Search This Blog

Saturday, September 09, 2006

திருமண அட்சதை.


கண்ணாடி பார்த்தேன்-நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
உணவு உண்ண அமர்ந்தேன்- நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
குளியலுக்கு சென்றேன்-நீ தான் நின்றாய்.ரசித்தேன்
தலை கோதினேன்-நீ தான் வருடினாய்.ரசித்தேன்
தாலிகட்ட சென்றேன் நீ தான் நின்றாய்-
ரசிக்கவில்லை மாறாக மரித்தேனடி.ஆம் கையில் அட்சதையோடும்-ஐந்து வயது குழந்தையோடும் நீ.

நீயும்-நானும்


காலையில் என்னை கண்ட கதிரவன்
கேட்டது,ஏன் சேவல் கூவவில்லை?என அல்ல.எங்கே நிலா என்று.
காவேரியில் நீராட சென்றேன். காவேரி கேட்டது, எங்கே எனக்குவரி?
என அல்ல.எங்கே என் தங்கை கங்கை என்று.
பள்ளியில் ஆசிரியர் கேட்டார்,பாடம் படித்தாயா? என அல்ல.
எங்கே களஞ்சியம் என்று.
கோயிலில் குருக்கள் கேட்டார்,எங்கே தட்சனை? என அல்ல
எங்கே மகாலட்சுமி என்று.
ஐஸ்கிரீம் கடைகாரன் கேட்டான்,என்ன வேண்டும்? என அல்ல
எங்கே வெண்ணிலா என்று.
கடற்கறையில் சுண்டல் விற்பவனும் கேட்டான்,சுண்டல் வேணுமா?
என அல்ல.எங்கே கடற்கன்னி என்று.
உணவுவிடுதியில் பரிமாளனும் கேட்டான்,என்ன சாப்பிடுகிறாய் என அல்ல.எங்கே அன்னலட்சுமி என்று.
கல்லூரிக்கு சென்றேன்,கண்டவனும் கேட்டான்.எங்கே வேலைசெய்கிறாய்?என அல்ல.எங்கே கண்ணகி என்று.(நீ கற்புக்கரசியாச்சே)
மரத்தடியில் அமர்ந்தாலும் உதிரும் இலைகளும் கேட்கின்றன,எப்படி இருக்கிறாய்? என அல்ல.எங்கே தென்றல் என்று.
இப்படி நான்எங்கு சென்றாலும் உன்பெயர் சொல்ல
எத்தனையோ உண்டு.என் தாடியோடு ஜோடியாய்.
எனக்கு தெரியும் ப்ரியா என நீ கொண்டபெயரால் தான்
பிரியாமல் பிரியமாய் இருக்கிறாய் பிரிவினையிலும்.ஆனால்
உனக்கு உண்டா? என் நினைவு ஒரு காவியமாய் இல்லையானாலும் ஒரு ஹைக்கூ கவிதை போலாவது!!!

உன் நினைவுகளோடு,
காவியன்.

Thursday, September 07, 2006

சுமைதாங்கியோ? பெண்ணிணம்


பிறந்தது முதலே சுமைகள் தான் பெண்ணே-உனக்கு
ச்ச்ச்சீ பெண் எனும் வெறுப்பு சுமையாய் பிறந்ததுமே,
பொறுப்பாய் படித்தாலும் உனக்கெதுக்கு படிப்பு
என்னுமொரு தடை சுமையாய் உன்னுள்.
தடைப்பட்ட படிப்பால் வீட்டு வேலைகள்
என்னுமொரு, கடமைகள் சுமையாய் உன்னுள்.
தருணம் தாண்டி தாவணிக்கு மாறிட மன்மதர்களிடம்
இருந்து மானம் காத்துக்கொள்ளும் சுமை உன்னுள்,
சுமை தாண்டி மனம் பறித்தவன் மனமும் சேர்ந்து
சுமையாய் உன்னுள்- இருந்திட,போதாதென பின்தொடர்ந்தவன்
எதிவீட்டில் அமர்ந்திருக்க, அவனைவிட்டு இவளை ஏசும்
எதிரெதிர் வீட்டினர் சுமையும்போதாதென, இவளையே
சுமையாய் எண்ணி யாருக்கோகட்டி கொடுத்திட
அங்கே மாமியார் என்னுமொரு பெரிய்ய்ய்ய சுமை,
பகல் பாரம் முடிந்து இரவில் படுக்கை சென்றிட அங்கே
தாலிகட்டிய அவனின் சுமை.அவன் சுமை தினம் தாங்கியதிலே
இன்னொரு உயிர்ச்சுமை,என சுமை தொடர்ந்த மாதம் பத்தில்
பிறந்தபெண் குழந்தை கண்டதும் இவள் சுமந்த சுமைகள்
ஒவ்வொன்றாய் இறக்கி வைக்கப்படுவது என்ன விஞ்ஞான வளர்ச்சியோ?பெண்ணுக்கு பெண்ணே சுமையாய் சுமைகளை சுமக்கச் செய்யும்கிராமங்கள் என்று காணாமல் போகுமோ!!!?இந்திய வரைபடத்தில் இருந்து.?
வருத்ததோடு,

