Search This Blog

Friday, September 29, 2006


பஞ்சபூதங்களில் ஒரு ரவுடியாய்

ராட்சத அலை எடுக்கப்படுமா?
ENCOUNTER

கடல் நீரா?இல்லை கண்ணீரா?


    • இன்று முதல் கடலின் ஆழம்
      இருமடங்கானது. அலையில் அலறி
      உயிர்விட்டவர் கண்ணீருடன், கண்கள், காதுகள்
      மற்றும் மனம் கொண்டவர்களின் கண்ணீராலும்

சுனாமிச் சிதறல்கள்

26.12.2004 விடியற்காலை இது
எத்தனையோ பேருக்கு விடியாத காலை.

கதிரவன் வரவை கண்டிட காத்திருந்த கண்கள்,

காற்றுடன் அலையின்ரீங்காரம் ரசித்திருந்த காதுகள்,
இளங்காற்றை எதிர்த்து ஓடி இளைப்பாறியஇதயங்கள்,

நண்டுகளை அலையுடன் துரத்தி விளையாடிய மழலைகள்,
இரவுநேர உணவுக்காக வலைவீசி கலமேறிய மீனவர்கள்,
கடலை தொட்டியாய்நினைத்து குளித்திடும் கடற்கரைவாசிகள்,
காதலை வாழவைக்க பலசமயம் மறைக்க
உதவிய படகுகள்,
எரிகிற கதிரவன் முன்னே எரியாத அடுப்போடு போராடும்தள்ளுவண்டிக்காரன்- என இவைகளோடு அன்றி
அன்று தான் அப்பாவுடன் புதிதாக வந்த அந்த குழந்தையும் கேட்டது மகிழ்வுடன்
இதுபோல விடியல் தினம் வேண்டுமென!!
மகிழ்ச்சிமுடியுமுன்னே மடித்து
அடித்துச்சென்றாயே
அலைகளை அனுப்பி. எங்களின் கண்ணீர் அலைகளோடு
இல்லையில்லை- எங்களின் கண்ணீரோடு ஒப்பாரி
வைக்கிறோம் வேண்டாம் இப்படி ஒரு
விடியல் என..
அதுமட்டுமல்ல இனி எங்களுக்கு கண்ணீரால்
வரும் அலை கூட
வேண்டாம்.

உப்பானது ஏன்?


கடல்நீர் உப்பானது ஏன்? எத்தனையோ நாள்
யோசித்திருந்தேன் கரையிலமர்ந்து
அலைகள் ரசித்தவண்ணமாய்.

விடையில்லை. ஆர்வம் வந்தது.

எழும்பி வந்து உயிர் எடுத்துச் சென்ற
அலை உணர்த்தியது.
அலறி உயிர் விட்டவர்கள் கண்ணீருடன்
எஞ்சியோரும் சிந்திய கண்ணீரால் என.

விடையில்லாத போது ரசித்த நான்.
விடைகண்டபோது மரித்தேன்.

கடல்தாய்

எத்தனையோ நாளாய் அழைத்திருந்தேன் விருந்துக்கு- உன்னை!
கடல்தாயே கைநிறைய காசு கண்ட வேளையெல்லாம்
கை தொழாத நிமிடங்கள் இன்னமும் நினைவில் உண்டு
நீ தொட்டுச் சென்ற கரைகளில் கட்டித் தழுவி
இருக்கின்றேன் தாரத்தை உன் தயவில்.
என் தாரமானவள் தாயானபோதும் உன்
ஆசிவேண்டியே அழுதிருக்கிறேன் கரையில்
களித்திருந்த வேளையெல்லாம் கருவில் இருக்கும்
குழந்தைக்கு கடலரசன்-கடற்கன்னி என உன்வாரிசாக
எண்ணித்தானே எழுதிவைத்தேன் நேற்றும் கூட.
அலையனுப்பி அலைத்துச்சென்றபோதெல்லாம்
தழுவிச் சென்றதாய் தாண்டவமாடியதுன்டு. ஆனால் இன்று
வீடுதிரும்பிய பின் தான் உணர்ந்தேன் அலைத்துச் செல்லவில்லை- அழித்துச்சென்று விட்டாய் என்று் -
தாயே உறவு கொன்ற கொடுமையை யாரிடம்

