
அண்டைவீட்டுக்காரன் அனுபவித்த ஆடம்பரம் கண்டு
ஆறுவயது முதலே அமெரிக்கா மோகம்.மோகம் தொடர்ந்திட
தொடர்ந்திட்ட படிப்பால் உறக்கம் இழந்து-பருவத்தில் பட்டம்
பெற்றும் பருவசுகம் இழந்தும்-பணியில்அமர்ந்தும்-அமெரிக்கா
பறந்தும் இழப்புகள் மட்டும் தொடர்ந்தபடி.
கோழிகூவிடாத விடியல்,சாணம் தெளித்திடும் ஓசையற்ற காலை,
கோலங்கள் இல்லா வாசல்கள்,பக்தர்கள் இல்லா கோயில்கள்,
சுப்ரபாதம் கேட்டிராத பூசையறை,இறைச்சல் இல்லாத சாலைகள்
புகைகக்கிடாத ஊர்திகள்,பச்சைகொடி காட்டி கதவு சாத்தும் சாமான்யன்
இல்லாத ரயில்நிலையங்கள் என சூரியன் வந்ததால் மட்டுமே விடியல்
கண்டதாய் விறையும் இயந்திரத்தனமான இந்தியமனிதர்களுடன்
இதோ இன்று நானும்.
படியினில் தொற்றி-இடிசல்,நெரிசல்,திருட்டு இல்லாத பேருந்து பயணம்,
இரவுநேர காவலனின் கைத்தடி சத்தம் கேட்டிராத காவல்,
அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டான் சங்கதி அறியா அவலம்,
காதலியில்லாகடற்கறை வாசம்,
நயாகராவிலும் குடும்பம் இல்லாத கும்மாளம்,
குடியரசு,சுதந்திர தினத்திலும் கொடி பறந்து பாறாத ஏக்கம்,
அம்மா,அப்பாக்கள் தினங்கள் வந்தாலும் வாழ்த்துக்கள் மட்டுமே-அதுவும்அரவணைப்பு இல்லாத தொலைபேசியுடன்,
காதலி இருந்தும்-கட்டி தழுவாதகைகள்,மின்னஞ்சலில் இதழ்பதிப்பதுடன் பிறந்தநாளிலும் பிரிந்தே இருப்பது.
வெடியோசை கேட்டிடாத தீபாவளி திருநாள்,
கரும்பு சுவைத்திடாத பொங்கல் பண்டிகை,
மாடு உண்ண கண்டிடாது மறையும் மாட்டுப் பொங்கல்,
காளையடக்கும் காளையர் காணாது கழியும் காணும்பொங்கல்,
திருவிழா என நாள் குறித்து நகரும்தேர் காணாத கவலை,
அந்நாளில் அலகு குத்தி அருள்வாக்கு சொல்லும்குரல் கேளாத கொடுமை,
கொடுத்து வைத்த முத்தங்களை கொடுக்காமலே ஓடிப்போன அடுத்தவீட்டுஅத்தைப்பெண் சுவாரஸ்யம்,
சுதிசுருகாமல் ஆசையாய் பாக்கு கேட்கும்பக்கத்துவீட்டு பாட்டியின் மரணம், என இழப்புகள் இதயத்தை தொடர்ந்துஇம்சித்திட,உதறித்தள்ளி தாய்நாடு திரும்பிட நினைக்கையிலே உணர்கிறேன்.
மனதையும் இழந்ததை பணத்தினால். இருந்தும்இழப்புகள் மட்டும் பணத்தைப்போல பெருகி கொண்டே,
இன்பங்கள் மட்டும் மனத்தைப்போல சுருங்கிகொண்டே.
அன்புடன்,
காவியன்
No comments:
Post a Comment