Search This Blog

Friday, October 20, 2006

தென்னை சொன்ன செய்தி

மண்ணில் மறைத்து வைத்தேன் ஒருநாளில்
மழையில் மலர்ந்து- வளர்ந்து நின்றது
பின்நாளில்


பாலையோடு பூத்து குலுங்கினாய் பற்கள் பலகாட்டி
உன்னை ருசித்திட
எங்களுக்குள்ளே போட்டி


இளநீர் தந்து எங்கள் சோர்வை துடைத்தாய்
நற்காய்கள் தந்து உணவில்
ருசி கூட்டினாய்


காய்ந்ததால் பணம் தரும் எண்ணெய் ஆனாய்
கீற்றோலை தந்து குடிசையின்
குறை மறைத்தாய் கூரையாய்
பாலை தந்து விறகானாய்
பழுத்ததால் பரிமாணம்
கண்டாய்
விழுந்ததினால் வீட்டினில் விட்டம் ஆனாய்


இப்படிவிழும் வரையில் தவனைமுறையில் தருகின்றனவே
தண்ணீரை வட்டியோடு
தென்னைகள்.



தென்னைகளேஉங்களிடம் இல்லையோ
ஏமாற்றிச் செல்லும் குணம்.ஆகவே
ஆரம்பிக்கப்படுமா?


சீட்டுக்கம்பெனிகள் தென்னைமரங்களால்!
சிதறிச் சென்ற
சிறுசேமிப்பை சீர்படுத்திட!

Wednesday, October 11, 2006

புலம்பல்கள் கிறுக்கல்களாய்

வலையில் தப்பிய மீன்கள்
மாட்டிக்ககொண்டது தூண்டிலில்.

பசிக்காக மீன்கள்,மீன்களுக்காக தண்ணீர் என‌

நீரோடும் யுத்தம் மனிதனால்.

தாவரங்களில் உண்டோ உயர்வு தாழ்வு

அங்கும் காதல் தோல்வி.ஆம்

தாவரங்களும் தாடி வளர்க்கின்றன.

சில‌தரையின் உள்ளே!சில வெளியே!

விடியலுக்காக காத்திருக்கிறான்

விவசாயி தினமும்.யாருக்கோஎன்றோ!

எங்கோ அரிசியாகப் போகும்

விளைச்சலை வளர்த்திட பசியோடு!!

நீ கன்னி என‍ உன் நிழல்

மிதித்து,வ‌ட‌ம் பிடித்து வ‌ந்த‌டைந்தேன்

உன் வாச‌ல் வ‌ரை.

அப்பா என்ற‌து என்குழ‌ந்தை

இய‌ற்கை இட்ட‌ சாப‌மோ

அருவிக‌ள்

அழுதுகொண்டே ஆயுள் முழுதும்.


உன் கால் ப‌திந்த‌ முள் கூட‌

வெட்க‌த்தில் முக‌ம்(னை) சிவ‌ந்து.


கோழையின் முயற்சி கூட

வெற்றி தான் தற்கொலை


மனிதனின் முதல் தேடல் மரணம்

தேடல் கிடைத்ததில்

தொலைந்தவன்

உயிர் கொள்கிறான்.கல்லரையாக.

தழுவல்




மை இட்டு கவி எழுதி

பொய் சொல்லி உனை தழுவி

மெய்யாய் ஏங்கி நின்றேன்

அடுத்தமுறை தழுவலுக்காக.

Wednesday, October 04, 2006

வ‌டுவான‌ நினைவுக‌ள்



விரும்பி வாங்கிய விளையாட்டுப் பொருளை

தம்பி விளையாடிட கேட்டும் விட்டுக் கொடுத்ததில்லை

இதோ இன்றும் என்னிடம் ப‌த்திரமாக‌.


அண்ணன் விளையாடிட போகாதே என விரட்டியதுண்டு

விட்டதில்லை நான் விளையாட்டினை.

இதோ இன்றும்நான் விளையாட்டுப் பிள்ளை.


அம்மாவும் ஏசியதுண்டு எல்லோரிடமும் பழகாதேஎன‌

பழகியவர்களில் பலர் கயவர்களாய். இதோ

இன்று பக்குவப்பட்டவனாக பலரின் முன்னே.


அப்பாவும் அடித்ததுண்டு புகை பிடித்ததற்கு

விட்டுக்கொடுத்ததில்லை புகைப் பிடிப்பதை.

மாறாக அப்பா தான் விட்டுக்கொடுத்தார் அடிப்பதை.


கும்மாளம் போட குடித்தவேளைகளில் எல்லாம்

குருவும் கண்டித்தார்.விட்டதில்லை குடியை.

குரு விட்டுவிட்டார் கண்டிப்பதை.


அறிந்த அனைவரும் அடித்து சொல்லியும்

கெஞ்சிக்கேட்டும் விட்டுக்கொடுக்காத நான்.

உன்ஒருத்திக்கு பிடிக்காததாலே விட்டேனடி

குடி,புகை தவிர பெண்களையும்.


ஆனந்தமாய் இருந்ததுண்டு இலட்சியம் அடைந்ததாய்

நினைத்ததுண்டு உன்னை நெருங்கியதாய்.


பின்பு தான் உண‌ர்ந்தேன் நெருங்கிய‌து உன்னை அல்ல‌

தோல்வியை என்று.ஆம் உன‌க்காக நம் காத‌லுக்காக‌

என் குண‌ம் மாற்றிக் கொண்டேன் நீயோ ம‌ன‌ம்

கொண்டு மறந்திடச் சொல்லி ம‌ன்னிப்பு கேட்கிறாய்.


நீ சொல்லி நான் செய்யாத‌ ஒன்று ஏது உல‌கில்!

ம‌ற‌ந்திட‌ எண்ணி ம‌றுப‌டி ம‌துவும் புகையும்

எடுத்துவிட்டேன்,ஆனாலும் கூட‌ குடிக்க‌ முடிய‌வில்லைய‌டி


என்ன‌ செய்ய‌!!என்னுடைய‌ இதயமும் என்னிட‌ம் இல்லை

இருக்கும் உன் இத‌ய‌மும் கூட‌ என்சொல்
கேட்ப‌தில்லை.

நீ சொல்லிய‌ வார்த்தைக‌ள் ம‌ட்டும் ஓயாம‌ல்
கேட்டுக்கொன்டே

கடலே! உனக்கோர் எச்சரிக்கை




ஏய்! கடலே ஆனந்ததில் அலைகளை
அடிக்கடி அனுப்பிவைக்காதே
கரைக்கு.நீ

அன்று அள்ளிச் சென்ற
எங்களின் கண்களுக்கு

இன்று ஆண்டு
ஒன்று . இன்று

சபதம் கொள்கிறோம்.
மீன்களை

உண்ணுவதில்லை என. நீ
அள்ளிச் சென்ற

கண்களாகிய மீன்கள்
உன்னை முழுதும் குடித்து

கட்டாந்தரையாக காட்சிஅளிக்கப்போகிறாய்..
அன்று நீ அறியகூடும்அகிலத்துடன்.
மனிதனுக்கும் மீன்களுக்கும் உன்டான உறவு
பற்றி.