Search This Blog

Tuesday, August 07, 2007

காத‌ல்.விஞ்ஞான‌ம் அறியாத‌ வியாதி






ஆஹா! என்ன அழகான காது,
இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்
என பலமுறை நன்றி சொல்லி
இருக்கிறேன்
இறைவனுக்கு.ஆம்

ஆயிரம் இரைச்சலிலும் பெண்களின்
குரல் மட்டும் கவர்ந்து,அந்த
குரலினை ரசிக்க வைத்ததால்.


ஆஹா! என்ன அழகான்
கண்கள்,

இறைவன் எனக்கு இட்டிருக்கிறான்
என எவ்வளவோ முறை நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

ஆயிரம் பெண்களில் அழகான்
பெண்களை மட்டும் கண்டறிந்து
களிப்படைய செய்த்தால்.


ஆஹா! என்ன உயர்வான நாசி,
இறைவன் எனக்கு நட்டிருக்கிறான்
என

நாட்கணக்கில் நன்றி சொல்லி
இருக்கிறேன் இறைவனுக்கு.ஆம்
என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து
வந்தாலும் பெண்ணின் வரவு
மட்டும்

முகர்ந்து-முகம் கண்டு, மலரச்
செய்வதால்.



ஆஹா! என்ன இதமான நாவினை
தந்திருக்கிறான், என தவம் கிடந்து
நன்றி சொல்லி இருக்கிறேன்,
இறைவனுக்கு. ஆம் சுவைக்காமலையே
பெண்னை சுவையானவள் என,
சொல்லிடச் செய்ததால்.


ஆஹா! என்ன வலிமையான வாய்,
இறைவன் அளித்திருக்கிறான்
என

அயராது அல்லும் பகலும் நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்

நான் பேசிட ஆயிரம் விசயங்கள்
இருந்தாலும் பெண்களிடம்
மட்டுமே

பேசி
சிரித்திருந்ததால்.


ஜம்புலனும் அடக்கி பெண்களை மட்டுமே
பார்த்து,பேசி,கேட்டு,சுவைத்து,உணர்ந்து வந்த

நான் அடங்கிப் போனேன்.பெரியோரின்
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற விளம்பரம்
கண்டு.


ஆயிரம் பெண்களில் ஒருத்தியைத்
தேடினேன்.

ஆயிரத்தில் ஒருத்தியாய் அவள் வந்தாள்.
ஜம்புல‌னையும் அட‌க்கி அதிச‌யித்து
ந‌ன்றி சொன்ன‌ என்னையும் அட‌க்கி
விட்டாள்,

என் புல‌ன்க‌ளையும் அட‌க்கி
விட்டாள்.



ஆம் என் காதுக‌ளை
செவிடாக்கினாள்,

ஆம் அவ‌ளின் குர‌லை ம‌ட்டுமே ஏற்றுக்
கொண்டு.


என் க‌ண்க‌ள் பார்வை இழ‌ந்தன‌,ஆம்
அவ‌ளின் உருவ‌ம் ம‌ட்டும் ஏற்றுக்கொண்டு.
ம‌ற்ற‌ன‌ யாவும் காணாம‌ல்.


என் நாசிக‌ளும் உண‌ர்விழ‌ந்த‌ன‌. ஆம்
அவ‌ளின் வ‌ர‌வு ம‌ட்டும் உண‌ர்ந்து
கொண்டு

ம‌ற்ற‌ன‌ யாவும் ம‌ற‌ந்து.
.


என் நாவும் ருசியிழ‌ந்த‌ன‌.ஆம் ம‌ற்ற‌வ‌ர்
யாரையும் சுவைத்திடாம‌ல்
போன‌தால்



என் வாயும் பேச்சிழ‌ந்த‌ன‌.ஆம்
அவ‌ளை

ம‌ட்டுமே பேச‌ச்
சொல்லி,

பேச்சினை கேட்டிருந்ததால்.



ஆஹா எப்ப‌டி இருந்த‌ நான் இப்ப‌டி
ஆயிட்டேனேஎன‌ என்னைப் ப‌ற்றிய‌
ஏச்சுக்க‌ள் கூட‌ அறியாத‌வ‌னா
இருந்தேன்.



இப்ப‌டி உன் ஒருத்தியால் ஊரில்
உள்ள‌

அனைவ‌ருக்கும்
குருட‌னானேன்,
செவிட‌னானேன்
ஊமையானேன்,
உண‌ர்ச்சியும் இழ‌ந்து ந‌டைபிண‌மானேன்.
ஜ‌ம்புல‌னும் அட‌க்கி
ஆண்ட‌வ‌னுக்கு,

ஜ‌ம்புல‌னும் அட‌ங்கிப் போயின‌-
அவ‌ளின் வ‌ருகையால்.


வேண்டாம் இப்ப‌டி ஒரு காதல்
என‌,

ஒருநாள் ஒதுக்கிட‌
நினைத்து

ஒதுங்கி இருந்தேன்.அந்த‌ ஒரு நாளில்
நான் ஒழிந்தே
போனேன்.



Wednesday, July 25, 2007

உன் அப்பனுக்கு மரியாதை



சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.

உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்

சிலைகள் சிலைகளாகவே.








தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.









நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய

அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,

உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .






விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்

இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது









இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின

உன்னுடன் என்னை
கண்டதால்.

ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்

உன் அப்பனை
கண்டவுடன்.

காதலோடு இறந்தால்











உன் புன்னகையில் தொலைந்ததால்
என் புன்னகையை
தொலைத்தவனானேன்.



உன் கண்களில் காதலை கண்டதால்
என் கண் பார்வையை இழந்தவனானேன்.


