Search This Blog

Monday, July 09, 2007

சகலமாய் நீ வாழ







ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்ச

இடமெல்லாம் என்னோட கண்ணீரால

நிரம்பி போச்சுடி கொதிக்கிற‌ கோடையிலும்
கூட

பாதியில‌ விட்டுபுட்டு ப‌ரிஸ‌ம் போட்டு
ம‌றுவீடு போன மாம‌ன் ம‌வ‌ளே உன‌க்கு

ம‌ட்டும் வ‌யிறு நிற‌ம்பிப் போச்சுடி
நான் வாடையிலும் கூட‌
ப‌ய‌புள்ள‌ நீ வ‌ந்த ப‌ச்ச‌ வ‌ய‌
ம‌ன‌சு
த‌றுசா தான்டி போச்சு உன்
நினைவூத்துச் சொற‌ந்த‌
போதும்
நெஞ்சுகுள்ள‌ வாரிசும்கூட வ‌ந்தாச்சு
நான் உன்னைய திரும‌ண‌ம்
செஞ்சிகிடாத‌ போதும்

யார‌டிப் புள்ள‌
குத்த‌ஞ்சொல்ல?

உன்னையா? இல்லை
என்னையா?

இல்லை உதிர‌ம் சுண்ட‌
சுண்ட‌

உற‌வுக‌ள்
குறைந்த‌தையா?
ம‌டியில‌ த‌லவெச்சி
கெட‌ந்த‌ப்ப‌வே
பாவிம‌வ‌ நீ,
கெஞ்சிக்கேட்டும்

த‌ந்திட‌ல‌ உன‌க்கொரு
ம‌ஞ்ச‌க்க‌யிறு

தாலிகொடி கேட்ட‌
உன‌க்கு ஒரு கொடில‌
ம‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் ஒட்டி
உற‌வாட கொடி

ஒன்னும் தேவையில்லடி

காற்று போதும் உரசி
உறவாட என்றேன்.
அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
பாலாப்போன மனுச சாதிக்கு

கயிறு தான் முக்கியம்னு சொல்லிப்புட்டு

கயிறு தந்த பங்காளி பயலோட நீ போயிட்ட.

நீ சொன்னதாலையே என்னவோ

புலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்

உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறை

என் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டி

இன்னோரு ஜென்மம்தேடி
சகலமா நீ வாழ‌
நான் சாகுறேன் சாதியால‌

Friday, June 29, 2007

காதல்-கத்திவெட்டுஅல்ல-அது கல்வெட்டு







ஊரினில் உள்ள வாலிப பட்டாளமே
பின்
தொடர்ந்திடும் கட்டழகி நீயடி.ஆனால்
நானோ பறந்திடும் காகமும் கறைந்திடும்
தன்
இனமோ?! இவன்! எனுமளவு கருப்புமண்ணு .

என்மீது எப்படியடி காதல் கொண்டாய்
என்றேன்.
ஒன்றா? இரண்டா? எதனைச் சொல்ல,
எப்படிச் சொல்ல
என்றாய்?
ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தேன்
என்றேன்

வாலிப பட்டாளமே என் பின்னே வர
நீ மட்டும் முன்னே
நடந்தாயே பாராமல்,
அதனை சொல்லவா என்றாய்.நானோ
சில்மிசத்தோடு சிரித்தேன்
கோபமாய் வினவினாய் காரணத்தை.

உன் பின்னே நடந்து வந்தால் உன் பின்னழகில்
மயங்கி மதியற்ற கற்பனையில் காமத்துப்பாலில்
வள்ளுவரிடம்
வாக்குவாதம் கொண்டு உன்
பின்னழகுக்கு இன்னுமொரு அத்தியாயம்
கேட்டு
இறந்தவன் கையில் என் எழுத்தானி
தினிக்கிறது
என்றதும்,புரிந்ததோ-‍புரியலையோ,
புரிந்தும் புரியாத
மாதிரி கோலம் போடுவதற்கு
பதிலாய் விரலால் கோடுகள்
தீட்டினாய்

