Search This Blog

Wednesday, August 22, 2007

ஒரு முடிந்துபோன த‌லைமுறைத் தாயின் க‌டைசி ஆசை.


ந‌ண்ப‌ர்க‌ளே என் த‌லைமுறைக‌ளே! இது ஒரு தாய் என்னுள்
விட்டுச் சென்ற‌ க‌ண்ணீர்த் துளியின் ஒரு சொட்டு.
அவ‌ள் சிந்திய‌ க‌ண்ணீர் துளிக‌ள் க‌ட‌லையும்
ம‌ட்ட‌ப்ப‌டுத்தும்.அவ‌ள் சிந்திய‌ துளியில்
தெரித்த‌ என் சிந்த‌னைத் துளிக‌ள்.


என் பாட்டியின் பாட்டி, என்
பாட்டிக்கு கதை சொல்லி
உறங்க வைத்து அவளும் உறங்கிப்
போனாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் பாட்டிக்கு, என் பாட்டியின்
தாய் தாலாட்டு பாடி,
சீராட்டி அவளும் சீராய் இருக்க
மறந்ததில்லை
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் தாய்க்கு என் பாட்டி கதிர்
அறுத்து,
அரிசி குத்தி அழகாய் சமையல்
செய்து
அவளையும் சமைந்திடச்
செய்தாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
இன்றும் அதே
இருபத்திநான்
குமணிநேரம்தான்
ஆனாலும் தாலாட்டு இல்லை,தாய்ப்பால்
இல்லை
அவ்வளவு ஏன் குழந்தையே வீட்டில்
வளர வில்லை
.
காப்பகத்தில் பாதுகாப்பாய் வளர்ந்த
குழந்தை,
படிப்பு மட்டுமே பெற்றது பாசத்தை
இழந்து,
பண்டிகை தேதிகளில் மட்டுமே பாசத்தை
பெற்றது,
கடைகளில் வாங்கிய இனிப்பு
காரங்களுடன்
கைகளில் திணிக்கப்பட்ட
இரு நூறு ருபாய்
தாள்களில்.
தாய் தந்தை அறியவில்லை
முந்தைய
பண்டிகையின் போது திணிக்கப்பட்ட
தாளே
கசங்காமல் கணக்குப் புத்தகத்தில்
புதிதாய் புதைந்து
கிடப்பதை.

வளர்ந்த குழந்தைக்கு தோழன்
இல்லை,
தோழியும் இல்லை,தம்பி
இல்லை,
அண்ணன் இல்லை தனிமை
மட்டுமே
துணையாய் நாள் ஜந்தும்
விடுமுறை என வீடு வந்தால் அண்டை
வீட்டுக்காரனிடம் பழகிடவும் அனுமதி
இல்லை,
அது ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும்
சரி.
தொலைகாட்சிப் பெட்டி மட்டுமே
துணையானது பகல்வேளை
முழுதும்.
தொடர்கள் பாசத்தின் ஏக்கம்
கூட்டிட,
அண்டை நாட்டு
அலைவரிசகள்
ஆசை தூண்டின.பாடல்கள்
மாறின.
ஆங்கிலத்தில் அசிங்க‌மான வ‌ரிக‌ளை
கொண்ட‌ பாட‌ல்க‌ள் ப‌க‌ல் முழுதும்
ஒலித்த‌ன‌
பாடிய‌ போது கைத்த‌ட்ட‌ல்
கிட்டிய‌து
வ‌ரிக‌ளின் வ‌ன்ம‌ம்
ம‌ற‌ந்து.
எல்லாம் மாறி மாறிப் ப‌ழ‌கிட‌
த‌னிமை ம‌ட்டுமே இவ‌னுக்கு
தேவையான‌து
உட‌ன் பெண் இல்லாத‌
போதும்
பெண் உட‌ன் வ‌ந்த‌ பின்னே
தாய்
த‌ந்தைய‌ரும் தேவையில்லை
என்றான‌து.
அன்று ப‌ண்டிகைத் தேதிக‌ளில்
பிள்ளைக‌ளை
பார்க்க‌ச் சென்ற‌ன‌ர்
பெற்றோர்க‌ள்.ஆனால்
இன்றோ பாடையில் சென்றிடும்
வேளையிலும் பிள்ளைக‌ள் செல்வ‌தில்லை
ப‌ணம் ம‌ட்டும் அனுப்ப‌ப‌டுகிற‌து
ஒரு அனாதைப்
பிண‌த்திற்கு.
முதியோர் இல்ல‌ங்க‌ளில் இன்ன‌மும்
ஒலிக்கின்ற‌ன‌ ,காணாம‌ல் போன‌
தாலாட்டுக்க‌ள்
ஒப்பாரிக‌ளாய்.
ஆனாலும் கூட‌ இன்றும்
அனும‌தி சீட்டு வாங்குவது
குறையவில்லை என்றோ
முதியோர் இல்ல‌த்தில்
கைவிட்டுச்
செல்ல‌ப்போகும்
பிள்ளைக‌ளுக்காக‌.














Friday, August 10, 2007

ஓய்வில்லா காதல்

அந்த நிலவும் ஓய்வு தேடிடும்
உன் முகத்தினில் இளைப்பாறிட‌,
அந்த அலைகள் ஓய்வு தேடிடும்
உன் பாதத்தில் பள்ளி கொண்டிட‌,
அந்த காற்றும் ஓய்வு தேடிடும்
உன் சுவாசத்தில் கலந்திட‌,
அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்
உன் போல ஒருத்தியை படைத்திட‌, ஆனால்
நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்
உன்னை காதலிப்பதை விட்டு.

Wednesday, August 08, 2007

நீ என்னைத் தாங்கிட‌

நீ நடந்திட, பாதைக்கு மலர்களை
விரித்திட எண்ணினேன்.
ஆயிரம் அழகிகள் என்னிடம்
வாளேந்தி போருக்கு அழைத்தபடி.
ஆம்! நீ நடந்திடும் பாதையில்
பாயாய் விரிந்திட,தாங்கள் மலர்களை விட
எவ்விதத்தில் குறைகொண்டோர்
என குமுறலோடு.
மலருக்கும்‍-மங்கையருக்கும்
நம்மால் வேண்டாம் இனபாகுபாடு
என்றெண்னி என் கையேந்தி
எடுத்துச் சென்றேன் பஞ்சுமெத்தைக்கு.


அங்கே பருத்திக்கும்-
பட்டுப்பூச்சிக்கும்
இடையே பயங்கர கலவரம்.
உலகிற்கு இன்னும்
பல்லாயிரம்
பஞ்சுமெத்தைகள்
தேவைபடும்,
அதனால் நம்மால் பிரிவினை
வேண்டமென்று உன்னை
என் மார்பில் தாங்கினேன்.

நீ நீராடிட காவேரி கூட்டிச்
சென்றேன்.
மழையோ கோபத்துடன் தரை
இறங்கியது,
வெண்மேகத்தின் வேலியினைத்
தாண்டி.
நம்மால் மழைக்கும்-மேகத்துக்கும்
கூடாது உட்பூசல் என எண்ணி,
சமாதான கொடி காட்டினேன்
என் வெண்ணிற வேட்டி கழட்டி.

உன் கூந்தல் ஈரம் போக்கிட
முடி அவிழ்த்ததில், நெகிழ்ந்துபோன
பூங்காற்று, முடி
உலர்த்திட
ஊர்ந்து வந்திட, சூரியன்
கோபமாகி
காற்றோடு கை கலக்கப்
பார்த்திட,
வேண்டாம் நம்மால்
நாட்டினருக்கு
"பகலும் ஒரு இரவாய்" என்றெண்ணி
என்
மூச்சுக்காற்றினிலேயே
உன் கூந்தல் ஈரம்
உலர்த்தினேன்.


