Search This Blog

Saturday, January 06, 2007



உள்ளத்தின்அலைகளாக எண்ணங்களை ஏற்படுத்துகிறாயே
இடைவிடாது நீ! என்ன கண்ணில் காணமுடியாத கடலா?
இல்லை என்னுள் இறக்கைகொண்ட இன்னொருவனா?

கூடாது!! என கூறியதை சிந்திக்காமல் செய்யதூண்டுகிறாயே!
நீஎன்ன மேதையா? இல்லை மேதாவியா?
உண்மையில் உன் உருவம் தான் என்னவோ?

உன்னை அடக்கி வைக்க எண்ணிய என்னI
அறுபதுநொடிகள் அலைகழித்து‍‍‍‍ அடங்கி
அமைதியாகி ஏங்கவைக்கிறாயே என்னை!
உன் எண்ணஅலைகளுக்காக‌!!

நீ என்ன பாசமலரா? இல்லை!
பாசங்கு செய்யும் பகலவனா?
உனக்கு இல்லையோ? உலகின் மீது வெறுப்பு!!
அனைத்தையும் அடைய ஆசை கொள்கிறாயே.
முடியாது போனால்அழசெய்கிறாயே என்னை.

நீ என்ன என்னுள் உண்டாகிய‌ உள்ள ஊற்றா?
,உசுப்பேற்றிடிடும்உறவா? இல்லை உளவாளியா?
மலைதாண்டிபறக்க செய்கிறாய்.
பாலையிலும் பானகம் தருகிறாய்.

பதில் கேட்டால் மட்டும் மனமே !!
மெளனம் கொள்கிறாயே!! ஏன்?
உன்னை குரங்கு எனச்சொல்லி குரங்காட்டியாய்
இருக்கச் சொன்னோர் ஏராளம். ஆனால்
நீ தானே ஏவுகிறாய் எல்லோரையும்
எல்லா செயலுக்கும்.

நீ என்ன மனிதனை மறைந்திருந்து
வேலை வாங்கும் முதலாளியா? இல்லை
முந்திச்செல்லும்முதல்வனா?

மனமே மெளனம் இன்றி என் இறைச்சல் அடக்கிடு.

Friday, January 05, 2007

நானும் I.A.S.




உன் நினைவுகள்- அது என்றைக்குமே எனக்கு ரணங்கள்தானடி
உனக்கு அந்த கணங்கள்
நினைவிருக்குமோ?அல்லது நீ
நினைத்துப் பார்த்திட நேரம் இருக்குமோ?
எனக்குத்
தெரியாது.ஆனால்- அந்த நினைவின்
ரணங்கள்-கணங்களின் வலி தெரியுமடி எனக்கு.



"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்" என்ற
வரியினை தந்தவர் யாரென்றே
அறிய இயலாத
வயதிலே முதன் முதலில்,உன்னை கண்ட கணங்கள்
கண் எதிரே கனவாய்
காட்சி தருகுதடி.


அழகு என்ற சொல்லின் விளக்கம் விளங்காத வயதிலேயே
நீஎன்னுள் விதைத்துவிட்டாய்.நீ தான் அழகின்உருவம்
என்றகிற விதையை.இதோ அந்த
விதை இன்று
என்னுள் நினைவு என்னும் இலைகளை
உதிர்த்த இலையிதிர்கால மரமாய்.



ஓரளவு என்னை அறிந்த வயதில் நீயோ
என்னைவிட்டு
தொலைவில். அந்த வயதில் அழகு என்பதை ஆராய்ந்ததில்
உன்னுருவம்
ஓடிவந்து ஒளிர்ந்திட ,உன்னைத் தேடுவதே
இமைகளின் பணியானது.இமைகள் இரண்டும்
இணையவில்லை உறக்கத்திலும்.ஆம் கனவில்
உன் உருவம் வரும்என்பதால்.

அன்று முதல் தேட ஆரம்பித்தேன்
உன்னை.அன்று
தெரியவில்லை நான் தேடியது உன்னை அல்ல
துன்பத்தை என!


கல்வி கற்றிடும் பருவத்தில் உன் காலடித் தேடி
காம்பெளண்ட் கம்பிகளுக்கு
கம்பெனி கொடுத்து
கல்வியின் தரத்தினை இழந்த்தை தந்தை
சுட்டிக்காட்டிய
போதும் உணரவில்லை.


