Search This Blog

Saturday, May 20, 2017

Friday, April 25, 2008

புளித்துப் போன காதல் வரியும் உன்னால்


உன் காலடிப்பட்டால் கடல்நீரும் இனிக்குமடி,
உன்கை அடிபட்ட என்னை எறும்பும் கடிக்க மறுக்குமடி
தனக்கு சர்க்கரை வியாதி வருமென்ற பயத்தில்.


நீ சும‌ந்து சென்ற‌ புத்த‌க‌ம் தாங்க‌ த‌வ‌ம் இருக்கும் உன் வீட்டு மேசை
உன்னை தாங்கிட‌ த‌வ‌ம் செய்ய‌வே என‌க்கு ஆசை

நீ உடுத்திய‌ உடையால் ப‌ட்டு ப‌ல‌ ல‌ட்ச‌ம் போன‌து நீ முக‌ம் துடைத்த‌
கைகுட்டை க‌விதையான‌து.

நீ ஒருமுறை சிரி என‌ சொல்லி உன்வீட்டு தோட்ட‌த்து ம‌ல‌ர்க‌ளோடு நானும் காத்திருக்கிறேன்.ம‌ல‌ர்க்கொத்தோடு

கொடுமை என்னும் சொல் கூட‌ ப‌சுமை உள்ள‌தாய் ஆன‌த‌டி
உன் நினைவை என்னிட‌ம் விட்டு சென்ற‌தால்.

வ‌லி என்ற‌ சொல்லுக்கே வ‌லிக்காம‌ல் வ‌லியை உண‌ர்த்த‌ வ‌ழி க‌ற்று த‌ந்த‌வ‌ள் நீ
ஆனால் உன் பிரிவின் வ‌லி போக்க‌ ஒரு வ‌ழி க‌ற்றுத் த‌ராம‌ல் போனாயே ஏனோ!!!

நீ சொல்லிச் சென்ற‌ ஒரு வார்த்தையால் என் வாழ்வை தொலைத்த‌வ‌ன் நான்
நான் தொலைத்த‌ வார்த்தையால் வாழ்க்கையை பெற்ற‌வ‌ள் நீ

உன‌க்காக‌ காத்திருக்கும் போது ம‌ட்டுமே உண‌ர்கிறேன்.எட்டு ம‌ணி நேர‌ உழைப்பு என்ப‌து
எத்த‌னை யுக‌ம் என்ப‌தை. உன‌க்காக‌ காத்திருந்து நொடியின் நீள‌ம் அறிந்ததால் எட்டும‌ணி நேர‌ அலுவ‌லே தேடிடாத‌ நான் உன் அந்த‌ர‌ங்க‌ ஊழிய‌ன‌டி.

நீ இல்லாத‌ இந்த‌ 28 நாட்க‌ள் ஒரு மாத‌ம் தொலைத்த‌ வ‌ருட‌ம் போல‌ சுருண்டு போன‌வ‌ன‌டி.

Saturday, January 26, 2008

சின்ன சின்ன சில்மிஷங்கள்


என் காலண்டர் கிழமை கிழிக்கப்படுவதில்லை
உன் பிறந்தநாளுக்கு பின்னே

நீ பிறந்தநாளிலே கூவும் குயிலினம்
குழப்பத்தில் கூவிட மறந்துபோனது.
பிறந்த நீ தன் இனமோ என எண்ணி.

நீ பிறந்த நாளிலே மயிலினம் தன் ஆடல் மறந்து,
உன் நடை அழகை பயில உன் இல்லம் வரும் .

உன்னை இரவினில் காணாவிடில்,
நிலவினை காணவில்லை என‌புகார் தந்திடும்
நான் புதுமைபித்தன் இல்லையடி,
உன் புடவை முந்தானை சுற்றும் சூரியகோளடி நான்.

நீ சிரிக்கும் ஒவ்வொரு முறையும்
ரோஜாப்பூ தலைகுனியும் வெட்க்கத்தால்,
உன்போல தன்னால் மலரமுடியவில்லை
என்ற தன் இயலாமை எண்ணி.

உலக அழகியை கண்டேன் ஒருநாள்
ஒரு இரவு தான் உறக்கம் தொலைத்தேன்.

உன்னை முழுதாய் ஒருமுறை கூட காணவில்லை,
ஆனாலும் தினமும் உறக்கம் தொலைக்கிறேன்.

உனக்கு கனவில் வியர்த்ததற்கே கைவிசிறி தேடி,
கண்டிடாத கணத்தில் ஆடைகளை கழைந்து விசிறியாக்கி
விசிறிவிட்டு உன் வியர்வை போக்கிய உன் விசிறி நான்.

