சின்னஞ்சிறு வயது முதலே நீ தானே என்ன்னுடைய பாதி.
அம்மா ஆசையாய்
தந்த அதிரசம்,
அம்மாவுக்காக பாதி
தின்று மீதிபாதி உனக்கு தந்தேன்.ஆனால்
மீதிப்பாதியில்
பாதி எனக்கு தந்து தலைகோதினாய்.நானோ
எச்சில் கசக்குதோ
என்றேன் நக்கலாய்.கோபமாய் சிரிப்பாய்.
நீ சாப்பிடாமல் முழுதாய் கொன்டுவந்ததை
முழுதாய் தின்றுவிட்டு
மண்டையில் கொட்டினேன்,ஏன்!?
இன்னொன்று
கொண்டுவரவில்லை என!பணம்
பள்ளியில் அனைவரும் சுற்றுலா செல்லதர மறுத்த
தந்தையை உன்னிடம் திட்டிய கணங்களில்
நீ தான் பணம் கொடுத்தாய் கட்டிடச்
சொல்லி.
அப்பா
ஏது பணம் எனக்கேட்டால் சொல்லிட, காரணமும் கற்பித்தாய்சிறுசேமிப்பை
சுட்டிக்காட்டி.
பேருந்தில் என் அருகில் இருந்த காலி இடத்தை
கண்கொட்ட பார்த்திருந்தாய். உன் அருகில் இடம்
காலியாயிருக்க வேகமாய்
வந்தமர்ந்திட,அன்று
அகிலாண்டம் டீச்சர் அடித்த பிரம்படியால் எத்தனை
நாட்கள்உன்பிஞ்சு கைகளால்
வருடிக் கொடுத்திருப்பாய்.
நீ மகளிர்
பள்ளிக்கு சென்றிட என்னுள் ஒரே சந்தோசம்.
உன் பேர் சொல்லி தினம் தினம் பல
பெண்களை
ஓரக்கண்ணால் கற்பழித்திருக்கிறேன்.அதை
உன்னிடம் சொல்லியபோதெல்லாம்
முதுகில்
வேகமாய் தட்டினாய்.நானோ நீ செல்லமாய்
தட்டி ரசிப்பதாய்
நினைத்திருந்தேன்.
கவர்ச்சி என புகைப்பிடித்திட கன்னத்தில் அறைந்து
பிடுங்கி எறிந்தாய் தரையில்.கோபத்தில் திருப்பி
அடித்தேன் அப்போதும்
சிரித்தாய்.மன்னிப்பு கேட்டிட,குடிக்கமாட்டேன் என உறுதி
கூறியதால் உத்தரவு
தந்தாய்.
வேலை கிடைத்து பார்ட்டி என்ற பெயரில் மது அருந்திட,
நீ அறிந்து வந்து கண்கள் கலங்கி சிவந்திருக்க
குடிக்காதே என்றாய்.ஆனால்நானோ வழக்கம் போல
நீ என்ன சரக்கு அடிச்சே! உன்கண்கள்
இப்படி சிவந்திருக்கு என்றேன்.
உலர்ந்த புன்னகை உதிர்த்து குடிக்காதே என்றாய்.
அப்போதும் கூட ஓ!! நீ அவ்வளவு அனுபவசாலி ஆயிட்டியோன்னு அதட்டலோடு
ம் ம்ம் எவ்வளவு குடிக்கிறாய்!
எவ்வளவு காலமாய் குடிக்கிறாய்?என்றேன்.
நீ கோபப் பார்வை வீசிட சுருண்ட என்
முகம் கண்டு சரி எப்போதாவது ஒருமுறை குடி என அனுமதி தந்தாய்.
அப்படியான
ஒருநாளில் மதுவுடன் மாதுவும் இணைந்திட சந்தோசத்தின் உச்சியில் ஊரான்
சொல்லும்முன் ஓடிவந்து உன்னிடம் தான் சொன்னேன் உற்சாகத்தோடு.
உதறித்தள்ளி தலையை கவிழ்ந்து கொணடு
"பாதுகாப்போடு தானே" என்றாய் குரல்
குழைந்தபடி.ஆனால்
நானோ பின்மன்டையில்
தட்டி வெட்கத்தைப் பாரு புள்ளைக்கு என்றேன்.
அன்றைக்கு தெரியவில்லை இந்த மரமண்டைக்கு
நீ அழுதுகொண்டிருக்கிறாய் என்று.
வேலை காரணமாய் வெளிநாடு சென்றிட,
விட்ட அனைத்தும் தொடர்ந்திட உன்னிடம் ஓடி வரும்
நாளுக்காய் காத்திருந்து, ஓடி வந்தேன்
ஒருநாள் உன் வீட்டுக்கு மூச்சிரைக்க!
எப்படி இருக்கிறாய் என்றேன்?பதில் சொல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்?
என்றாய். நல்லா இருக்கேன்.
உன்கிட்ட நிறைய சொல்லனும் என்றேன். ஆனால்
நீயோ என்னிடம் ஒன்னே ஒன்னு சொல்லனும் என்றாய்.
முதன்முதலாய் உன்னை முதலில் சொல்ல
சொல்லி காத்திருந்தேன்.
மெளனமே காத்தாய்.நான் உன்னை உலுக்கி சீண்டிட
உன் அறைப்பக்கம் வந்த உன் தம்பிதான் சொன்னான் .மாப்பிள்ளை இன்னும் பத்து
நிமிடத்தில் வர இருப்பதாய்.
ஆனந்தத்தோடுதான் கைகுழுக்கினேன்
"வாழ்த்துக்கள்" என்று.
சரி நீ சொல்லு எவ்வளவோ சொல்லணும்னு
சொன்னியே!
இப்போ சொல்லுறியா இல்ல
சாயங்காலம் சொல்லுறியா என்றாய் ஏக்கத்தோடு.எவ்வளவோ சொல்ல வந்த எனக்கு
எதுவுமே சொல்ல வராமல் வேகமாய் வீடுதிரும்பியதும் அழுகைதான் வந்தது
அடக்கமுடியாத அளவுக்கு ஆறாக.
ஏன் அழுகிறேன் என யோசித்தபோது தான்
உணர்ந்தேன்,நீ இப்படிஎத்தனை முறை அழுதிருப்பாய் என்று.போதும் . இனியும்
நீ, என்னால் அழுதிடவேண்டாம் இன்னொருமுறை
.அதனால் தான் கண்ணீர் விட்டு
கதறியதை கூட காகிதத்தில்கல்லறையாக்குகிறேன்
காத(க)ல்மனதோடு.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Wednesday, November 29, 2006
கா(கல்)தல் மனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment