Search This Blog

Saturday, May 05, 2007

என் ஜன்னல் வழி பார்வை.





























வேலையற்ற ஒரு வெள்ளிக்கிழமை-ஜன்னல்
வழி



வெறித்து
வேடிக்கை பார்த்தேன்
வெளியுலகை.



வெள்ளை சுடிதாரில் தேவதையாய் உன்னைக்
கண்டேன்.



வேகமாய் வெளியேறி தேரடி வீதி எங்கும்


தேடினேன் விழிகொண்டு.





பள்ளிக்கு பேருந்தில் பயணித்த போது ஒவ்வொரு
நாளும்



ஜன்னலோர இருக்கையையே நாடியது


உன்னை கண்டபின்னே-


‍எனது நண்பர்கள் மனம் போலவே.


ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்காய்


உள்ளிருக்கும் அழகிகளுடன் தோற்று


ஓடிச் செல்லும் சாலையோர அழகிகள்.



கல்லூரிக்கு புகைவண்டியில் பயணித்தபோது


படித்த மெட்டுக்கள்-
கேட்டு, மலர்ந்த
மொட்டாய்,



மலர்ந்து இறங்கி மறைந்திடும் மங்கையர்
கூட்டம்



கண்டிடவே தினம் தேடியது ஜன்னலோர
இருக்கையை.





ஆனால்!
பெண்ணே உனக்கும் ஏனோ ஜன்னல் மீது
மோகம்.



ஆம் உன் மேலாடையிலும் ஜன்னல்கள்,


ஜடையோடு போட்டி போட்ட படி-


எனக்கு ஜாடை சொல்லிய படி .



ஆண் நான் ஜன்னலில் மோகம் கொண்டதால்,


உன்னுள் மோகம் நான் கொள்ள
கொண்டாயோ?!



ஜன்னலை உன்
ஜாக்கெட்டினிலும்.






எத்தனையோ எதிர் கொண்டேன் என்
ஜன்னல் வழி



பார்வையில்.ஆனால் பட்டபகலில்
ஒரு மின்னலாய்



உன் தேகம் சிதைத்தது போல
சிதைத்ததில்லை,



என்னை வேறொன்றும்.





வின்னில்
வீசிடும் மின்னல் கீற்று, நொடியில்



மறைந்திடும் கருமேகத்தினூடே.ஆனால்


உன் தேக மின்னல் மட்டும் மறைவதே இல்லை


உன் கருங்கூந்தல் மறைத்தும் கூட.

Thursday, May 03, 2007

நினைவுகள்






சின்ன வயசுல சைக்கிள்
கேட்டேன் -கிடைச்சது,

பைக் கேட்டேன்- கிடைச்சது,
கார் கேட்டேன் -காரும்
கிடைச்சது,

பதவி கேட்டேன்- பதவியும்
கிடைச்சது.

காதல் கேட்டென் காதலும்
கிடைச்சது.

அதுக்கு மேல
கல்யானம்கேட்டேன்.

எனக்கு கிடைக்கலை-உனக்கு
கிடைச்சிறுச்சி.

இப்படி எது கிடைச்சாலும் அதுக்கு மேல
தேடுற

மனசு உன் ஒருத்தி விசயத்துல
மட்டும்,

நீ மத்தவன் மனைவி ஆன
பின்னும்,

மன்மதன் மயங்கும் மங்கையரும் களிமண்
பொம்மைகளானது ஏனடி?


எழுதுகோலுடன் எழுதுதாள்,

காதலனுடன் காதலி,

பூக்களுடன் தேனீக்கள்,

வசந்தத்துடன் வாடைகாற்று,

வானத்துடன் வானவில்,

உடல்கள் கொள்ளும் உறவு,

உதிர்ந்தோடும் காலங்கள் என

எல்லாமே நினைவுகள் என்னும்

விதைகளை மட்டும் விட்டுச் செல்கின்றன,

விதைகள் மட்டும் விழுந்த வண்ணமாய்.

