
பிறந்தது முதலே சுமைகள் தான் பெண்ணே-உனக்கு
ச்ச்ச்சீ பெண் எனும் வெறுப்பு சுமையாய் பிறந்ததுமே,
பொறுப்பாய் படித்தாலும் உனக்கெதுக்கு படிப்பு
என்னுமொரு தடை சுமையாய் உன்னுள்.
தடைப்பட்ட படிப்பால் வீட்டு வேலைகள்
என்னுமொரு, கடமைகள் சுமையாய் உன்னுள்.
தருணம் தாண்டி தாவணிக்கு மாறிட மன்மதர்களிடம்
இருந்து மானம் காத்துக்கொள்ளும் சுமை உன்னுள்,
சுமை தாண்டி மனம் பறித்தவன் மனமும் சேர்ந்து
சுமையாய் உன்னுள்- இருந்திட,போதாதென பின்தொடர்ந்தவன்
எதிவீட்டில் அமர்ந்திருக்க, அவனைவிட்டு இவளை ஏசும்
எதிரெதிர் வீட்டினர் சுமையும்போதாதென, இவளையே
சுமையாய் எண்ணி யாருக்கோகட்டி கொடுத்திட
அங்கே மாமியார் என்னுமொரு பெரிய்ய்ய்ய சுமை,
பகல் பாரம் முடிந்து இரவில் படுக்கை சென்றிட அங்கே
தாலிகட்டிய அவனின் சுமை.அவன் சுமை தினம் தாங்கியதிலே
இன்னொரு உயிர்ச்சுமை,என சுமை தொடர்ந்த மாதம் பத்தில்
பிறந்தபெண் குழந்தை கண்டதும் இவள் சுமந்த சுமைகள்
ஒவ்வொன்றாய் இறக்கி வைக்கப்படுவது என்ன விஞ்ஞான வளர்ச்சியோ?பெண்ணுக்கு பெண்ணே சுமையாய் சுமைகளை சுமக்கச் செய்யும்கிராமங்கள் என்று காணாமல் போகுமோ!!!?இந்திய வரைபடத்தில் இருந்து.?
வருத்ததோடு,
காவியன்.
No comments:
Post a Comment