உடை உடுத்தி
பொருட்காட்சி
கூட்டிச்
சென்றேன்.
அழ‌குக்கு வைத்திருந்த‌
பொம்மைக‌ள்
உயிர்கொண்டு அத‌ன்
ஆடைக‌ள்
க‌ழ‌ட்டி உன‌க்கு த‌ந்திட‌ துணிய‌வே
வேண்டாம்
பொம்மைக்கும்-பொதும‌க்க‌ளுக்கும்,
பொதுக்காட்சியாய் என‌ எண்ணி
வெளிவ‌ந்தோம்.
ம‌க‌ராணி உன‌க்காய் ம‌திய‌
உணவுக்காக‌
உய்ர்த‌ர‌ உண‌வு விடுதி
நுழைந்திட‌,
உன் செவ்வித‌ழ் உர‌சி
உட்ச்சென்ற‌,
உண‌வு உற்சாக‌ம்
கொண்டிட‌,
உத‌டு உர‌சாம‌ல் உள்சென்ற‌ குடிநீர்
குமுறிட‌,
வேண்டாமே
உண‌வுக்கும்‍-குடிநீருக்கும்
உறவுமுறிவு என‌ எண்ணி
நானே உண‌வு
ஊட்டினேன்.
க‌ட‌ற்சுவாச‌ம் வாங்க‌ க‌ட‌ற்க‌ரை
சென்றிட‌,
உன்னை க‌ண்ட‌தால் உவ‌ப்பு
மிகுதியில்
வெண்ணுரையோடு நுர‌ம்பி
நெருங்கிட‌,
உன்னை கொண்ட‌தால் க‌ட‌ற்க‌ரையோ
மின்னிட‌,
க‌ட‌ற்க‌ரைக்கும்-நுரைய‌லைக்கும்
வேன்டாமே ம‌ல்யுத்த‌ம் என‌
எண்ணி
எழுந்து ந‌ட‌ந்தோம் எல்லை
நோக்கி.
வீடு திரும்பிய‌ வ‌ழியெல்லாம்
வாடிக்கிட‌ந்த‌ன‌ ம‌ல‌ர்க‌ள்.

விட்டுப்பிரிய‌ ம‌ன‌மின்றி க‌ன‌ன்ற‌
க‌ண்க‌ளோடு ம‌றைந்திடும் க‌திர‌வ‌ன்.
வீதியில் நீ நுழைந்த‌தும் தெரு விள‌க்கும்,
க‌ண்ண‌டித்து பிர‌காசிக்கும்
உன்னை க‌ண்ட‌ ம‌கிழ்ச்சியில்

உண‌வு முடித்து, த‌ரை இற‌ங்கிய‌,
ஆடைக‌ட்டிய‌ வெண்ணில‌வாய்
அறை நுழைந்தாய்.
வ‌ந்த‌வ‌ள் உன்னை க‌ண்ட‌தும்
காம‌ன் உயிர்கொண்டான்.
உன்னை மார்பில் தாங்கிய‌ என்னை
உன் ம‌டியினில் தாங்கினாய்.
ம‌டியில் கிட‌ந்த‌ என்னை
ம‌ன்ம‌த‌ன் தூன்டிவிட்டான்.
ம‌ன்ம‌த‌ன் தூண்டிய‌தில் தூண்டில்
மீனாய் நீ துடித்துப் போனாய்.
நீ துவ‌ண்டு போன‌தில்
மிர‌ண்டு போனேன் நான்.
நாளெல்லாம் நான் உன்னைத்
தாங்கிய‌ போது ,கானாத சுக‌ம்
க‌ண்டேன் நீ நாழிகை நேர‌ம்
என்னைத் தாங்கிய‌தில்.
இந்த‌ நாழிகை நேர‌த் தாங்க‌லுக்காக‌வே
நாடு முழுதும் நாளெல்லாம்
பெண்க‌ளை ராணியாக்கி
தேனியாகின்ற‌ன‌ர் ஆண்க‌ள்.

Tuesday, August 07, 2007

காத‌ல்.விஞ்ஞான‌ம் அறியாத‌ வியாதி






ஆஹா! என்ன அழகான காது,
இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்
என பலமுறை நன்றி சொல்லி
இருக்கிறேன்
இறைவனுக்கு.ஆம்

ஆயிரம் இரைச்சலிலும் பெண்களின்
குரல் மட்டும் கவர்ந்து,அந்த
குரலினை ரசிக்க வைத்ததால்.


ஆஹா! என்ன அழகான்
கண்கள்,

இறைவன் எனக்கு இட்டிருக்கிறான்
என எவ்வளவோ முறை நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

ஆயிரம் பெண்களில் அழகான்
பெண்களை மட்டும் கண்டறிந்து
களிப்படைய செய்த்தால்.


ஆஹா! என்ன உயர்வான நாசி,
இறைவன் எனக்கு நட்டிருக்கிறான்
என

நாட்கணக்கில் நன்றி சொல்லி
இருக்கிறேன் இறைவனுக்கு.ஆம்
என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து
வந்தாலும் பெண்ணின் வரவு
மட்டும்

முகர்ந்து-முகம் கண்டு, மலரச்
செய்வதால்.