Tuesday, September 26, 2006

கைதி-புல்லாங்குழல் இன் பயணம்

மூங்கில் அல்ல அது இசையின் முதுகுத்தண்டு
கைதி அல்ல. அவன் மனிதனின் மறுவாழ்வின் வடம்

தண்டினில் வலம் வந்த காற்று
வலுவூட்டும் வருந்திய மனத்தையும்.
தண்டனை முடிந்து வந்தவன் சுவாசம்
வலியுறுத்தும் வருந்தியவன் மனத்தையும்

பிஞ்சினில் வெட்டி குழலானது அழிந்திட அல்ல
மூங்கிலின் பெருமை சேர்த்திட
கைதியாகி வெளிவந்தது அழிந்திட அல்ல
மனித மனத்தின் பொறுமை காத்திட

துளைவலம் வந்த குழல் யாரையும் வருத்துவதில்லை
மனம் கசிந்திட.
சிறைவலம் வந்த இவனும் தவிர்த்திட மறப்பதில்லை
மற்றவன் கைதியாகிட

மூங்கில் குழல் ஆனபின்னே அதனை மூங்கீல்
என்பதில்லை யாரும்
கைதியான பின்னே அவனை மனிதன் என
அழைப்பதில்லை யாரும்

தினம்தினம் ஆயிரமாயிரமாய் ராகங்கள்
சுவாசமாக உட்ச்செல்லும் குழலினுள்
தினம்தினம் ஆயிரமாயிரமாய் அறிவுரைகள்
சுவாசமாக இல்லை சுட்டிகாட்டியபடி

புல்லாங்குழலையும் மனிதன்தான் இயக்குகின்றான்
பலரும் களித்திடவேண்டி
கைதியான மனிதனையும் மனிதன் தான் இழிக்கின்றான்
பலர் இளித்திட வேண்டி

குழல்கொண்டு கலையும் வளர்க்கலாம்
கொலையும் செய்யலாம்
இவனையும் கலைஞனாவும் ஆக்கலாம்
கொலையும் செய்யலாம்

குழலானபின்னே அதனை காண்பவர் யாரும் கவனித்து
சுவாசம் கொடுக்க மறப்பதில்லை.அறியாத போதிலும்
கைதியான பின்னே கண்ட யாவரும் அவனை பலித்து
பேசிடாதிருப்பதில்லை.அவனைப் பற்றி அறியாத போதும்
புல்லாங்குழல் போலவே கைதியும் அனைவரின் வாயிலும்
அங்கலாய்ந்தாலும் கைதியான இவனின் பயணமும்
குழல்போல மற்றோறை மகிழ்வித்து இருப்பது மட்டுமேயன்றி
மனிதனை கைதியாக்கிடாமல் இருப்பதுவே

அடங்க(காத)ல்


அம்மாவின் ஆணைக்கு அடங்கிடாத நான் அவசரக்காரன் என்றானேன்
அப்பாவுக்கும் அடங்கிடாத நான் அடங்காப்பிடாரி என்றானேன்
ஆசானுக்கும் அடங்கிடாத நான் ஆத்திரக்காரன் என்றானேன்
கடவுளுக்கும் அடங்கிடாத நான் நாத்தீகன் என்றானேன்
ஊர்மக்களுக்கும் அடங்கிடாத நான் முரடன் என்றானேன்
உன்னிடம் அடங்காததால் மட்டும் உனக்கு காதலன் ஆனேனே!
எதற்கும்!ஏன் உனக்கே அடங்கிடாத நான் அந்த
ஓர் வார்த்தையில் அடங்கிவிட்டேனடி.