Search This Blog

Friday, September 15, 2006

பெண்ணே!நீயும் பெண்ணா?

மண் விட்டுப் பிரிந்த மலை- தாய் பிரிந்த சேய்,
நெஞ்சம் விட்ட நினைவு -நெருப்பை விட்ட அனல்,
வானம் விட்ட மேகம்- நட்சத்திரம் இல்லா இரவு,
துடுப்பு இல்ல படகு -பூக்கள் இல்லா செடி,
வாசம் இல்லா மலர்- பாசம் இல்லா பாலகன்,
நீர் இல்லா குளம்- கோயில் இல்லா ஊர்,
உயிர் இல்லா உடல்- புதிர் இல்லா வாழ்வு- என எவ்வளவோ பேசினாய், என்னை பிரிந்திருந்த கணங்களின் தவிப்பை கவிதையாய்!காதலித்த போது. என் நிழல் விழாத பகலும் நித்திரையாய் உணர்ந்தேன் என்றாயே?
மாற்றிக் கொண்டாயோ மணமான பின்னே மனதினை?
மங்களகரமாய் திரிகின்றாயே மலையாய் பேசிய நீ. மாறாக பேசிடாத நான் மட்டும் தாடியோடு. பெண்ணே! நானும்தான் மாறிவிட்டேன் இன்று.
ஆம் நானும் கவிதையாய் பேசுகின்றேன் பெண்ணே நீயும் பெண்ணா?

Wednesday, September 13, 2006

உன் எண்ணச் சிறகுகள்


களங்கிய குட்டையை ரசிக்க கற்றுத் தந்தவள்-நீ
மெளனமொழி கண்கள் பேசிட கற்றுத் தந்தவள்-நீ
விடியலை வரவேற்றிட கற்றுத் தந்தவள்-நீ
அன்பு எனும் சொல்லின் அடையாளம் காட்டியவள்-நீ
நொடியின் நீளம் கற்றுத் தந்தவள்-நீ
இடியின் இரைச்சலை இசையாக்கி காட்டியவள்-நீ
ஓடி ஒளியும் மின்னலின் இயலாமையை காட்டியவள்-நீ அன்று
அருகில் இருந்ததால் அனைத்தம் இனித்தன.இன்றோ
நீ அருகில் இல்லாததால் தொடர்ந்திடும் அலைகள்,
மலைகளின் குளுமை,வானவில்லின் வண்ணம்,
தென்றலின் தீண்டல் என எதுவுமே என்னைத்
தொடுவதில்லை. உன் எண்ணங்களைத் தவிர.

Tuesday, September 12, 2006

முன்னோர்கள்


காந்தியை காட்டி அகிம்சை வலியுறுத்தினர்.
புத்தன் காட்டி ஆசை கூடாது எனவும் வலியுறுத்தினர்.
ஏசுவை காட்டி அடித்த கைக்கு ஒத்தடம் வைக்க கற்பித்தனர்
பாரதியார் பாட்டு சொல்லி தமிழ் வலியுறுத்தினர். ஆனால்
காதல் கொண்டு கைப்பிடிக்க நினைக்கையில்
முட்டுக்கட்டையாய் முன்னோர்கள்.
காரணம் மதமும் இனமும் வேறாம்
மகான் வழி வந்த மக்கள்.

விடுதலை


திட்டிய தந்தையிடம் இருந்து,உழைக்கச் சொன்ன ஊர்மக்களிடம் இருந்துஉதறிய உறவிடம் இருந்து, விடுதலை என நினைத்து ஊர்விட்டு வெளிநாடுவந்ததும் தான் உணர்ந்தேன்.விடுதலை அல்ல .சிறை தண்டனை என்று.

புலம்பல்


வெளிநாட்டில் வேலை- டாலரில் சம்பளம்.
ஆண்டுக்கு மாதம் இரண்டு என விடுமுறை
கழிக்க தாயகம் திரும்பியவன் கண்கலங்கினான்.
மனிதனை மனிதன் சுமக்கும் கொடுமை என.
புலம்பியவன் அறிவானா? சுமையாளியின் புலம்பலை.
அயல்நாடுமுன்னேற அன்னை நாடு விட்டு, சென்று உழைத்திடும்உதவாக்கரை நீ என.