கண்ணாடி பார்த்தேன்-நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
உணவு உண்ண அமர்ந்தேன்- நீ தான் தெரிந்தாய். ரசித்தேன்
குளியலுக்கு சென்றேன்-நீ தான் நின்றாய்.ரசித்தேன்
தலை கோதினேன்-நீ தான் வருடினாய்.ரசித்தேன்
தாலிகட்ட சென்றேன் நீ தான் நின்றாய்-
ரசிக்கவில்லை மாறாக மரித்தேனடி.ஆம் கையில் அட்சதையோடும்-ஐந்து வயது குழந்தையோடும் நீ.
காலையில் என்னை கண்ட கதிரவன்
கேட்டது,ஏன் சேவல் கூவவில்லை?என அல்ல.எங்கே நிலா என்று.
காவேரியில் நீராட சென்றேன். காவேரி கேட்டது, எங்கே எனக்குவரி?
என அல்ல.எங்கே என் தங்கை கங்கை என்று.
பள்ளியில் ஆசிரியர் கேட்டார்,பாடம் படித்தாயா? என அல்ல.
எங்கே களஞ்சியம் என்று.
கோயிலில் குருக்கள் கேட்டார்,எங்கே தட்சனை? என அல்ல
எங்கே மகாலட்சுமி என்று.
ஐஸ்கிரீம் கடைகாரன் கேட்டான்,என்ன வேண்டும்? என அல்ல
எங்கே வெண்ணிலா என்று.
கடற்கறையில் சுண்டல் விற்பவனும் கேட்டான்,சுண்டல் வேணுமா?
என அல்ல.எங்கே கடற்கன்னி என்று.
உணவுவிடுதியில் பரிமாளனும் கேட்டான்,என்ன சாப்பிடுகிறாய் என அல்ல.எங்கே அன்னலட்சுமி என்று.
கல்லூரிக்கு சென்றேன்,கண்டவனும் கேட்டான்.எங்கே வேலைசெய்கிறாய்?என அல்ல.எங்கே கண்ணகி என்று.(நீ கற்புக்கரசியாச்சே)
மரத்தடியில் அமர்ந்தாலும் உதிரும் இலைகளும் கேட்கின்றன,எப்படி இருக்கிறாய்? என அல்ல.எங்கே தென்றல் என்று.
இப்படி நான்எங்கு சென்றாலும் உன்பெயர் சொல்ல
எத்தனையோ உண்டு.என் தாடியோடு ஜோடியாய்.
எனக்கு தெரியும் ப்ரியா என நீ கொண்டபெயரால் தான்
பிரியாமல் பிரியமாய் இருக்கிறாய் பிரிவினையிலும்.ஆனால்
உனக்கு உண்டா? என் நினைவு ஒரு காவியமாய் இல்லையானாலும் ஒரு ஹைக்கூ கவிதை போலாவது!!!
உன் நினைவுகளோடு,
காவியன்.
பிறந்தது முதலே சுமைகள் தான் பெண்ணே-உனக்கு
ச்ச்ச்சீ பெண் எனும் வெறுப்பு சுமையாய் பிறந்ததுமே,
பொறுப்பாய் படித்தாலும் உனக்கெதுக்கு படிப்பு
என்னுமொரு தடை சுமையாய் உன்னுள்.
தடைப்பட்ட படிப்பால் வீட்டு வேலைகள்
என்னுமொரு, கடமைகள் சுமையாய் உன்னுள்.
தருணம் தாண்டி தாவணிக்கு மாறிட மன்மதர்களிடம்
இருந்து மானம் காத்துக்கொள்ளும் சுமை உன்னுள்,
சுமை தாண்டி மனம் பறித்தவன் மனமும் சேர்ந்து
சுமையாய் உன்னுள்- இருந்திட,போதாதென பின்தொடர்ந்தவன்
எதிவீட்டில் அமர்ந்திருக்க, அவனைவிட்டு இவளை ஏசும்
எதிரெதிர் வீட்டினர் சுமையும்போதாதென, இவளையே
சுமையாய் எண்ணி யாருக்கோகட்டி கொடுத்திட
அங்கே மாமியார் என்னுமொரு பெரிய்ய்ய்ய சுமை,
பகல் பாரம் முடிந்து இரவில் படுக்கை சென்றிட அங்கே
தாலிகட்டிய அவனின் சுமை.அவன் சுமை தினம் தாங்கியதிலே
இன்னொரு உயிர்ச்சுமை,என சுமை தொடர்ந்த மாதம் பத்தில்
பிறந்தபெண் குழந்தை கண்டதும் இவள் சுமந்த சுமைகள்
ஒவ்வொன்றாய் இறக்கி வைக்கப்படுவது என்ன விஞ்ஞான வளர்ச்சியோ?பெண்ணுக்கு பெண்ணே சுமையாய் சுமைகளை சுமக்கச் செய்யும்கிராமங்கள் என்று காணாமல் போகுமோ!!!?இந்திய வரைபடத்தில் இருந்து.?
வருத்ததோடு,
காவியன்.
ஒருபெண்ணிடம் உன்ணை தொலைத்துப் பார்
போதி மரம் தேவையில்லை!நீயும் புத்தனாவாய்
புத்தன் அனைத்தையும் துறந்திட ஆசைப்பட்டு
ஆசையையும் இழந்தான்.நீ அவளை அடைந்திட
ஆசைப்பட்டு அனைத்தையும் இழந்து அவளையும்
இழந்து நிற்பாய் மனிதனாய் அல்ல.போதிமரமாய்!!!!
காதலுடன்,
காவியன்.
அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளம் கவிஞனுக்கு கரு கிடைத்த களிப்பு,
ஆனந்தமாய் விழும்அருவியின் ஓசை இசையமைப்பாளனுக்கு
சுதிகிட்டிய சுகம்,
கார்கிலில் யுத்தம் அண்டைநாட்டுடன் கதாசிரியனுக்கு
கதைகளம் கிடைத்த களிப்பு,
கூவுகின்ற குயிலின் குரல் குரு தேடும் பாடகனுக்குகுரு கிடைத்த குளிர்ச்சி,
பெட்டையை விரட்டிச் செல்லும் சேவல் சிறுவர்களுக்கு
புதுவிளையாட்டு விளைந்த சுகம்,
கல்லூரியில் கலாட்டாவால் மறியல்- காதலர்களுக்கு
காரணம் கிடைத்த களிப்பு,
மேகம் கறுத்து இடியோடு இருட்டிடவிவசாயிகளுக்கு
மழை காணும் சுகம்,
காற்றில்மணம் பரவிட பூக்கள் மலர்ந்தசுகம் தேனிக்களுக்கு. ஆனால் என்னுள் ஏன் இந்த இன்பம்?ஓ அவளின் கடைக்கண் பார்வை பட்டு சென்றதாலா?விடை தந்து மடிதருவாளா!!! கொடிஇடையாள்!!!!!விடை தேடி,
காவியன்.