Wednesday, March 28, 2007

உன் நினைவென்னும் சிலுவை






உண்மைக்கு உதாரணமாய்
அரிச்சந்திரனை

சொல்லிடும் இந்த உலகிலே , அந்த
அரிச்சந்திரனுக்கே

உதாரணமாய் என்னைத் தானடி
எடுத்துக் காட்டினர் எனது
ஊரினர்.





என்று உன்னைக் கண்டு "நீ தான்
எனது தேவதை" என்று

சொன்னேனோ அன்று முதலே எனது
நாவினிலே

நவரசமாய் பொய்கள் உன்னை
சேர்ந்திட,




உழைப்பே உயர்வு தரும் என்பதே
வேதமாய்

கொன்டு எறும்பு போல
இருந்தேனடி, என்று உன் பிரிவை

இரவில் உணர ஆரம்பித்தேனோ அன்று
முதலே

சூரியன் மறைந்ததுமே
மறுநாள் விரைவில் விடிந்திட

வீம்பாய் கண்களை இறுக்கி மூடிக்
கிடந்த முட்டாளடி நான்.




திருடனை கண்டால் காறி
உமிழ்ந்து சென்றவனடி

என்று என்னை திருடா என
அழைத்தாயோ

அன்று முதல் எனக்கு திருடன்
என்கிற

வார்த்தையே
அழகானதடி.



என் அண்ணன் என்னைபொறுக்கி போல
சுற்றித்

திறிகின்றேன் என்றதுக்கே பொசுக்கி எறிந்திட

துணிந்தவனடி நான்,ஆனால் நீஎன்னை
பொறுக்கி

என்ற போது மட்டும்
ஆயிரம் கோடி பேரில்

உன்னைபொறுக்கி எடுத்த
பாக்கியவான் என்றிருந்தேன்.






நீதிக்குப் பெயர் பெற்ற
மனுநீதிசோழனுக்கே

மாஜி மந்திரியடி நான்.ஆனால்
இப்போதெல்லாம் உனக்கு

மட்டுமே சாதகமாய்
சாட்சி சொல்கிறேனடி.





நல்லவனாய் தானிருந்தேன் உன்னை
கண்டிடும்முன்னே

திருட‌னாக்கினாய்‍-திமிரு
கொண்டேன்.

பொய்ய‌னாக்கினாய் - பொறுமை கொண்டேன்

பொறுக்கியாக்கினாய்- பொறாமை
கொண்டேன்

சோம்பேறியாக்கினாய் -க‌ன‌வினில்
மித‌ந்தேன்

வ‌ஞ்ச‌க‌னுமாக்கினாய் -வாழ்வை
உண‌ர்ந்த்தேன்

மற்றவனோடு மணம் கொண்டு,

என்னை மரணத்தில் அலைய
விட்டாயடிஉன் நினைவென்னும் சிலுவை சுமந்து.

Thursday, March 01, 2007

உனக்காக ஒரு 1,2,3.......









இந்த உலகுக்கு சூரிய கோள்கள் 9
,ஆனால்

எனக்கு மட்டும்
10-உன்னுடன்
சேர்த்து,


இந்த
உலகுக்கு அதிசயங்கள் 8, ஆனால்

எனக்கு மட்டும் 9- உன்னுடன் சேர்த்து,


இந்த உலகுக்கு கிழமைகள் 7,
ஆனால்

எனக்கு மட்டும் 8- உன்னுடன்
சேர்த்து,


இந்த உலகுக்கு
சுவைகள் 6வகைகள், ஆனால்

எனக்கு
மட்டும் 7 உன்னுடன் சேர்த்து,


இந்த உலகுக்கு நிலங்கள் 5 வகை, ஆனால்
எனக்கு மட்டும்,6வகை உன்னுடன்
சேர்த்து,


இந்த உலகுக்கு
திசைகள் 4 ஆனால்

எனக்கு மட்டும் 5
உன்னுடன் சேர்த்து


இந்த
உலகுக்கு முக்கியமான 3
கல்வி,செல்வம்,வீரம்.

ஆனால் எனக்கு மட்டும் 4 உன்னுடன் சேர்த்து


இந்த உலகுக்கு
சூரியன்,சந்திரன் என 2
உண்டு,பொழுதுகளுக்காக

ஆனால் எனக்கு மட்டும் 3 உன்னுடன்
சேர்த்து,


இந்த
உலகினருக்கு உயிர் எனபது 1,ஆனால்

எனக்கு மட்டும் 2 உண்டு.உன்னுடன்
சேர்த்து


இப்படி
அனைத்தும் அளவுக்கு அதிகமாய்
கிட்டியதடி

உன்னால் எனக்கு இந்த உலகில் ஒன்றைத் தவிர,


ஆம்.மணமாகி மங்கலமாய் நீ
இருக்க,

இரண்டு உயிரோடும்-இரண்டு மனத்தோடும்
இறந்த காலத்திலேயே இறந்து
கொண்டிருக்கிறேனடி,

உண்மையாய்
உன்னை
நேசித்ததால்.

Tuesday, January 16, 2007

நீ ஏசும் போது நானும் ஏசுவே!




எருமை மாடே!இதுதான் நீ
திட்டிய,பேசிய முதல் வார்த்தை.
நீ திட்டியதால் அனைவரும் சிரித்தனர். மறுநாள்- நீ
திட்டியபின்னே என்வீட்டு எருமைமாடும்-எமதர்மனும்
கூடஅழகாய் தெரிகிறது என்றதும், நீயே! சிரித்தாய்.





சிரிப்புடனே ஓசையின்றி வரும் தென்றலாய்
உன் நிழலோடு வடம் பிடித்து வந்தேன்.
செருப்பு பிஞ்சிடும் நாயே!
என்றாய். நீ சொல்லிய
மறுகணமே என்காலில் இருந்த செருப்பை பிய்த்து
கையில் தொங்கவிட்டபடி தொடர்ந்தேன். நீ என்னை
திரும்பி பார்த்த மறுகணமே மந்திரம் போல
வார்த்தையை உதிர்த்தேன்.
செருப்பு
பிஞ்சிடும்
என்றாய்,
இதோ! மறுகணமே பிய்ந்துவிட்டது.போதும்,
மேற்கொண்டு எதும் சாபம் விட்டுவிடாதே
என்றதும் சாந்தமாய் சிரித்துநடந்தாய்.




வரும் வழியெல்லாம் நாய் கண்டால் கல் எடுப்போர்
மத்தியிலே நானும்-நீயும் மட்டும் புண்ணகை பூண்டோம்.



மறுநாள் குளிக்காமலேயே உன்னைத் தொடர்ந்திட,
யாருமற்ற ஒரு இடத்தில்
குளிக்கலையா
அழுக்குப்பையா?
என்றாய்.இல்லை ,என்றதும் எட்டி நடந்தாய்
நக்கலோடு.
உன்நிழல் நேற்று என் உடலில் படர்ந்ததால் என்று
சற்று சத்தமாய் சொல்லிடஓடி வந்து வாயைப் பொத்தினாய்.



சந்தோசத்தில் எகிறி குதித்திட எகத்தாளத்தோடு சொல்லிப் போனாய்.நாளைக்குப்
பல்லும் தேய்க்காமல் வந்திடாதே
வாத்துமடையா!! என்று.



இந்த
வார்த்தை உன்னுள் என்னை
உறுதிப்படுத்திட உதயவனுக்குமுன்னே உதித்து விடச்செய்தது
எனது விழிகளை.விழிகளின் எரிச்சலையும் பொருட்டின்றி
உன்கூர் விழிகள் நோக்கி அம்பாய் என் அன்பினை எய்தினேன்.