ஆஹா! என்ன இதமான நாவினை
தந்திருக்கிறான், என தவம் கிடந்து
நன்றி சொல்லி இருக்கிறேன்,
இறைவனுக்கு. ஆம் சுவைக்காமலையே
பெண்னை சுவையானவள் என,
சொல்லிடச் செய்ததால்.


ஆஹா! என்ன வலிமையான வாய்,
இறைவன் அளித்திருக்கிறான்
என

அயராது அல்லும் பகலும் நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

நான் பேசிட ஆயிரம் விசயங்கள்
இருந்தாலும் பெண்களிடம்
மட்டுமே

பேசி
சிரித்திருந்ததால்.


ஜம்புலனும் அடக்கி பெண்களை மட்டுமே
பார்த்து,பேசி,கேட்டு,சுவைத்து,உணர்ந்து வந்த

நான் அடங்கிப் போனேன்.பெரியோரின்
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற விளம்பரம்
கண்டு.


ஆயிரம் பெண்களில் ஒருத்தியைத்
தேடினேன்.

ஆயிரத்தில் ஒருத்தியாய் அவள் வந்தாள்.
ஜம்புல‌னையும் அட‌க்கி அதிச‌யித்து
ந‌ன்றி சொன்ன‌ என்னையும் அட‌க்கி
விட்டாள்,

என் புல‌ன்க‌ளையும் அட‌க்கி
விட்டாள்.



ஆம் என் காதுக‌ளை
செவிடாக்கினாள்,

ஆம் அவ‌ளின் குர‌லை ம‌ட்டுமே ஏற்றுக்
கொண்டு.


என் க‌ண்க‌ள் பார்வை இழ‌ந்தன‌,ஆம்
அவ‌ளின் உருவ‌ம் ம‌ட்டும் ஏற்றுக்கொண்டு.
ம‌ற்ற‌ன‌ யாவும் காணாம‌ல்.


என் நாசிக‌ளும் உண‌ர்விழ‌ந்த‌ன‌. ஆம்
அவ‌ளின் வ‌ர‌வு ம‌ட்டும் உண‌ர்ந்து
கொண்டு

ம‌ற்ற‌ன‌ யாவும் ம‌ற‌ந்து.
.


என் நாவும் ருசியிழ‌ந்த‌ன‌.ஆம் ம‌ற்ற‌வ‌ர்
யாரையும் சுவைத்திடாம‌ல்
போன‌தால்



என் வாயும் பேச்சிழ‌ந்த‌ன‌.ஆம்
அவ‌ளை

ம‌ட்டுமே பேச‌ச்
சொல்லி,

பேச்சினை கேட்டிருந்ததால்.



ஆஹா எப்ப‌டி இருந்த‌ நான் இப்ப‌டி
ஆயிட்டேனேஎன‌ என்னைப் ப‌ற்றிய‌
ஏச்சுக்க‌ள் கூட‌ அறியாத‌வ‌னா
இருந்தேன்.



இப்ப‌டி உன் ஒருத்தியால் ஊரில்
உள்ள‌

அனைவ‌ருக்கும்
குருட‌னானேன்,
செவிட‌னானேன்
ஊமையானேன்,
உண‌ர்ச்சியும் இழ‌ந்து ந‌டைபிண‌மானேன்.
ஜ‌ம்புல‌னும் அட‌க்கி
ஆண்ட‌வ‌னுக்கு,

ஜ‌ம்புல‌னும் அட‌ங்கிப் போயின‌-
அவ‌ளின் வ‌ருகையால்.


வேண்டாம் இப்ப‌டி ஒரு காதல்
என‌,

ஒருநாள் ஒதுக்கிட‌
நினைத்து

ஒதுங்கி இருந்தேன்.அந்த‌ ஒரு நாளில்
நான் ஒழிந்தே
போனேன்.



Wednesday, July 25, 2007

உன் அப்பனுக்கு மரியாதை



சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.

உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்

சிலைகள் சிலைகளாகவே.








தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.









நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய

அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,

உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .






விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்

இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது









இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின

உன்னுடன் என்னை
கண்டதால்.

ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்

உன் அப்பனை
கண்டவுடன்.