ஆனால் இன்று களவில் விளைந்த வியர்வைக்கு
உன் விசிறியான‌ என்னால் உன் வியர்வைக்கும்
விடைகொடுக்க முடியவில்லை,கலைந்த உன்
உடைகளையும் கூட அளிக்க முடியாமல் தான்,
உன் உச்சி முகர்ந்து விடைகொடுக்கிறேன்.

கனவில் நீ நனைந்த்தற்கே குடைபிடித்து,
குதூகலமாய் மழையில் நனைந்து,
நட்சத்திரமாய் மின்னியவன் நான்.
இன்று களவில் நீ நனைந்து
நிற்க நான் மோகத்தின் முடிவில்
குனிந்து நிற்கேறேன் குற்ற உணர்வோடு.

என் சத்தத்தில் சங்கீதமாய் கலந்தவள் நீ
ஆனால் உன் சங்கீதத்தையே சத்தமாக்கியவன்
இங்கிதம் இன்றி.

கறுப்பான என் ரத்ததில் சிவப்பாய் கலந்தவள் நீ
ஆனால் உன் சிவப்பான கற்பையே கறுப்பாக்கியவன் நான்.

என் நடத்தையை நாட்டியமாய் நடனமாடியவள் நீ
ஆனால் உன் நடனத்தை நகைத்து உன்னை
நடத்தை கெட்டவள் ஆக்கியவன் நான்.

உன் கோலத்தில் என்னை புள்ளியாய் கலந்தவள் நீ
ஆனால் நானோ உன் கோலத்தையே
அலங்கோலமாக்கியவன் உன் ஆடை கழைந்து.

Tuesday, January 08, 2008

உன் துப்பட்டாவும் கவிதையே!!


ஒரு சொல்லில் என்னை சுட்டு,
மறுவாக்கியத்தில் என்னை வாட்டி,
முற்றுப்புள்ளியில் என்னை முழுதாய்
கொளுத்தியவள் நீ.
நீர் ஊற்றியும் அணைய‌வில்லை.
இறுக்கி அணைக்கவேண்டிய‌,
நீ அடுப்பு ஊதிய‌தால்.


விடுமுறை என‌ எண்ணி எல்லோரும்
போல‌வே ஏக‌மாய் குளித்து கும்மாளம் அடித்த‌தில்,
அப்பாவிட‌ம் அடி விழுந்த்த‌து வ‌ழ‌க்க‌ம் போல‌வே.
அக்க‌ம்ப‌க்க‌த்தின‌ர் கேலி செய்த‌போதும்,
அழாத‌ நான்- நீ ம‌றுநாள் ப‌ள்ளியில் ம‌ற்ற‌வ்ர்
சொல்ல‌க்கேட்டு வ‌லித்த‌தா என‌ கேட்டாயே
அந்த‌ சொல்லில் தான‌டி என் க‌ண்க‌ளும்
தாரை வார்த்த‌து க‌ண்ணீரை..


கவிதையின் தலைப்புக்கே வெட்கம் வந்து,
தரை தொடும் உன் துப்பட்டா தலைப்பு-
சொல்லும் வெட்க‌த்தின் விதியை.
க‌ண்க‌ள் க‌ண்ட‌த‌ன் மீதியை
என் க‌விதைக‌ள் சொல்லும்.


உன்னால் கவிதையின் இல‌க்க‌ண‌ம் த‌லைகீழான‌து.
ஆம் க‌விதையில் பொய்க‌ள் விய‌க்க‌வைக்கும்.
மெய்யோ மெய் சிலிர்க்க‌வைக்கும்.
நீ மெய் தான். ஆனால் சிலிர்க்க‌
வைக்க‌வில்லை என்னை.
விய‌க்க‌வைத்தாய் பொய்யாய் கோவ‌ம்கொண்டு.


மழை பெய்யும் வேளைகளில் புதுக்குடை
பிடித்தும்கூட என் மனது நனைகின்றது
உன் நினைவுகளால்.
உன் துப்பட்டாவால் நீ குடை பிடிக்கும்போது
மட்டும் என் அழுக்கு மனசும் கூட
ஆடை போர்த்திக்கொண்டு ஆண்டவனை
பிரார்த்திக்கிறது அடைமழைவேண்டி.


ஒரு பெளர்ணமி நிலவுக்குள்
32 நட்சத்திரங்கள் நீ சிரிக்கும்போது.


உன் கூந்தல் நீளம் தேடிட தலை கோதினேன்.
பின்னிக்கொண்டது விரல்கள் மட்டுமல்ல‌
நமது முகங்களும் தான்.
வெட்கத்தால் கன்னங்கள் சிவந்ததா?
இல்லை கோபத்தால் கண்கள் சிவந்ததா?
தெரியாது.ஆனால் சிகரெட் பிடித்து
கருத்த என் உதடுகள் சிகப்பானது
உன் உதட்டுச் சாயத்தால்.நீ என் மார்பில் தலைசாய்ந்த தருணம்
என் இதயம் உன் பெயர் சொல்லி
அழைப்பதாய் சொன்ன,உனக்குத் தெரியாத
என் நாக்கு பேச மறந்து போனது
உன் இறுக்கத்தினால் என்பது.
நான் ஊமையானலும் என் இதயம்
உன் பெயர் சொல்லித் துடிக்கும்
என் தூக்கத்திலும்.