உன் சிற்றிடையின் அகலம் அறிந்ததில்
எண் கணித நீள அகல விகிதம் மறந்தவனானேன்.



உன் கூந்தல் பாயில் படுத்திருந்த‌தில்
என் ஆயுள் பாதி இழந்தவனானேன்.




உன் பார்வை பட்டதால் பறந்த நான்
இறகுகள் கிள்ளியதை அறியாதவனானேன்.



உன் கண்களில் நீர் கசிந்ததால்
அழகு மழையும் ரசிக்க கசந்தவனானேன்.



உன் உடன் இருந்த போது இழந்ததை
எண்ணி அழவில்லை ஒருநாளும்.


நீ உன் மாமன் மகனுக்கு தான் என
பெற்றோர் உயில் சொல்வதாய் சொன்னபோதே
என்
உயிரும் போய்விட்டது.




இனி இழந்திட ஏதுமில்லை வாழ்வில் .
நான் கர்ணன் ஆகவும் பிறக்கவில்லையடி,
கவச
குண்டலம் கூட இல்லையடி என்றேன்.


என்னை கர்ணன் ஆக்கி,
காதலை கவசகுண்டலமாக்கி
காதலை கொடுத்திடு என்றாய்.
நானும் கொடுத்து விட்டேன்.
நீயும் எடுத்து செல்கிறாய்.
எடுத்து செல்வது என் உயிர்
என தெரியாமலையே.
காதலோடு இறந்தால் காதலித்தவன்
எல்லாருமே கர்ணன் தான்.

Friday, July 20, 2007

ஆண்டவன் அறியாத அழகு









நீண்ட கருங்கூந்தல் அழகு‍- மேகத்தினை
விட‌,



நான் பார்ப்பதை உளவு
பார்க்கும்


கண்கள் அழகு- காத்திருக்கும் கொக்கினை
விட‌,



ஆசையின் அளவாய் நீ சுழிக்கும்
முகச்சுழிப்பு அழகு- தேய்கின்ற நிழவினை
விட‌,



நாசி நுனிவரை
வந்துசெல்லும்

கோபம் அழகு- பாம்பு சீறுவதை
விட‌,



எனை கண்டதும் விரியும்
இதழ்கள் அழகு - மொட்டு மலர்வதை
விட‌,



நான் தரும் மஞ்சள் கயிறு
தாங்கிட

காத்திருக்கும் கழுத்து அழகு-
கடல் கொண்டசங்கினை விட‌,



வெண்மையோடு மென்மையான
கைகள் அழகு- வென்பஞ்சினை
விட‌,



சிக்கனத்திற்கு சிறப்பான
சிற்றிடை அழகு- புள்ளியை
விட‌,



வாலிபம் கூறிடும் வழவழப்பான
கால்கள் அழகு -பச்சை வாழைத்தண்டினை
விட‌,



பாதங்கள் கொண்ட விரல்கள்
பத்தும் அழகு- விரிந்து சென்றிடும் கிளைகளை
விட‌,



மறைத்து வைத்த அங்கமோ அழகோ
அழகு-

அருங்காட்சிய
பொருள்களைவிட‌,



இத்தனை அழகும் கொண்ட உன் மனம்



என்னை விரும்பியதே அதுதான் உலக‌
அழகு,

அந்த ஆண்டவனே அறியாத
அழகு.


Monday, July 09, 2007

சகலமாய் நீ வாழ







ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்ச

இடமெல்லாம் என்னோட கண்ணீரால

நிரம்பி போச்சுடி கொதிக்கிற‌ கோடையிலும்
கூட

பாதியில‌ விட்டுபுட்டு ப‌ரிஸ‌ம் போட்டு
ம‌றுவீடு போன மாம‌ன் ம‌வ‌ளே உன‌க்கு

ம‌ட்டும் வ‌யிறு நிற‌ம்பிப் போச்சுடி
நான் வாடையிலும் கூட‌
ப‌ய‌புள்ள‌ நீ வ‌ந்த ப‌ச்ச‌ வ‌ய‌
ம‌ன‌சு
த‌றுசா தான்டி போச்சு உன்
நினைவூத்துச் சொற‌ந்த‌
போதும்
நெஞ்சுகுள்ள‌ வாரிசும்கூட வ‌ந்தாச்சு
நான் உன்னைய திரும‌ண‌ம்
செஞ்சிகிடாத‌ போதும்

யார‌டிப் புள்ள‌
குத்த‌ஞ்சொல்ல?

உன்னையா? இல்லை
என்னையா?

இல்லை உதிர‌ம் சுண்ட‌
சுண்ட‌

உற‌வுக‌ள்
குறைந்த‌தையா?
ம‌டியில‌ த‌லவெச்சி
கெட‌ந்த‌ப்ப‌வே
பாவிம‌வ‌ நீ,
கெஞ்சிக்கேட்டும்

த‌ந்திட‌ல‌ உன‌க்கொரு
ம‌ஞ்ச‌க்க‌யிறு

தாலிகொடி கேட்ட‌
உன‌க்கு ஒரு கொடில‌
ம‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் ஒட்டி
உற‌வாட கொடி

ஒன்னும் தேவையில்லடி

காற்று போதும் உரசி
உறவாட என்றேன்.
அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
பாலாப்போன மனுச சாதிக்கு

கயிறு தான் முக்கியம்னு சொல்லிப்புட்டு

கயிறு தந்த பங்காளி பயலோட நீ போயிட்ட.

நீ சொன்னதாலையே என்னவோ

புலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்

உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறை

என் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டி

இன்னோரு ஜென்மம்தேடி
சகலமா நீ வாழ‌
நான் சாகுறேன் சாதியால‌