காவியன்.

போதி மரம்


ஒருபெண்ணிடம் உன்ணை தொலைத்துப் பார்
போதி மரம் தேவையில்லை!நீயும் புத்தனாவாய்
புத்தன் அனைத்தையும் துறந்திட ஆசைப்பட்டு
ஆசையையும் இழந்தான்.நீ அவளை அடைந்திட
ஆசைப்பட்டு அனைத்தையும் இழந்து அவளையும்
இழந்து நிற்பாய் மனிதனாய் அல்ல.போதிமரமாய்!!!!

காதலுடன்,
காவியன்.

விடை தருவாளா?


அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளம் கவிஞனுக்கு கரு கிடைத்த களிப்பு,
ஆனந்தமாய் விழும்அருவியின் ஓசை இசையமைப்பாளனுக்கு
சுதிகிட்டிய சுகம்,
கார்கிலில் யுத்தம் அண்டைநாட்டுடன் கதாசிரியனுக்கு
கதைகளம் கிடைத்த களிப்பு,
கூவுகின்ற குயிலின் குரல் குரு தேடும் பாடகனுக்குகுரு கிடைத்த குளிர்ச்சி,
பெட்டையை விரட்டிச் செல்லும் சேவல் சிறுவர்களுக்கு
புதுவிளையாட்டு விளைந்த சுகம்,
கல்லூரியில் கலாட்டாவால் மறியல்- காதலர்களுக்கு
காரணம் கிடைத்த களிப்பு,
மேகம் கறுத்து இடியோடு இருட்டிடவிவசாயிகளுக்கு
மழை காணும் சுகம்,
காற்றில்மணம் பரவிட பூக்கள் மலர்ந்தசுகம் தேனிக்களுக்கு. ஆனால் என்னுள் ஏன் இந்த இன்பம்?ஓ அவளின் கடைக்கண் பார்வை பட்டு சென்றதாலா?விடை தந்து மடிதருவாளா!!! கொடிஇடையாள்!!!!!

விடை தேடி,
காவியன்.

மனிதனுக்கு இறப்பு ஏன்?ஒரு கேள்வி


மலர்கள் வரம் கேட்கின்றன-மலரும் ஓசையை
உலகுக்கு உணர்த்திட.
மரங்கள் வரம் கேட்கின்றன-தன்னை தீண்டி செல்லும்
காற்றினை சிறைப் பிடித்திட.
புற்கள் வரம் கேட்கின்றன-தண்டுகொண்டு தாவரங்கள்
போல தலை நிமிர்ந்திட.
பூனைகள் வரம் கேட்கின்றன-புலியை போல பாய்ந்து
வேட்டையாடிட வேண்டி.
பெட்டைகள் வரமோ!பொறித்த குஞ்சினை புசிக்கும்
பருந்தை பறந்து பழிவாங்கிட.
குருவிகள் வரம் கேட்கின்றன-குயில்கள் போல கூவிடவேண்டி.
மனிதனும் வரம் கேட்கின்றான்.கண்ணில் கண்டதை
எல்லாம் ஆண்டிட வேண்டி.

பூக்களோ முதல்நாளிலேயே மடிந்திடுது,
மரங்களும் முடியாமலையே தரைசாய்கிறது,
பெட்டையும் தோல்வியாய் தரைவருது தனியே,
குருவியும் குயிலாய் கூவி இறையாகுது வேடனுக்கு,
புற்களும் முயன்றும் முடியாமல் தரை சாயுது,
பூனையோ பன்றியின் உறுமலுக்கே ஓடுது,
ஆனால்மனிதனே உனக்கு ஏன் இறப்பு?

