் விழிப்பதால்

உன் பிரிவினில் நிலவின் வருகை
ஏனோ நம் கண்களில் கண்ணீரின் வருகை
சனி போனா தனியா போகாது என்பது
எவ்வளவு உண்மை .நீ பள்ளிக்கு செல்லும்போது
நானும் வருவது விடுமுறை நாளிலும் .
எத்தனை முறை எட்டிப்பார்த்திருப்போம்
முதலில் வெளிவருவோரைப் போல.
எல்லோரும் எழுந்து சென்றபின்னும்
புத்தகம் அடுக்கி காத்திருப்பாயே !!
நான் உன் அறையை நெருங்கி வரும் வரை.
தோழிகளுடன் நீ அமர்ந்து உணவருந்திய போதும்,
கைகழுவ வேகமாய் வருவாயே,
நவாமரத்தினடியில் அமர்ந்திருக்கும்
என்னைத் தாண்டி பாதி வெட்கத்தோடு.
நீ அலம்பிய நீர் உட்க்கொண்டு வளராமல்,
நீ கொண்ட வெட்கம் உட்கொண்டு வளர்ந்ததால்
தான் பழம் உண்ட நாவும் சிவந்திடுதோ
என்று நாக்கினை காட்டிய போது
என் நா கட்டியவள்,
"நாக்கு ரொம்ப நீளூதே" என்று
என்னைத் தீண்டும் தென்றலை அறியாத

மரமண்டையன் நான்.ஆனால் நான்
இல்லாத இடத்தில் நீ என்னைத்
தேடுவதை அறிந்த விஞ்ஞானி .
நானும் சூரியன் போலவே சந்தோசமாய்
கண்விழிக்கிறேன் உன்னை கண்டுவிடவே.
கலங்கியபடியே இல்லம் செல்கிறேன்
கதிரவனைப் போலவே.
சாகப்போன என்னை,தடுத்து
'வாழ்க்கை வாழ்வதற்கே'என வலியுறுத்திய
நீ வந்த வழியே சென்று விட்டாய்.
நான் மட்டும் இறக்கப் பிடிக்காமல்,
உன் நினைவோடும் உன் வார்த்தையோடும்.
கருப்பு நிறத்தை கொளரவித்தவள் நீ.
என்னை காதலித்து அல்ல-என் நிழலும்
என்னைப் போல அழகாயிருக்கு என சொல்லி.