Search This Blog

Thursday, September 20, 2007

வாழ்த்துகிறேன் நீ தழைத்த இந்நந்நாளில


இந்த உலகில் நான் பிறக்கும் முன்னே கேள்விகள் தான் பிறந்தனவோ என்னவோ!என்னுள் அத்தனை ஆயிரம் கேள்விகள்
தாயின் ம‌டியில் க‌ருத்த‌ரித்த‌வுட‌னே என் தாய்க்கு ஒரு கேள்வி எழுந்த‌து.அது நான் ம‌ண் க‌ண்டு அல‌றிய‌தில் ம‌றைந்த‌து
இப்ப‌டி தோன்றிய‌ ஆயிர‌மாயிர‌மான‌ கேள்விக‌ள் அவ்வ‌ப்போது ம‌றைந்து போயின‌ம‌றையாத‌ கேள்விக‌ள் ம‌ட்டும் ம‌ன‌தில் குடிகொண்டு தாண்ட‌வ‌மாடின‌ உன்னை அறியாத‌ வ‌ரையில்
நில‌வு யாசித்திடும் முக‌ம்சூரிய‌ன் ப‌ய‌ந்து ந‌டுங்கிடும் பார்வைவிண்மீன்க‌ள் விய‌ந்திடும் புண்ண‌கைக‌ழுத்து க‌ண்ட‌தில் க‌ட‌லுக்க‌டியில் ஒளிந்த்திட்ட‌ ச‌ங்குஇத‌ழ்க‌ள் க‌ண்ட‌ சிப்பியும்,ப‌ல்வ‌ரிசை க‌ண்ட‌ முத்தும் கூட‌ க‌ட‌லுக்க‌டியில் க‌ல‌ந்துஆலோசித்த‌ப‌டி இருக்க‌
உருவ‌ம‌ற்ற‌ காற்றோ உருவ‌ம் கேட்டு உன்னை தொட‌ர்வ‌தால் இவ்வுல‌கே வாழ்ந்து கொண்டுநிறமற்ற நீரும் உன் நிறம் கேட்டுத் தானே மழையை தூது அனுப்புது உன் காலடி பட்ட இடங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டுஇவையெல்லாம் சரி கடவுள் ஏன் புவி வரவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வரவில்லை.பதிலாய் வாதம் தான் வந்ததுவாதத்தில் வலுத்தது நாத்தீகமே.நானும் நாத்தீகனே கடவுளை காணாத வரையில்உன்னை கண்டவுடன் நானும் ஆத்தீகன் ஆனேன்.அந்த கடவுள் ஏன் புவி வரவில்லை என்ற காரணமும் கண்டேன்.அந்த கடவுளின் அவதாரமாய்புவியில் நீ இருப்பதால் என்பதால் என உணர்ந்தேன்இதோ உன்னை கண்டதால் நான் ஆத்தீகன் ஆனதுபோல இவ்வையமே நாத்தீகம் அற்று ஆத்தீகம் தழைக்க தரணீயில் நீ வளர்ந்து தரணியை வாழ வைக்க வந்தவளே என வாழ்த்துகிறேன் நீ தழைத்த இந்நந்நாளில்.