Search This Blog

Friday, April 25, 2008

புளித்துப் போன காதல் வரியும் உன்னால்


உன் காலடிப்பட்டால் கடல்நீரும் இனிக்குமடி,
உன்கை அடிபட்ட என்னை எறும்பும் கடிக்க மறுக்குமடி
தனக்கு சர்க்கரை வியாதி வருமென்ற பயத்தில்.


நீ சும‌ந்து சென்ற‌ புத்த‌க‌ம் தாங்க‌ த‌வ‌ம் இருக்கும் உன் வீட்டு மேசை
உன்னை தாங்கிட‌ த‌வ‌ம் செய்ய‌வே என‌க்கு ஆசை

நீ உடுத்திய‌ உடையால் ப‌ட்டு ப‌ல‌ ல‌ட்ச‌ம் போன‌து நீ முக‌ம் துடைத்த‌
கைகுட்டை க‌விதையான‌து.

நீ ஒருமுறை சிரி என‌ சொல்லி உன்வீட்டு தோட்ட‌த்து ம‌ல‌ர்க‌ளோடு நானும் காத்திருக்கிறேன்.ம‌ல‌ர்க்கொத்தோடு

கொடுமை என்னும் சொல் கூட‌ ப‌சுமை உள்ள‌தாய் ஆன‌த‌டி
உன் நினைவை என்னிட‌ம் விட்டு சென்ற‌தால்.

வ‌லி என்ற‌ சொல்லுக்கே வ‌லிக்காம‌ல் வ‌லியை உண‌ர்த்த‌ வ‌ழி க‌ற்று த‌ந்த‌வ‌ள் நீ
ஆனால் உன் பிரிவின் வ‌லி போக்க‌ ஒரு வ‌ழி க‌ற்றுத் த‌ராம‌ல் போனாயே ஏனோ!!!

நீ சொல்லிச் சென்ற‌ ஒரு வார்த்தையால் என் வாழ்வை தொலைத்த‌வ‌ன் நான்
நான் தொலைத்த‌ வார்த்தையால் வாழ்க்கையை பெற்ற‌வ‌ள் நீ

உன‌க்காக‌ காத்திருக்கும் போது ம‌ட்டுமே உண‌ர்கிறேன்.எட்டு ம‌ணி நேர‌ உழைப்பு என்ப‌து
எத்த‌னை யுக‌ம் என்ப‌தை. உன‌க்காக‌ காத்திருந்து நொடியின் நீள‌ம் அறிந்ததால் எட்டும‌ணி நேர‌ அலுவ‌லே தேடிடாத‌ நான் உன் அந்த‌ர‌ங்க‌ ஊழிய‌ன‌டி.

நீ இல்லாத‌ இந்த‌ 28 நாட்க‌ள் ஒரு மாத‌ம் தொலைத்த‌ வ‌ருட‌ம் போல‌ சுருண்டு போன‌வ‌ன‌டி.