உனக்கு முன்னமே நடந்து சென்றிட்ட நேரம்
என்
பாதம் முள் தைத்திட பதறிப் போய்
பார்த்து நடந்திட கூடாதா என்றாய்?
பார்த்து
தான் நடந்தேன். நீ என் பாதச்சுவடு
மிதித்து நடந்து வருவதை,
என்றதும்
பைத்தியம் போல வழிந்தாய்

பள்ளி செல்லும் போதும் சரி,பேருந்து ஏறிட,
நீ ஏறிச் சென்றிடும் பேருந்துக்கு முன்னமே ஏறி,
நீ ஏறிடும் நிறுத்தம் தாண்டி
இறங்கி- நீ ஏறிடும்
பேருந்துக்காக காத்திருந்திருக்கிறேன்
காலை
வேளைகளில்

ஜன்னலோரம் அறிந்த பாவைகள்
அமர்ந்திருந்தும் கூட
அளித்ததில்லை.
நான் கொண்டு வரும் புத்தகத்தினை.ஆம்
புத்தகம் முழுதும்
புதைந்திருப்பாய்
நீ உன் பெயரால

தியேட்டருக்கு சென்றிடுவாய்
திருட்டுதனமாக-
தோழிகளுடன், தோழிகள் தொல்லை
என
நினைத்தவாறு.

புரிந்தும் படம் பார்க்காமல் பார்வை
பரிமாறுவாய்.
நானோ புரியாத படத்தினை புரிந்தவன் போல
கற்பனை
கொண்டு பரிமாறிய பார்வையொடு
பாரிஸில் இளைப்பாறி இருப்பேன்
.
திருமணத்துக்கே சென்றிடாதா
செல்லாக்காசு நான்.
நீ ஒரு ஞாயிற்றுகிழமை திருமணத்துக்கு
சென்றிட யாரென்றே
அறியாதவர் திருமணத்துக்கே
ஜிவ்வென கிளம்பியவனுக்கு ஜாக்பாட் அடித்தது.ஆம்
அன்று தான் என்னை பலநாள் பழகியவன் போல
உன் தோழியிடம்
அறிமுகம் செய்துவைத்தாய்.
எனக்கே தெரியாமல் எத்தனையோ முறை
வாழ்த்தி
இருக்கிறேன் அந்த தம்பதிகளை.

உனக்கென நான் என‌ ஆன பின்னே
தொடர்ந்த
வாலிப கூட்டம் வழிவிட்டு விலகி நின்றது,
மச்சக்காரன் நான் என மனதில் கருவியபடி

எப்படியடி என்னை இத்தனை நாளாய்
மனதில்
மறைத்திருந்தாய் என கேட்டேன்.
நீயோ மெளனம் காத்தாய்.
பதில்
இல்லாத வருத்தத்தில் மெல்லமாய்
புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்
என்
குழல் இசை கேட்டு தென்றலும் ஓடி வந்திட
விலகிய உன்
தாவனியில் என் விடை கிடைத்தது
ஆம் மெல்லிய நூலாடையில் இருமலைகளை
மறைத்திருக்கும் உனக்கு இம்மலையை
மறைத்திருந்ததில்
வியப்பென்ன
!

மணி நேரம் குளித்துப் பழகிய நாம்,
நம்
கடவுளின் வரவால் ஒரு பத்து நிமிடம்
கூட குளிக்காமல் மணிக்கணக்கில்
மறைந்திருந்தோம் குளியலறையில்
தண்ணீர் திறந்துவிட்டபடியாய்

சோப்பு மறக்காமல் எடுத்து செல்வோர் மத்தியில்

செல்போன் எடுத்து சென்று
காக்கை இனமானோம் குளித்திடும்
முறையினால்

கடவுள் கண்டாலே கேள்வி கேட்டிடும்
பெரியார்
வழிவந்த திராவிடன் நான்
காதல் வந்ததில் கடவுளை கண்டவன்
ஆனேன்
கிரஹாம் பெல் கடவுள் ஆனார்.
அழைப்பு மணி ஆலயமணி
ஆனது
.வரும் அழைப்பு உனதானதால்
அது கடவுளின் குரல்
ஆனது.




எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம்
பெற்றோர்களை,
எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம் நண்பர்களை,
எப்படி தோன்றுமோ
தெரியவில்லை
எண்ணங்கள் நமக்குள்ளே
எல்லோரையும் ஏமாற்றினோம்
ஏமாறுகிறோம் எனத் தெரியாமலையே
இதயத்தை திருடிட திருட்டினை கற்று கொண்டேன்
பேசாது
தொடர்ந்த நாட்களில் பொய்
பேச கற்றுகொண்டேன்
கற்று கொண்ட எல்லாமே
மறந்து
போயின காதல் வந்த பின்னே


காதல் வந்த பின்னே சொந்தமும் மறந்தது
பந்தமும்
மறந்தது கல்யானம் வந்த போது
ஏனோ காதலும் மறந்தது‍ கூடவே
காதலனும் மறந்துபோயினான் அவளுக்கு

அவளின் கல்யாணத்தின் போது மறைத்த
காதல்
மட்டும் மறக்க முயன்றும் முடியாமல்
மண்டிக் கிடக்கு மலை போல
மனதுக்குள்ளே


கவிதைத்தாள் தானேன்னு கசக்கி
எறிய
முடியவில்லை
கத்தி வெட்டுன்னு மருந்தும்
போட முடியவில்லை
முறிஞ்சி
போன காதல் கவிதையுமல்ல
கத்திவெட்டுமல்ல‌ அது கல்வெட்டு.
காதலி
மண்ணோடு மடிந்த பின்னும்
தோண்டி எடுக்கப்படும்
நினைவுகளால்
.

Wednesday, June 20, 2007

காதல்-அது விடியாத விடியல்








பிடிக்கலை! பிடிக்கலை!! எனக்கு
பிடித்தவளின்
குடும்பத்துக்கு என்னை பிடிக்கலை, பிடிக்கவே
இல்லை.


துடிக்கலை! துடிக்கலை!! கண் அசைத்தவள்
கைவிட்டு
சென்றதும் துடிக்கலை இதயம் துடிக்கவே
இல்லை.


அடங்கலை! அடங்கலை!! அவள் நினைவென்னும்
துடிப்பு வாழ்க்கையில் அடங்கவேயில்லை.



முடியலை! முடியலை!! அவள்
நினைவுதனை
மறந்திட
முடியலை.முடியவேயில்லை.




வழியில்லை! வழியில்லை!! வந்துவிடு
என்னோடு என
சொல்வதற்கு ஒரு வழியும்
வாய்க்கவேயில்லை



துணிவில்லை த்ட்டிச்சென்றவனை எட்டி
மிதித்து
தாலி கட்டி அணைத்திட துணிவில்லை.
துணிவுசொல்ல அவளும் உடன்
இல்லை.



பிழையில்லை! பிழையில்லை!! அது
பிழையேயில்லை,
அவளை கொன்றால் அது கொலையும் இல்லை.



மனமில்லை மனமில்லை மணமேடையை
பினமேடையாய்
மாற்றி இணைந்திறந்திட மனமில்லை.



புரியலை! புரியலை!! என்ன செய்வது என
புரியவே இல்லை,
தெரியலை! தெரியலை!! எவருக்குமே விடை
தெரியவேயில்லை,
விடையில்லை! விடையில்லை!! காதல் தோல்விக்கு
விடையேயில்லை.



விடியலை! விடியலை!! விஞ்ஞானம் வளர்ந்த
பின்னும் விடியலை.
விருப்புண்ட மனங்கள் இணைந்து இன்புற்றிட
இதுவரை ஒரு
விடியல் விடியவே இல்லை.
லைலா மஜ்னு தொட்டு நம் காதல்
வரை.

Tuesday, June 19, 2007

பூஜையும்‍ பூ அல‌ங்கார‌மும்.


