Search This Blog

Tuesday, September 19, 2006

புடித்த வாழ்க்கையில் வாழ்வை பிடித்து கொண்டவை

காலையில் கடமைக்கு செல்ல கண்விழிக்க பிடிக்கலை.

விழித்து குளித்துமுடித்து செல்லையிலே பிரிவு பிடிக்கலை.

பேருந்தில் பயணஞ்செய்யையிலே நெரிசல் பிடிக்கலை.

நெரிசலில் உருவாகும்வியர்வையும் சட்டைசுருக்கங்கூட பிடிக்கலை.

நேரத்தில் சென்றாலும் சிடுசிடு என்றிருக்கும் முதலாளி பிடிக்கலை.

மணமானவன் எனத் தெரிந்தும் வலைவிரிக்கும் மாதை பிடிக்கலை,

தொடங்கையிலே வரும் தொல்லை அதைத் தருபவர்களை பிடிக்கலை,

ஆசையாய் அன்பானவள் கட்டிகொடுத்த சாப்பாடும் ஆறியதால் பிடிக்கலை

வேலையை முடித்து திரும்பயிலையே மனைமக்களுக்கு இனிப்பு வாங்கமுடியாத நிலையில் இருப்பது பிடிக்கலை.

உழைத்து முடித்து களைத்து திரும்பையிலே தெருவில்
கிளம்பும் புழுதியும் புடிக்கலை.

புத்துணர்ச்சி என புகைப்பிடிப்பவன் விடும் புகையும் புடிக்கலை.

மனை வந்தவுடன் மகிழ்ச்சியை மகிழ முடியாமல் களைப்பு
கண்இணையச் செய்வது புடிக்கலை.

இப்படி தினம்தினம்பிடிக்காத இத்தனை நிலை கடந்தும்- கண்டும் ஏனோ வெளியில் சொல்லமுடியாத நிலை பிடிக்கலை.

ஆனாலும் ஏனோ தெரியவில்லை.வாழ ரொம்ப பிடிச்சிருக்குஎன்றுதான் சொல்லிக்கொள்கிறேன் எவர் கேட்டாலும்.

No comments: