அந்த நிலவும் ஓய்வு தேடிடும்உன் முகத்தினில் இளைப்பாறிட,அந்த அலைகள் ஓய்வு தேடிடும்உன் பாதத்தில் பள்ளி கொண்டிட,அந்த காற்றும் ஓய்வு தேடிடும்உன் சுவாசத்தில் கலந்திட,அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்உன் போல ஒருத்தியை படைத்திட, ஆனால்நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்உன்னை காதலிப்பதை விட்டு.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Friday, August 10, 2007
ஓய்வில்லா காதல்
Wednesday, August 08, 2007
நீ என்னைத் தாங்கிட
நீ நடந்திட, பாதைக்கு மலர்களைவிரித்திட எண்ணினேன்.ஆயிரம் அழகிகள் என்னிடம்வாளேந்தி போருக்கு அழைத்தபடி.ஆம்! நீ நடந்திடும் பாதையில்பாயாய் விரிந்திட,தாங்கள் மலர்களை விடஎவ்விதத்தில் குறைகொண்டோர்என குமுறலோடு.மலருக்கும்-மங்கையருக்கும்நம்மால் வேண்டாம் இனபாகுபாடுஎன்றெண்னி என் கையேந்திஎடுத்துச் சென்றேன் பஞ்சுமெத்தைக்கு.
அங்கே பருத்திக்கும்-
பட்டுப்பூச்சிக்கும்இடையே பயங்கர கலவரம்.உலகிற்கு இன்னும்
பல்லாயிரம்பஞ்சுமெத்தைகள்
தேவைபடும்,அதனால் நம்மால் பிரிவினைவேண்டமென்று உன்னைஎன் மார்பில் தாங்கினேன்.
நீ நீராடிட காவேரி கூட்டிச்
சென்றேன்.மழையோ கோபத்துடன் தரை
இறங்கியது,வெண்மேகத்தின் வேலியினைத்
தாண்டி.நம்மால் மழைக்கும்-மேகத்துக்கும்கூடாது உட்பூசல் என எண்ணி,சமாதான கொடி காட்டினேன்என் வெண்ணிற வேட்டி கழட்டி.
உன் கூந்தல் ஈரம் போக்கிடமுடி அவிழ்த்ததில், நெகிழ்ந்துபோனபூங்காற்று, முடி
உலர்த்திடஊர்ந்து வந்திட, சூரியன்
கோபமாகிகாற்றோடு கை கலக்கப்
பார்த்திட,வேண்டாம் நம்மால்
நாட்டினருக்கு"பகலும் ஒரு இரவாய்" என்றெண்ணிஎன்
மூச்சுக்காற்றினிலேயேஉன் கூந்தல் ஈரம்
உலர்த்தினேன்.
உடை உடுத்தி
பொருட்காட்சிகூட்டிச்
சென்றேன்.அழகுக்கு வைத்திருந்த
பொம்மைகள்உயிர்கொண்டு அதன்
ஆடைகள்கழட்டி உனக்கு தந்திட துணியவேவேண்டாம்
பொம்மைக்கும்-பொதுமக்களுக்கும்,பொதுக்காட்சியாய் என எண்ணி
வெளிவந்தோம்.
மகராணி உனக்காய் மதிய
உணவுக்காகஉய்ர்தர உணவு விடுதி
நுழைந்திட,உன் செவ்விதழ் உரசி
உட்ச்சென்ற,உணவு உற்சாகம்
கொண்டிட,உதடு உரசாமல் உள்சென்ற குடிநீர்
குமுறிட,வேண்டாமே
உணவுக்கும்-குடிநீருக்கும்உறவுமுறிவு என எண்ணிநானே உணவு
ஊட்டினேன்.
கடற்சுவாசம் வாங்க கடற்கரை
சென்றிட,உன்னை கண்டதால் உவப்பு
மிகுதியில்வெண்ணுரையோடு நுரம்பி
நெருங்கிட,உன்னை கொண்டதால் கடற்கரையோ
மின்னிட,கடற்கரைக்கும்-நுரையலைக்கும்வேன்டாமே மல்யுத்தம் என
எண்ணிஎழுந்து நடந்தோம் எல்லை
நோக்கி.
உணவு முடித்து, தரை இறங்கிய,
Tuesday, August 07, 2007
காதல்.விஞ்ஞானம் அறியாத வியாதி

