Search This Blog

Monday, June 18, 2007

காதலின் தூது‍ காமத்தில் கேது






என்னைச் சுற்றி ஆயிரம வண்ணத்துப் பூச்சிகள்,
என்னை சிறை எடுத்திட‌
.ஆமாம்!!
உன் இதழில் நான் தேன் எடுத்ததால்.



மலர்களுக்கு கூட நாம்
குற்றவாளி ஆனோம்.
ஆமாம்- மகரந்தச் சேர்க்கையின் மகத்துவம்
குறைகின்றதாம்
நாம் கூடும்போது.



காற்றுக்கு கூட நாம் இருவரும் பகைவர்களானோம்.
ஆம் நம்
நெருக்கத்தில் காற்றின் பயணம்
இடர்படுகிறதாம் இறுக்கியணைத்த வேளைகளில்.


சுடும் தீ‍க்கும் கூட திருடர்களானோம். ஆம்-நம்
காமச் சூட்டின் அனல்
நாம் தீயிடம் திருடியதாம்.


அனைத்தால் அணைந்து போகும் அந்த
தீ அறியுமா?
அணைத்தால் கூடிப்போகும்
நம் சூட்டின் ரகசியம்.


நீருக்கும் கூட தீராத
கோபம் . ஆமாம்-
நீரும் புகுந்திடாத இடங்களில் நான்
அத்து மீறி நுழைந்து
ஆட்டம் போடுவதால்.
நான் என்ன செய்ய!!


இன்று சிறை எடுக்க வரும்
வண்ணத்துப்பூச்சிகள்,
அன்று ஆள் அரவம் கேட்டு நமக்காய்
காவல் காத்தது ஏன்?


இன்று குறை சொல்லும் மலர்கள் அன்று
உனக்காய் பறித்தபோது
சிரித்திருந்தனவே.
சிரித்த மலர்கள் சினம் கொள்வதில் நியாயம் என்ன?


காற்று,நாம் அன்று தள்ளித் தள்ளி அமர்ந்திருந்த
வேளைகளில் உன்
துப்பட்டா பறந்து வந்து
என் முகம் மூடியிருக்கக் கூடாது.


உன்னை
தொடர்ந்ததால் விழுந்த தீச் சூட்டிற்கு
வலி வழிமாறி போனதே உன் இதழ் அணைப்பில்.


இன்று கோபம் கொள்ளும் நீர் அன்று காவிரியில்
குளிக்கயில் நீர் அள்ளி
இறைத்து பேசிக் கொண்டநேரம்
நெருங்கி இருக்கக் கூடாது உன் மார்பினை.


இப்படி எல்லாமே எதிர்க்கின்றன
தீ, நீர்ப்பரப்பினைப் போல‍- உன் அப்பனைப்
போல‌
ஆனால் நான் கேட்கிறேன் இதேப் பிற‌ப்பினை அடுத்த‌ப் பிற‌ப்பிலும்
.

Saturday, June 09, 2007

இரண்டானது பென்னினம்





















நீ சுற்றி வலம் வந்த கோயில் பிரகாரம்-
உடன் சுற்றி வந்த போதே,




உலகையே சுற்றிய உணர்வோடு உட்கார்ந்து
ரசித்த போது தான் உணர்ந்தேன்.

ஏன்? எல்லா தெய்வங்களும்
வெவ்வேறு இடங்களில்,




வெவேறு திசைகளில் இருக்கின்றன,
ஓ அவைகளும் உன்னை காதலிப்பதாலா?




கடவுள் மட்டுமல்ல, கன்னிகளும்
காதல் கொள்ளும் காந்தாரம் நீயடி.




நீ மன்னில் வந்த பின்புதான்
பென்னினம் இரட்டிப்பானது. ஆமாம்,




உன்னைப் போல ஒருத்தியை படைத்திட
முயன்று பிரம்மன் தோற்றுப் போனதால்.