விலங்கையும் கூண்டில் வைக்கிறாய்,
கப்பலையும் மிதக்க வைக்கிறாய்,
விமானத்தை பறக்க வைக்கிறாய்,அவ்வளவு ஏன்?
உடல்உறவு கொள்ளாமலேயே இனவிருத்தியும் செய்கிறாய்.
இருந்தாலும் நீ இறப்பது ஏன்? இறைவன் இருப்பதாலா?
இல்லைநீ இறைவனை இம்சிப்பதாலா?

கேள்வியோடு,
காவியன்.

மின்சார(மக்கள்)தொகை


ஆல்வாஎடிசன் அறிவில் வந்த அதிசயமே!
கருமை போக்கும் கதிரவனின் கருப்புவாரிசே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்றனர் ஆலயத்தினை!
தட்டியதும் திறக்காமலேயே தந்தாயே வெளிச்சத்தினை.
காற்றும்-நீயும் என்ன எதிர்மறை பங்காளிகளோ!!.
காற்றை உணர முடியும் பிடிக்க முடியாது.
உன்னையும் உணர முடியும் பிடிக்க முடியாது பியூஸ்போனாலன்றி.
காற்று எங்களை பிடித்தாலும் உயிர்பிரிவது உறுதிதான் .நீ
எங்களை பிடித்தாலோ உயிர்பிரித்து குடிப்பதோ குருதி தான்.நீரிலும் பாய்கிறாய் நிலத்திலும் பாய்கிறாய் எப்படி இருப்பாய்?
தண்ணீர் மாதிரியா?இல்லை தகரம் மாதிரியா?
உன்னை சேமித்து வைக்க சொல்கின்றனரே!அடுத்த சந்ததிக்காகவா?
ஏன் உங்களுக்கு ஓய்வு இல்லையோ? ஓய்வில் களவும் இல்லையோ!
உங்கள் சந்ததியை வளப்படுத்த.ஆம் எனில் வாங்கிகொள் ஆண்மையைகடனாக இந்திய மக்களிடம் இன்றே.
ஆயிரமாயிரமாய் வளர்த்திடு -ஆல்வாவின் அதிசயத்தை.ஆம்
இதோ இன்று முதல்நிலையை எட்டும்வேகத்தில் இன்னல் நிலையிலும்
நீ பாய்வதை விட வேகமாக.இருவருக்கேன் ஒருவர் என்ற விளம்பரம் வியாதியாய் பரவி விழிக்க சொன்னாலும் விழிக்காமலே
இன்புற்றிருக்கும் இந்தியா.இன்னல் நிலையிலும் மறப்பதில்லை-மறைப்பதுமில்லை இந்திய மக்கள்தொகைப் பெருக்கத்தை.
கலக்கத்தோடு,
காவியன்.

இழப்புகள்


அண்டைவீட்டுக்காரன் அனுபவித்த ஆடம்பரம் கண்டு
ஆறுவயது முதலே அமெரிக்கா மோகம்.மோகம் தொடர்ந்திட
தொடர்ந்திட்ட படிப்பால் உறக்கம் இழந்து-பருவத்தில் பட்டம்
பெற்றும் பருவசுகம் இழந்தும்-பணியில்அமர்ந்தும்-அமெரிக்கா
பறந்தும் இழப்புகள் மட்டும் தொடர்ந்தபடி.

கோழிகூவிடாத விடியல்,சாணம் தெளித்திடும் ஓசையற்ற காலை,
கோலங்கள் இல்லா வாசல்கள்,பக்தர்கள் இல்லா கோயில்கள்,
சுப்ரபாதம் கேட்டிராத பூசையறை,இறைச்சல் இல்லாத சாலைகள்
புகைகக்கிடாத ஊர்திகள்,பச்சைகொடி காட்டி கதவு சாத்தும் சாமான்யன்
இல்லாத ரயில்நிலையங்கள் என சூரியன் வந்ததால் மட்டுமே விடியல்
கண்டதாய் விறையும் இயந்திரத்தனமான இந்தியமனிதர்களுடன்
இதோ இன்று நானும்.

படியினில் தொற்றி-இடிசல்,நெரிசல்,திருட்டு இல்லாத பேருந்து பயணம்,
இரவுநேர காவலனின் கைத்தடி சத்தம் கேட்டிராத காவல்,
அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டான் சங்கதி அறியா அவலம்,
காதலியில்லாகடற்கறை வாசம்,
நயாகராவிலும் குடும்பம் இல்லாத கும்மாளம்,
குடியரசு,சுதந்திர தினத்திலும் கொடி பறந்து பாறாத ஏக்கம்,
அம்மா,அப்பாக்கள் தினங்கள் வந்தாலும் வாழ்த்துக்கள் மட்டுமே-அதுவும்அரவணைப்பு இல்லாத தொலைபேசியுடன்,
காதலி இருந்தும்-கட்டி தழுவாதகைகள்,மின்னஞ்சலில் இதழ்பதிப்பதுடன் பிறந்தநாளிலும் பிரிந்தே இருப்பது.