மலர்கள் மலர்ந்த வேளையில் தேனைத்

திருடிச் செல்லும் திருட்டுக்கூட்டம்
என மலர்கள் புகாரிட,


சேகரித்ததை சிரமம்பாராமல்

சீசாவிலைடைத்து சில்லறை பார்க்கும் அவனை

கயவன் என தேனீ புகாரிட,


தன்னை ஏழையாய் ஏன் ப்டைத்தான் என

ஏழை ஆன்டவனை புகாரிட

எப்படி அழைப்பது சாட்சிக் கூண்டிற்கு

சம்மந்தமானவைகளை


எந்த‌ கால‌த்து நாட்டாமை எழுதிய‌ தீர்ப்போ!

மல‌ர்க‌ளை பூஜைக்கு என‌வும்,

தேனியை ஊழிய‌னாக‌வும்,

அவ‌னுக்கு தொழிலாக‌வும் தீர்ப்பு ஆன‌தால் வ‌ந்த‌தோ

பூஜையும்‍ பூ அல‌ங்கார‌மும்.

Monday, June 18, 2007

காதலின் தூது‍ காமத்தில் கேது






என்னைச் சுற்றி ஆயிரம வண்ணத்துப் பூச்சிகள்,
என்னை சிறை எடுத்திட‌
.ஆமாம்!!
உன் இதழில் நான் தேன் எடுத்ததால்.



மலர்களுக்கு கூட நாம்
குற்றவாளி ஆனோம்.
ஆமாம்- மகரந்தச் சேர்க்கையின் மகத்துவம்
குறைகின்றதாம்
நாம் கூடும்போது.



காற்றுக்கு கூட நாம் இருவரும் பகைவர்களானோம்.
ஆம் நம்
நெருக்கத்தில் காற்றின் பயணம்
இடர்படுகிறதாம் இறுக்கியணைத்த வேளைகளில்.


சுடும் தீ‍க்கும் கூட திருடர்களானோம். ஆம்-நம்
காமச் சூட்டின் அனல்
நாம் தீயிடம் திருடியதாம்.


அனைத்தால் அணைந்து போகும் அந்த
தீ அறியுமா?
அணைத்தால் கூடிப்போகும்
நம் சூட்டின் ரகசியம்.


நீருக்கும் கூட தீராத
கோபம் . ஆமாம்-
நீரும் புகுந்திடாத இடங்களில் நான்
அத்து மீறி நுழைந்து
ஆட்டம் போடுவதால்.
நான் என்ன செய்ய!!


இன்று சிறை எடுக்க வரும்
வண்ணத்துப்பூச்சிகள்,
அன்று ஆள் அரவம் கேட்டு நமக்காய்
காவல் காத்தது ஏன்?


இன்று குறை சொல்லும் மலர்கள் அன்று
உனக்காய் பறித்தபோது
சிரித்திருந்தனவே.
சிரித்த மலர்கள் சினம் கொள்வதில் நியாயம் என்ன?


காற்று,நாம் அன்று தள்ளித் தள்ளி அமர்ந்திருந்த
வேளைகளில் உன்
துப்பட்டா பறந்து வந்து
என் முகம் மூடியிருக்கக் கூடாது.


உன்னை
தொடர்ந்ததால் விழுந்த தீச் சூட்டிற்கு
வலி வழிமாறி போனதே உன் இதழ் அணைப்பில்.


இன்று கோபம் கொள்ளும் நீர் அன்று காவிரியில்
குளிக்கயில் நீர் அள்ளி
இறைத்து பேசிக் கொண்டநேரம்
நெருங்கி இருக்கக் கூடாது உன் மார்பினை.


இப்படி எல்லாமே எதிர்க்கின்றன
தீ, நீர்ப்பரப்பினைப் போல‍- உன் அப்பனைப்
போல‌
ஆனால் நான் கேட்கிறேன் இதேப் பிற‌ப்பினை அடுத்த‌ப் பிற‌ப்பிலும்
.