நீ கடலுக்கு சொந்தக்காரி










ஆயிரம் அழகிகள் அரைகுறையாய்
அலைகளுக்காக ஏங்கி, ஓடி ஓடித் தேடிட‌-



உன் ஒருத்தி வரவில் மட்டும்,
சுனாமியாய் அலைகள் பொங்கி கரை வந்து,



உனக்கு பாத பூசை செய்து
கண்ணீர் விட்டு கரைந்து செல்கின்றனவே.



ஏன்?என கடல் உற்று நோக்கினேன் வெகுநேரம்.
கண்ணீர் சிந்தியது கண்கள்-
வெகுநேரம் உற்று நோக்கியதால்.



ஓ!என்போல உன்னை காதலித்தவர்களின்
சிந்தனைத் துளிக‌ள்தான் க‌ட‌ல்நீரான‌தோ.



இந்த துளிகள், சிந்தனைத்துளிகள் அல்ல,
என் கண்ணீர்த் துளிகள்.
கடலில் கலந்திடவிடாதே.
நானும் கரைந்து விடுவேன்.

Thursday, May 17, 2007

என்னருகே நீ இருந்தால்

கோடையில் நீ நடந்திடும் வீதிக்கே
விசிறிகட்டி உன் நிழலுக்கும்
குளுமை தந்திடுவேன்.




மழைகாலத்தில் நீ நடந்திடும் நேரம்
மழைத்துளி மண்விறைந்து உன்மீது
சிதறுண்டால் விண்ணையே
சிறைவைப்பேன் உன் கூந்தலில்.





குளிரில் நீ நடுங்கிட நேர்ந்தால் அந்த
சூரியனையே இரவிலும் விழித்திருக்க
வைத்து சூரியனுக்கே தண்டனை
அளிப்பேன்உன் வேல்விழி வாங்கி .




இவை அனைத்தும் சாத்யமா! சாமன்யனே?
என கேட்காதே. என்னருகில் நீ இருந்தால்,
அரபிக் கடலும் கூட ஆறு அடி ஆழம்தான் எனக்கு.



Tuesday, May 15, 2007

உனக்கே உனக்காய்
















NET-இல் வந்த உன்னை நேரில் அழைத்தேன்.
நேரில் வர வெட்கப்பட்ட நீயோ!
வெண்ணிலவாய் எட்டா உயரத்தில் தோன்றினாய்.





எட்டவில்லை உன்னை தொட என்றேன்.
வானம் தொட்டு விடும் தூரம் தான் என்றாய்.



மூச்சு முட்ட பொய் சொன்னேன்.
வான் இறங்கி நிழலாய் வந்தாய்.





அய்யோ! நிழல் மிதி படுகிறதே என்று,
உன் நிழல் என்மேல மட்டுமே விழுந்திட,
நிழலுக்கு குடை பிடித்து நடந்து வந்தேன்.





இப்படி உன் நிழலுக்கே குடை பிடித்தவன்
இன்று இடி இல்லை,மின்னல் இல்லை
இருந்தாலும் நனைகின்றேன் உன் நினைவுகளால்.











வெண்ணிலா! நீ என்றேன்.
முடிந்தால் தொட்டுக்கொள்
என்றாய்.




இந்த ஏழைக்கு ஏணி கிடையாதா
என்றேன்.

நீயோ இறங்கி வந்தாய்.





இறங்கி வந்த உன்னால் நான்
உயரத்தில் நின்றேன் உன் மனதில்.




என்னை ஏற்றி வைத்த உனக்கு
நெற்றிப்பொட்டிட

பொட்டாக நட்சத்திரத்தை திருடித்
தந்தேன்.




என்னைத் திருடிய திருடி-
உனக்காக‌,

நானும்
திருட‌னானேன்.




இதோ இன்ன‌மும் திருடிக்
கொண்டிருக்கிறேன்

உன‌க்காக‌
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை.




ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளும்
குறைய‌வில்லை.

உன்மேல் கொண்ட‌ காத‌லும்
குறைய‌வில்லை.