வெடியோசை கேட்டிடாத தீபாவளி திருநாள்,
கரும்பு சுவைத்திடாத பொங்கல் பண்டிகை,
மாடு உண்ண கண்டிடாது மறையும் மாட்டுப் பொங்கல்,
காளையடக்கும் காளையர் காணாது கழியும் காணும்பொங்கல்,
திருவிழா என நாள் குறித்து நகரும்தேர் காணாத கவலை,
அந்நாளில் அலகு குத்தி அருள்வாக்கு சொல்லும்குரல் கேளாத கொடுமை,
கொடுத்து வைத்த முத்தங்களை கொடுக்காமலே ஓடிப்போன அடுத்தவீட்டுஅத்தைப்பெண் சுவாரஸ்யம்,
சுதிசுருகாமல் ஆசையாய் பாக்கு கேட்கும்பக்கத்துவீட்டு பாட்டியின் மரணம், என இழப்புகள் இதயத்தை தொடர்ந்துஇம்சித்திட,உதறித்தள்ளி தாய்நாடு திரும்பிட நினைக்கையிலே உணர்கிறேன்.
மனதையும் இழந்ததை பணத்தினால். இருந்தும்இழப்புகள் மட்டும் பணத்தைப்போல பெருகி கொண்டே,
இன்பங்கள் மட்டும் மனத்தைப்போல சுருங்கிகொண்டே.

அன்புடன்,

காவியன்

காத்திருக்கிறேன்.


வீட்டுவிஷேசத்திற்கு வந்து விஷேசமானவள் நீ,
நீ வீட்டிலமர்ந்துஉணவு அருந்திய இடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன்.உணவுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!
கோயிலில் நீ நின்று கடவுளை வணங்கிய இடத்தில் நின்றுகடவுளை தொழுகிறேன்.கடவுளை கண்டிட அல்ல,உன் வருகைக்காக.!!!
விடியலேகூடாது என்றபடி விழிகள் எரிந்திட,எரித்தபடி உதிக்கும்
ஆதவனை திட்டி தீர்த்திட்ட அந்த இடத்தினில் காத்திருக்கிறேன்.
உதயம் காண அல்ல,உன்னை காண.!!
தண்ணிரற்ற காவிரியில் உன்காலடி பதிந்த சுவட்டில்,என்தடம்
பதித்த இடங்களில் மாடுகள் விரட்டி காத்திருக்கிறேன்.
புற்களுக்காக அல்ல,உன் வருகைக்காக.!!!
பேருந்தில் ஐந்து இருக்கைகள் இருந்தும்,நீஅமராமல் கம்பி பிடித்து
என்னை களித்து நின்ற கம்பியை பிடித்திட அல்ல,
நான் காத்திருப்பது உன் வருகைக்காக.!!!!
நாம் அமர்ந்து கிள்ளி எறிந்த புற்கள் கிள்ளிட நாம்இன்றி
சோர்ந்து தலைகுனிந்திருக்கின்ற இடங்களில்
காத்திருக்கிறேன்.உன் வருகைக்காக.!!
ஒதுங்கிநிற்க கூட முடியாத மரத்தடியில் உட்கார்ந்து அதன் உதிர்இலை
எடுத்து ஜாதகம் கணித்த இடங்களில்காத்திருக்கிறேன். உன்வருகைக்காக!!

கெட்டிமேளம் கொட்டி மூன்றுமுடிச்சு தாங்கிகொண்டதால் தலவாழையில் தடபுடலாய் சாப்பாடு சங்கதி அறியாதவருக்கும்.ஆனால்
எனக்குத் தானே தெரியும்-அது உனக்கு தாலிக்கயிறு அல்ல -
தூக்குகயிறு என்று.அதனால் தான் நாம்(நீ) இதுவரை வராத இந்தசவப்பெட்டியில் காத்திருக்கிறேன்.!!!
உன் வருகைக்காக அல்ல,உன்னை எடுத்து வரும் எமனிடம் என்னுயிரைத் தந்திட.(சவமாய் அல்ல,சாகாமல் ஆம் நீவிதவையாய் சாகவிரும்பாத சத்ரியனாய்.)

அன்புடன் காத்திருக்கும்.
காவியன்.