அப்பாவின் ஆசை கனவு நான் I.A.S ஆவது.அவரின்
ஆசை
கனவுஉடைந்து போனது நான்+2 வில் தோற்றபோது.
+2 வில் தோற்ற நான் காதலில்
ஜெயித்து, உன்னுடன்
+2 ஆனதால், ஆனந்தத்தில் I.A.S போல
அதிகாரம் பன்னினேன்
உன்னிடத்தில்.


அப்பா கண்டிப்பதை விட்டுவிட்டார்.நீயோ கண்டுகொள்ள
ஆரம்பித்தாய்.அப்பாவின்
கண்டிப்பு இழந்ததற்கே
உன் கண் அசைவு கிட்டியதால்
எதையும்
இழந்திட துணிந்தேன்.

"ஒன்றைஇழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்" என்ற
மொழிமட்டுமே பொன்மொழியானது.ஆனால், உன்
ஒருத்தியை பெற நான் இழந்தது
ஓராயிரத்துக்கும் மேல் என்று உன்னையும்,
இழந்தபின்பு தான் தெரிந்தது.


படியினில் பந்தாவாக தொங்கி பயணஞ்செய்த
நாட்களில் பார்த்து ரசித்த
நீ-படியில் நிற்காதே எனச்
சொல்லியதால் சட்டை கசங்கியபடிஎத்தனையோ முறை
நெருக்கடியில் நெருங்கி நின்றிருக்கிறேன்.


ஸ்டைல் என்ற பெயரில்
உன்கவனம் கவர எத்தனையோ
முறைசிகரெட்டை வைத்து சாகசம் செய்த வேளைகளில்
கீழே
விழுந்தசிகரெட் எடுத்து மறுபடி வாயில் வைக்க சிரித்தாய்.
பின்நாட்களில்சிகரெட்
பற்றி பேசினாலே பார்வையாலே எரித்தாய்.


பொங்கல் பண்டிகையின் போது அனிதாவின்
வீட்டிற்கு
விருந்தாளியாய் வந்த நீ நிதானம் இன்றி போதையில்
நடந்து வந்தவர்
செய்த கோமாளித்தனத்தை நீ ரசித்திட-
பயத்துடன் பாதி குடித்து வந்த எனக்கு
மற்றுமொரு
கும்மாங்குத்து இனிமேல் குடிக்கக் கூடாது என!!


இப்படி நீ
சொன்னதெல்லாம் யோசிக்காமல் நிறைவேற்றிய
நான் உன்னை மணந்திடும் வரம் கேட்க- நீயோ
உன்னை மறந்திடும் வரம்கேட்டாய்!!!


உனக்காக இழப்பதையே பலனாய் கொண்ட நான்
முதன்முதலாய் காரணம் கேட்டேன்.அழகாக சொல்லி
அழச் செய்தாய் என் மனதினை.


நீ ஒரு I.A.S மாப்பிள்ளையை மணந்திட உன் அப்பா
ஆசைபடுவதாய்.
இன்றும்
நினைக்கிறேன்

ஒருவேளை
நானும் பேருந்தில் தொங்காமல்,கீழே விழுந்த
சிகரெட்
குடிக்காமல்,மது பழகாமல்,
அப்பாவின் ஆசைப்படி அறிவாய் படித்திருந்தால்


உன்னோடு சேர்த்து உன் அப்பாவும் என்மேல்
ஆசைப்பட்டு மாப்பிள்ளை ஆக்கி
இருப்பாரோ!!!
என இப்போதும் நினைக்கிறேனடி.


ஊருக்கும் உலகுக்கும்
வேண்டுமானால் நான் I.A.S இல்லாமல்இருக்கலாம்.உன்

Iதயத்தை
Aட்சி Sசய்தவன்
ஆதலால் நானும் I.A.S தானடி.

இதனால் உன் நினைவுகள்
என்றும் ரணங்கள் தானடி
எனக்கு .


Tuesday, December 05, 2006

அறியாத அறிவாளிகள்








நினைத்தாலே கண்கள் மட்டுமல்ல என்
பேனாவும்
கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி அது. நீ வீடு காலி செய்து
பக்கத்து
டவுனுக்கு பயணப்பட்ட நேரம், பள்ளிவிடுமுறை
நாளான போதும்கூட நண்பர்கள் உடன்
அரட்டை அடிக்க
ஆற்றங்கறை சென்றிடாமல், அத்தனை தட்டுமுட்டுச்
சாமான்களுடன்,
நீயும் ஏறும்வரை கண்கள் கலங்கிட
காத்திருந்தேன். உன் அப்பா கொடுத்த ஜ்ம்பது
ரூபாயை


வாங்க மறுத்த என் கைகள், நீ
கொடுத்த ஜந்துரூபாயை


அழுதகண்ணோடு வாங்கி
கொன்டேன.இன்னமும் உன்


கைரேகை அழியாமல் உறையிட்டு
பத்திரப்படுத்தி வருகிறேன்.