ஆஹா! என்ன அழகான காது,
இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்
என பலமுறை நன்றி சொல்லி
இருக்கிறேன்
இறைவனுக்கு.ஆம்
ஆயிரம் இரைச்சலிலும் பெண்களின்
குரல் மட்டும் கவர்ந்து,அந்த
குரலினை ரசிக்க வைத்ததால்.
ஆஹா! என்ன அழகான்
கண்கள்,
இறைவன் எனக்கு இட்டிருக்கிறான்
என எவ்வளவோ முறை நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்
ஆயிரம் பெண்களில் அழகான்
பெண்களை மட்டும் கண்டறிந்து
களிப்படைய செய்த்தால்.
ஆஹா! என்ன உயர்வான நாசி,
இறைவன் எனக்கு நட்டிருக்கிறான்
என
நாட்கணக்கில் நன்றி சொல்லி
இருக்கிறேன் இறைவனுக்கு.ஆம்
என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து
வந்தாலும் பெண்ணின் வரவு
மட்டும்
முகர்ந்து-முகம் கண்டு, மலரச்
செய்வதால்.
ஆஹா! என்ன இதமான நாவினை
தந்திருக்கிறான், என தவம் கிடந்து
நன்றி சொல்லி இருக்கிறேன்,
இறைவனுக்கு. ஆம் சுவைக்காமலையே
பெண்னை சுவையானவள் என,
சொல்லிடச் செய்ததால்.
ஆஹா! என்ன வலிமையான வாய்,
இறைவன் அளித்திருக்கிறான்
என
அயராது அல்லும் பகலும் நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்
நான் பேசிட ஆயிரம் விசயங்கள்
இருந்தாலும் பெண்களிடம்
மட்டுமே
பேசி
சிரித்திருந்ததால்.
ஜம்புலனும் அடக்கி பெண்களை மட்டுமே
பார்த்து,பேசி,கேட்டு,சுவைத்து,உணர்ந்து வந்த
நான் அடங்கிப் போனேன்.பெரியோரின்
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற விளம்பரம்
கண்டு.
ஆயிரம் பெண்களில் ஒருத்தியைத்
தேடினேன்.
ஆயிரத்தில் ஒருத்தியாய் அவள் வந்தாள்.
ஜம்புலனையும் அடக்கி அதிசயித்து
நன்றி சொன்ன என்னையும் அடக்கி
விட்டாள்,
என் புலன்களையும் அடக்கி
விட்டாள்.
ஆம் என் காதுகளை
செவிடாக்கினாள்,
ஆம் அவளின் குரலை மட்டுமே ஏற்றுக்
கொண்டு.
என் கண்கள் பார்வை இழந்தன,ஆம்
அவளின் உருவம் மட்டும் ஏற்றுக்கொண்டு.
மற்றன யாவும் காணாமல்.
என் நாசிகளும் உணர்விழந்தன. ஆம்
அவளின் வரவு மட்டும் உணர்ந்து
கொண்டு
மற்றன யாவும் மறந்து.
.
என் நாவும் ருசியிழந்தன.ஆம் மற்றவர்
யாரையும் சுவைத்திடாமல்
போனதால்
என் வாயும் பேச்சிழந்தன.ஆம்
அவளை
மட்டுமே பேசச்
சொல்லி,
பேச்சினை கேட்டிருந்ததால்.
ஆஹா எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேனேஎன என்னைப் பற்றிய
ஏச்சுக்கள் கூட அறியாதவனா
இருந்தேன்.
இப்படி உன் ஒருத்தியால் ஊரில்
உள்ள
அனைவருக்கும்
குருடனானேன்,
செவிடனானேன்
ஊமையானேன்,
உணர்ச்சியும் இழந்து நடைபிணமானேன்.
ஜம்புலனும் அடக்கி
ஆண்டவனுக்கு,
ஜம்புலனும் அடங்கிப் போயின-
அவளின் வருகையால்.
வேண்டாம் இப்படி ஒரு காதல்
என,
ஒருநாள் ஒதுக்கிட
நினைத்து
ஒதுங்கி இருந்தேன்.அந்த ஒரு நாளில்
நான் ஒழிந்தே
போனேன்.
Wednesday, July 25, 2007
உன் அப்பனுக்கு மரியாதை

சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.
உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்
சிலைகள் சிலைகளாகவே.
தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.
நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய
அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,
உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .
விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்
இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது
இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின
உன்னுடன் என்னை
கண்டதால்.
ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்
உன் அப்பனை
கண்டவுடன்.
காதலோடு இறந்தால்

உன் புன்னகையில் தொலைந்ததால்
என் புன்னகையை
தொலைத்தவனானேன்.
உன் கண்களில் காதலை கண்டதால்
என் கண் பார்வையை இழந்தவனானேன்.
உன் சிற்றிடையின் அகலம் அறிந்ததில்
எண் கணித நீள அகல விகிதம் மறந்தவனானேன்.
உன் கூந்தல் பாயில் படுத்திருந்ததில்
என் ஆயுள் பாதி இழந்தவனானேன்.
உன் பார்வை பட்டதால் பறந்த நான்
இறகுகள் கிள்ளியதை அறியாதவனானேன்.
உன் கண்களில் நீர் கசிந்ததால்
அழகு மழையும் ரசிக்க கசந்தவனானேன்.
உன் உடன் இருந்த போது இழந்ததை
எண்ணி அழவில்லை ஒருநாளும்.
நீ உன் மாமன் மகனுக்கு தான் என
பெற்றோர் உயில் சொல்வதாய் சொன்னபோதே
என்
உயிரும் போய்விட்டது.
இனி இழந்திட ஏதுமில்லை வாழ்வில் .
நான் கர்ணன் ஆகவும் பிறக்கவில்லையடி,
கவச
குண்டலம் கூட இல்லையடி என்றேன்.
என்னை கர்ணன் ஆக்கி,
காதலை கவசகுண்டலமாக்கி
காதலை கொடுத்திடு என்றாய்.
நானும் கொடுத்து விட்டேன்.
நீயும் எடுத்து செல்கிறாய்.
எடுத்து செல்வது என் உயிர்
என தெரியாமலையே.
காதலோடு இறந்தால் காதலித்தவன்
எல்லாருமே கர்ணன் தான்.