வேண்டுமடி இன்னொரு பிறப்பு எனக்கு..உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட அல்ல
உன் வயிற்றினில் கருவாய் தரித்திட. ஆமாம்
நடைபயிலையிலே கைவிட்டு நடக்க சொன்னாள் தாய். ஆனால்
நீயோ நடைபாதையிலே கைகோர்த்து நடக்க கற்றுத்தந்தாய்.
நா பேச எழாத போதும் அதிகம் பேச செய்தாள் தாய் ஆனால்
நீயோ நா துடிதுடித்தும் அதிகம் பேசாதிருக்க கற்றுத் தந்தாய்.
கிறுக்கிய போதெல்லாம் கிறுக்காதே என்றாள் தாய் ஆனால் நீயோ
கிறுக்கிய போதெல்லாம் கசக்காதே என கவிதை கற்றுத் தந்தாய்
காத்திருந்து கண்ஏங்கிய போதெல்லாம் காலத்தை குறை
சொன்னாள் தாய் நீ காத்திருந்த கணங்களின் வலிமை கற்றுத் தந்தாய்.
பள்ளியில் பலருடனும் பழகிட வேண்டாம் அவன் நட்பு என்றாள் தாய்
நீயோ பார்ப்பவருடன் எல்லாம் பழகச் செய்து நட்பினை கற்றுத்தந்தாய்
நான் மெதுவாக பேசிட சத்தமாய் பேசு என சத்தமிட்டாள் தாய்.ஆனால்
நீயோ பேசாமலே பதில் சொல்லிட மெளனமொழி கற்றுத்தந்தாய்
பழகியவன் பழித்திட கோபம் கொண்டதில் பெருமைகொண்டாள் தாய்
ஆனால் நீயோ கோபம் கொன்று பொறுமை கற்றுத்தந்தாய்
அழகான ஆடைகளாய் அணிந்திட செய்தாள் தாய்.ஆனால் நீயோ
நான் அணிந்த அழுக்காடையும் அழகாக்கித் தந்தாய்
தனிமையில் தாமரை ரசித்ததையும் மறந்து உறவுடன்
உலாவச் செய்தாள்ஆனால் நீயோ
'கலவரம் கார்கிலில் மட்டுமா! காதலர்களிடமும் தான்
அசைவுகள் கண்ட போதெல்லாம்' என கவிதை தந்தாய். இப்படி
எத்தனையோ கைக்கெட்டாத கவிதைகளாகி விட்டன உன்னுடன் கைகோர்க்கும் வரையில் அதனால் காதலியே!
வேண்டுமடி இன்னொரு பிறப்பு உன்மடியினில். இழந்த என் இறந்த காலத்தை இன்றுபோல கவிதையாக்கி களித்திட.
No comments:
Post a Comment