கொஞ்சம் கோபம்-கொஞ்சம் நாணம் இரண்டும் சேர்ந்து
சிவந்தமுகத்தோடு சொன்னாய்.
'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்னக்
குரங்காட்டம்',



இது என்ன பதிலா? இல்லை, இதில் பதில் உள்ளதா,
என புரியாமல் அந்த நாள் முழுதும்,அழகி நீ இருக்கும்
இடம் விட்டு குரங்குகள் நிறைந்த பூங்காவில்
வாழைப்பழத்தோடும்-இஞ்சியோடும் இருந்திருந்தேன்.




அந்திவந்தும், மந்தி பல வந்தும் பதில் இன்றி பரிதாபமாய்
வீடு வந்தேன். பதிலுக்காக,பார்வையாலேயே கேட்டேன்
பரிதாபமாய் மறுநாள்.



நான், நாள் முழுதும் தேடியும் இஞ்சி தின்ன குரங்கை
பார்க்கவில்லையே நீ எங்கே கண்டாய்? என்றதும்,



பதில் இன்றி பலமாய் சிரித்தாய். இதற்கு ஏன் நாள்
முழுதும் பூங்காவில் காத்துக் கிடந்தாய்.



நாழிகை நொடிபோதுமே! நீ கண்ணாடி முன்னே
நின்றிருந்தால் என்றாய். கோபம் பொங்கிட நான்
பார்க்க-பயத்தில் மிரண்டு எட்டி நடை வைத்தாய்,
எட்டிச் சென்ற உன்னை எட்டிக் கைப்பிடித்திட,
கை உதறி போடா பொறுக்கி!
என்றாய்.



இந்த வார்த்தையை நீ சொல்லி புன்முறுவிட- புரியாமல்
தவித்த நான் வீடு வந்துதான் உணர்ந்தேன்.நீ
உதிர்த்த புன்னகையை பொறுக்கி வரவில்லை என்பதை.



எத்தனை முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் நீ
உதிர்த்த அந்த புன்னகையை என்னுடைய
படுக்கையறையில்.



வாய் வார்த்தையாய் திட்டு வாங்கிய நான் உன்னிடம்
செல்லமாய்அடிவாங்கிடத் தொடங்கினேன்.




நீ திட்டுவதற்காக ஏங்கி இருந்த கணங்கள் போல
காத்திருந்தேன், நீ செல்லமாக மார்பில் குத்தி
தலைசாய்ந்திடும் சந்தர்ப்பங்களுக்காக.




'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள், நமக்குத்தானே
தெரியும், நாற்புறமும் படபடக்க உருண்டு சுழன்ற
நம் விழிகளின் வேகம் ஒலியின் வேகத்தை விட
பன்மடங்கு அதிகம் என்பது.



எத்தனையோ இரவு நிம்மதியோடு உறங்கியிருக்கிறோம்,
யார் கண்ணிலும் சிக்கவில்லை என நினைத்து.

நீ திட்டியதாலே எருமைமாடும்-எமனும் கூட பிடித்துப்
போய்விட்டதால் ஆசிர்வாதம் கேட்டு மண்டியிட்டதுமே
உன்மாமனாருக்கும் பிடித்துவிடும் என நினைத்து
என் அப்பாவிடம் அழைத்துவந்தேன்.



பிடித்துதான் போனது என் அப்பாவுக்கும்.அதனால்
மறுமாதமே கெட்டிமேளம்.உன்னோடு அல்ல,


ஆமாம். அப்பாவுக்கு பிடித்தது உன்னை அல்ல-
அவருக்கு பிடித்தது பைத்தியம்.



உன்னை பிடிக்காத அப்பாவால், எனக்குப்
பிடிக்காதவளோடு பிடிவாதத்திருமனம்.

திட்டு வாங்குவதற்கே திவிட்டாத இன்பமாய்
காத்திருந்து திட்டும்-அடியும் வாங்கிய, நான் அன்று
ஏசுவாய் இருந்தேன் நீ ஏசிய பொழுதிலெல்லாம்.



இதோ இன்றுநீ வாழ்த்திய வாக்கியத்தில்
வாழாவெட்டியாய் வாழ்கிறேனடி.