
மலர்கள் வரம் கேட்கின்றன-மலரும் ஓசையை
உலகுக்கு உணர்த்திட.
மரங்கள் வரம் கேட்கின்றன-தன்னை தீண்டி செல்லும்
காற்றினை சிறைப் பிடித்திட.
புற்கள் வரம் கேட்கின்றன-தண்டுகொண்டு தாவரங்கள்
போல தலை நிமிர்ந்திட.
பூனைகள் வரம் கேட்கின்றன-புலியை போல பாய்ந்து
வேட்டையாடிட வேண்டி.
பெட்டைகள் வரமோ!பொறித்த குஞ்சினை புசிக்கும்
பருந்தை பறந்து பழிவாங்கிட.
குருவிகள் வரம் கேட்கின்றன-குயில்கள் போல கூவிடவேண்டி.
மனிதனும் வரம் கேட்கின்றான்.கண்ணில் கண்டதை
எல்லாம் ஆண்டிட வேண்டி.
பூக்களோ முதல்நாளிலேயே மடிந்திடுது,
மரங்களும் முடியாமலையே தரைசாய்கிறது,
பெட்டையும் தோல்வியாய் தரைவருது தனியே,
குருவியும் குயிலாய் கூவி இறையாகுது வேடனுக்கு,
புற்களும் முயன்றும் முடியாமல் தரை சாயுது,
பூனையோ பன்றியின் உறுமலுக்கே ஓடுது,
ஆனால்மனிதனே உனக்கு ஏன் இறப்பு?
விலங்கையும் கூண்டில் வைக்கிறாய்,
கப்பலையும் மிதக்க வைக்கிறாய்,
விமானத்தை பறக்க வைக்கிறாய்,அவ்வளவு ஏன்?
உடல்உறவு கொள்ளாமலேயே இனவிருத்தியும் செய்கிறாய்.
இருந்தாலும் நீ இறப்பது ஏன்? இறைவன் இருப்பதாலா?
இல்லைநீ இறைவனை இம்சிப்பதாலா?
கேள்வியோடு,
காவியன்.
No comments:
Post a Comment