நீ பெரியவளாகிவிட்டாய் என்று விசேஷ
அழைப்பு


வீட்டுக்கு வர, அம்மாவிடம்
ஆயிரம்முறை


விசாரித்திருக்கிறேன்
உன்னைப்பற்றி.


எத்தனையோ தடைகளுக்குப் பிறகு உன்னை,


உன்வீட்டில் சந்தித்திட உன்
அண்ணனின்


திருமனநிச்சயம் வழிசெய்தது.வீட்டில்


அத்தனையும் புதியமுகங்களாயின
உன்னைத்தவிர.


யாரிடமும் விசாரிக்க மணம்இன்றி
உன்னைத்தேடி


அலைந்த விழிகள் இதயத்தை
இரும்பாக்கியது.




நான் உன்னைத்தேடி வருவேன் என


அறிந்தவள் போலே-கரைஒதுங்கிய
வெண்சங்காய்,


மாமரத்தின் கீழே கிடந்த இலைகளை
கிள்ளி


எறிந்தவாறே தலைகுனிந்தபடி இமைகள்
விரித்தாய்.




விண்மீன்களை எண்ணி சொல்லச்சொல்லி
இருந்தால்


கணநொடியில் எண்ணி சொல்லி
இருப்பேன்.ஆனால்


நான் பேச வந்த வார்த்தைகள்,அதை
எவ்வளவு என


எழுதினால் யுகங்கள் பல
வேண்டும்.எழுதிட, கடல்நீரே!


"மை" ஆனாலும் கூட போதுமா என்பது
சந்தேகமே!.


ஆனால் அத்தனை வார்த்தையும்
இரண்டு


நிமிட மெளனத்தில்
இடம்மாறின.




எப்படியோ!! உன்னைப்பற்றி வருகின்ற
செய்திகளை


மட்டுமே என்காதுகள் கேட்பது போல,
மற்றன எதையுமே


கேளாமல்-நீ படித்திடும் பள்ளியில்
சேர ஆசைப்பட்டேன்.


என்ன செய்ய நான் "ஆடவன்" ஆனதால்
உன்னுடன்


சேர்ந்து படிக்க இயலாது உன்னை
மட்டுமே


படித்தேன் பள்ளிவாசல்களில்
காத்திருந்து.




உன் அண்ணன் அயல்நாடு சென்றிட,
உன்னையும்


அயல்நாட்டிற்கு அழைத்திட, அவன்
நண்பனை உன்னை-


கேட்காமலையே உறுதி செய்யத்
தொடங்கினார்கள்.


இந்த விசயம் அறிந்த நீயோ படிப்பினை
தவிர்த்தாய்.


நானோ விசயம் அறிந்து
துடித்தேன்.


நீயோ விஷத்தை
கையிலெடுத்தாய்.


என் உயிர் கெட்டியோ என்னவோ


உனக்கு ஒன்றும் ஆகிடவில்லை அன்று.




என் அம்மா-அப்பா எவ்வளவோ
சொல்லியும்


கேட்காமல் உன்னைத்தேடி உன்
இல்லம் வந்த


நான் அசிங்கப்படுத்தப்பட்டேன்
உன்பெற்றோர்களால்.


நீ மண்டியிட்டு கேட்டும்
மசியாத உன்பெற்றோர்கள்,


கையில் அட்சதைக்குப் பதிலாய் உயிர்
மாய்த்திடும்


வழியில் விஷம் கையிலெடுக்க,
விதியை நொந்து


நீ சொன்ன சொல் எல்லாம்
தானே


இன்றைய என்
செல்வங்கள்.




திருமணம் ஆகியும் உன் மனம்
மாறவில்லை.


பணம் பலகண்டும் என்னுடைய
காதல்மனமும்


மாறவில்லை.!


"இன்னமும்
காதலிக்கிறேன்-


உன்னைப் போலவே
நானும்,"


அந்த ஜந்து ருபாய் தாளை
தடவியவண்ணம்.


உன்னை
மணக்காததால்!!