என் மீசைமுடி உன் முகத்தில் காயம்
செய்தால் கவலை வேண்டாமடி
என் இதழ்களால் மருந்து தடவி
உன் வலி போக்குவேன். நீ தான்
என் மீசை முறுக்கை கூராக்கினாய்,
என் இதழ்கள் உன் பெயர் சொல்லி
முனுமுனுப்பதே மருந்து தடவிடத்தான்
என் மீசை முறுக்கை நீ கூட்டுவதே
காயம் செய்திடத்தான்.

நீ மட்டுமல்ல உன் மேனி மேல்
விழுந்துகிடப்பாதால் துப்பட்டாவும்
கவிதையானது- நானும் கூட‌ கவிஞன் ஆனேன்.

Wednesday, October 17, 2007

நினைவு விதைகள்


உன்னை காணாத‌ சோக‌ம் என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌
தூசியுடன் நாம் அமர்ந்திருந்த இருக்கை.

க‌ல‌ங்க‌ரைவிள‌க்க‌ம் திசை அறிந்திட‌த்தான்
என‌ப‌டித்த‌ ப‌டிப்பு பொய்யான‌து.
என்வழி மறந்துஉன்னைத் தொட‌ர்ந்ததால்.
சூரிய‌ன் உதிக்கும் திசை அல்ல‌ கிழ‌க்கு.
நீ வ‌ரும் திசையில் ம‌ட்டுமே நான் விழிப்ப‌தால்

உன் பிரிவினில் நில‌வின் வ‌ருகை
ஏனோ ந‌ம் க‌ண்க‌ளில் க‌ண்ணீரின் வ‌ருகை

ச‌னி போனா த‌னியா போகாது என்ப‌து
எவ்வ‌ள‌வு உண்மை .நீ ப‌ள்ளிக்கு செல்லும்போது
நானும் வ‌ருவ‌து‍ விடுமுறை நாளிலும் .

எத்தனை முறை எட்டிப்பார்த்திருப்போம்
முதலில் வெளிவருவோரைப் போல.
எல்லோரும் எழுந்து சென்றபின்னும்
புத்தகம் அடுக்கி காத்திருப்பாயே !!
நான் உன் அறையை நெருங்கி வரும் வரை.

தோழிகளுடன் நீ அமர்ந்து உணவருந்திய போதும்,
கைகழுவ வேகமாய் வருவாயே,
நவாமரத்தினடியில் அமர்ந்திருக்கும்
என்னைத் தாண்டி பாதி வெட்க‌த்தோடு.
நீ அல‌ம்பிய‌ நீர் உட்க்கொண்டு வ‌ளராமல்,
நீ கொண்ட வெட்கம் உட்கொண்டு வ‌ள‌ர்ந்த‌தால்
தான் ப‌ழ‌ம் உண்ட‌ நாவும் சிவ‌ந்திடுதோ
என்று நாக்கினை காட்டிய‌ போது
என் நா க‌ட்டிய‌வ‌ள்,
"நாக்கு ரொம்ப நீளூதே" என்று
என்னைத் தீண்டும் தென்ற‌லை அறியாத‌
ம‌ர‌ம‌ண்டைய‌ன் நான்.ஆனால் நான்
இல்லாத‌ இட‌த்தில் நீ என்னைத்
தேடுவ‌தை அறிந்த‌ விஞ்ஞானி .
நானும் சூரிய‌ன் போல‌வே ச‌ந்தோச‌மாய்
க‌ண்விழிக்கிறேன் உன்னை க‌ண்டுவிட‌வே.
க‌ல‌ங்கிய‌ப‌டியே இல்ல‌ம் செல்கிறேன்
க‌திர‌வ‌னைப் போல‌வே.

சாக‌ப்போன‌ என்னை,த‌டுத்து
'வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே'என‌ வ‌லியுறுத்திய‌
நீ வ‌ந்த‌ வ‌ழியே சென்று விட்டாய்.
நான் ம‌ட்டும் இற‌க்க‌ப் பிடிக்காம‌ல்,
உன் நினைவோடும் உன் வார்த்தையோடும்.

க‌ருப்பு நிற‌த்தை கொள‌ர‌வித்த‌வ‌ள் நீ.
என்னை காத‌லித்து அல்ல‌-என் நிழ‌லும்
என்னைப் போல‌ அழ‌காயிருக்கு என‌ சொல்லி.