நானோ கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரி. நீயோ


மணமாகியும் மங்கலம் சூடிடாத
நெற்றிக்காரி-


திலகம் நான் இடாததால்.




நீ குங்குமம் சூடிடாதற்கு மதம்
காரணமாம்.


நான் மணம் கொள்ளாதற்கு ஜாதகம்
காரணமாம்.


காதலை அறியாத
அறிவாளிகளுக்கு.

Wednesday, November 29, 2006

கா(கல்)தல் மனம்




சின்னஞ்சிறு வயது முதலே நீ தானே என்ன்னுடைய பாதி.
அம்மா ஆசையாய்
தந்த அதிரசம்,

அம்மாவுக்காக பாதி
தின்று மீதிபாதி உனக்கு தந்தேன்.ஆனால்
மீதிப்பாதியில்
பாதி எனக்கு தந்து தலைகோதினாய்.

நானோ

எச்சில் கசக்குதோ
என்றேன் நக்கலாய்.

கோபமாய் சிரிப்பாய்.


நீ சாப்பிடாமல் முழுதாய் கொன்டுவந்ததை
முழுதாய் தின்றுவிட்டு
மண்டையில் கொட்டினேன்,ஏன்!?
இன்னொன்று
கொண்டுவரவில்லை என!



பள்ளியில் அனைவரும் சுற்றுலா செல்ல பணம்

தர மறுத்த
தந்தையை உன்னிடம் திட்டிய கணங்களில்
நீ தான் பணம் கொடுத்தாய் கட்டிடச்
சொல்லி.

அப்பா
ஏது பணம் எனக்கேட்டால் சொல்லிட, காரணமும் கற்பித்தாய்சிறுசேமிப்பை
சுட்டிக்காட்டி.


பேருந்தில் என் அருகில் இருந்த காலி இடத்தை
கண்கொட்ட பார்த்திருந்தாய். உன் அருகில் இடம்
காலியாயிருக்க வேகமாய்
வந்தமர்ந்திட,

அன்று
அகிலாண்டம் டீச்சர் அடித்த பிரம்படியால் எத்தனை
நாட்கள்உன்பிஞ்சு கைகளால்
வருடிக் கொடுத்திருப்பாய்.


நீ மகளிர்
பள்ளிக்கு சென்றிட என்னுள் ஒரே சந்தோசம்.
உன் பேர் சொல்லி தினம் தினம் பல
பெண்களை
ஓரக்கண்ணால் கற்பழித்திருக்கிறேன்.அதை
உன்னிடம் சொல்லியபோதெல்லாம்
முதுகில்
வேகமாய் தட்டினாய்.

நானோ நீ செல்லமாய்
தட்டி ரசிப்பதாய்
நினைத்திருந்தேன்.


கவர்ச்சி என புகைப்பிடித்திட கன்னத்தில் அறைந்து
பிடுங்கி எறிந்தாய் தரையில்.

கோபத்தில் திருப்பி
அடித்தேன் அப்போதும்
சிரித்தாய்.மன்னிப்பு கேட்டிட,

குடிக்கமாட்டேன் என உறுதி
கூறியதால் உத்தரவு
தந்தாய்.


வேலை கிடைத்து பார்ட்டி என்ற பெயரில் மது அருந்திட,
நீ அறிந்து வந்து கண்கள் கலங்கி சிவந்திருக்க
குடிக்காதே என்றாய்.ஆனால்

நானோ வழக்கம் போல
நீ என்ன சரக்கு அடிச்சே! உன்கண்கள்
இப்படி சிவந்திருக்கு என்றேன்.


உலர்ந்த புன்னகை உதிர்த்து குடிக்காதே என்றாய்.
அப்போதும் கூட ஓ!! நீ அவ்வளவு அனுபவசாலி ஆயிட்டியோன்னு அதட்டலோடு
ம் ம்ம் எவ்வளவு குடிக்கிறாய்!
எவ்வளவு காலமாய் குடிக்கிறாய்?என்றேன்

.
நீ கோபப் பார்வை வீசிட சுருண்ட என்
முகம் கண்டு சரி எப்போதாவது ஒருமுறை குடி என அனுமதி தந்தாய்.


அப்படியான
ஒருநாளில் மதுவுடன் மாதுவும் இணைந்திட சந்தோசத்தின் உச்சியில் ஊரான்
சொல்லும்முன் ஓடிவந்து உன்னிடம் தான் சொன்னேன் உற்சாகத்தோடு.


உதறித்தள்ளி தலையை கவிழ்ந்து கொணடு
"பாதுகாப்போடு தானே" என்றாய் குரல்
குழைந்தபடி.ஆனால்
நானோ பின்மன்டையில்
தட்டி வெட்கத்தைப் பாரு புள்ளைக்கு என்றேன்.


அன்றைக்கு தெரியவில்லை இந்த மரமண்டைக்கு
நீ அழுதுகொண்டிருக்கிறாய் என்று.



வேலை காரணமாய் வெளிநாடு சென்றிட,
விட்ட அனைத்தும் தொடர்ந்திட உன்னிடம் ஓடி வரும்
நாளுக்காய் காத்திருந்து, ஓடி வந்தேன்
ஒருநாள் உன் வீட்டுக்கு மூச்சிரைக்க!


எப்படி இருக்கிறாய் என்றேன்?பதில் சொல்லாமல்,
நீ எப்படி இருக்கிறாய்?
என்றாய். நல்லா இருக்கேன்.
உன்கிட்ட நிறைய சொல்லனும் என்றேன். ஆனால்
நீயோ என்னிடம் ஒன்னே ஒன்னு சொல்லனும் என்றாய்.

முதன்முதலாய் உன்னை முதலில் சொல்ல
சொல்லி காத்திருந்தேன்.
மெளனமே காத்தாய்.நான் உன்னை உலுக்கி சீண்டிட
உன் அறைப்பக்கம் வந்த உன் தம்பிதான் சொன்னான் .மாப்பிள்ளை இன்னும் பத்து
நிமிடத்தில் வர இருப்பதாய்.

ஆனந்தத்தோடுதான் கைகுழுக்கினேன்

"வாழ்த்துக்கள்" என்று.
சரி நீ சொல்லு எவ்வளவோ சொல்லணும்னு
சொன்னியே!

இப்போ சொல்லுறியா இல்ல
சாயங்காலம் சொல்லுறியா என்றாய் ஏக்கத்தோடு.

எவ்வளவோ சொல்ல வந்த எனக்கு
எதுவுமே சொல்ல வராமல் வேகமாய் வீடு

திரும்பியதும் அழுகைதான் வந்தது
அடக்கமுடியாத அளவுக்கு ஆறாக.


ஏன் அழுகிறேன் என யோசித்தபோது தான்
உணர்ந்தேன்,நீ இப்படி

எத்தனை முறை அழுதிருப்பாய் என்று.போதும் . இனியும்
நீ, என்னால் அழுதிடவேண்டாம் இன்னொருமுறை
.அதனால் தான் கண்ணீர் விட்டு
கதறியதை கூட காகிதத்தில்

கல்லறையாக்குகிறேன்
காத(க)ல்மனதோடு.

Saturday, October 28, 2006

மையால் மெளனமான மனம்


























  1. நீ காற்றானதால் நான் உன்னை
    மட்டுமே
    சுவாசிக்கும்
    புல்லாங்குழலாய்.


    வானமும்
    வறுமையில்!
    நிலவில்
    பாதியை காணவில்லை!

    உன்
    நினைவுகளில் என்னை
    உருக்கிக் கொண்டு- காதல் என்னும்
    வெளிச்சத்தில் கனவு
    என்னும்
    இருட்டிலேயே!மெழுகுவர்த்தியாய்.


    சிரிப்பிலே உண்மை எது?
    குழப்பத்தில் நான்.
    பைத்தியம்
    கண்டு சமுதாயமா?
    சமுதாயம் கண்டு பைத்தியமா?

    தீக்குச்சிகள்!முடிந்தவரை இருட்டோடு
    போராடும் போராளிகள்.

    புற்களை கிள்ள கிள்ள
    கிளர்ந்தெழுகிறதே!
    மண் மேல் காதலோ!


    உன்னை தேவதை என்றதால்
    தேவதாஸ் ஆனவன் நான்

    பாலையிலே ஒரு சோலை!
    கனியோடும் மலரோடும்
    கள்ளியும் கற்றாழையும்
    கைகோர்த்தபடி!

    வாழ்வை மற்றவர்களுக்காவே
    வாழும் தியாகி
    விருப்பம் இல்லையெனினும் மற்றவன்
    பொருளையும் விழுங்கிடும் கயவாளி

    இரவு நேர உழைப்பின் களைப்போ
    புற்களுக்குபனித்துளிகள் வியர்வையாய்