Search This Blog

Thursday, October 11, 2007

க‌விச் சித‌ற‌ல்


நிழல் கூட காதலில்.ஆமாம்

உன் பிரிவில் சிறியதாகி விட்டதே!



பிரம்மன் படைத்ததும் பிரமித்து தன்
இயலாமை நொந்து, இட்ட சாபமோ
அவளின் அழகை அனைவரும்
வருணித்து.





வேலை தேடி அலைந்ததை விட
உன்னைத் தேடி அலைந்ததே
அதிகம்.

இரண்டுமே கிடக்கவில்லை.
வேலை இல்லாமல் அவளும்-
அனுபவம் இல்லாமல்
வேலையும்.



விண்-மண்,வானவில்-மேகம், நட்சத்திரம்- நிலவு,

மழை- அலை, என எல்லாம் பிடித்த உனக்கு,

ஏனோ என்னைப் பிடிக்கவில்லை.

உன்னை மட்டுமே பிடித்த எனக்கு மட்டும்,

பைத்தியம் பிடித்தது.ஆனால் மாற்றங்கள் மட்டும்

எதுவும் இல்லை நான் பைத்தியம் ஆன போதும்.

என்னை மறந்த நிலையில்,உன் நினைவில்.




பொய் முன்னே மெய் தோற்ற உணர்வு.
உன்னை அழகி என்ற போது.
அழகு போலி என
எனக்கு உணர்த்திய வனப்பூ நீ.


சின்னதாய் நீ சிரித்த சிரிப்பில்
சிறையில் அறையப்பட்டவன் நான்.
யேசுவவும் நாங்களும் ஒன்று தான்.
உன் நினைவென்னும் சிலுவை சுமப்பதால்.



சின்னதாய் புண்ணகைத்து புயலாய்
புகுந்து கொண்டவள் புதிர்
போடுகிறாள்.

"முடிந்தால் கண்டுபிடி"நான் வந்த வழியை
என?




பெண்ணே உறக்கமும் நீயும் வேறில்லை.
இரக்கமற்று வராமல் துடிக்கச் செய்வதும்
வந்ததும் சுகமாய் என்னை மறக்கச் செய்வதும்.



பிரசவ வலியில் துடித்தவள் அமைதியானாள்,
குழந்தையின் அலறல் கேட்டதில்.
குழந்தையின் அலறல் மட்டும் ஓயவே இல்லை
ஒருத்தனை மணந்த பின்னும்.


கோழையின் முதல் முயற்சி தற்கொலை.


பால்ய‌ம் முத‌ல் பருவ‌ம் வ‌ரை தொலைத்த‌ன,

எல்லாம் புதிதாய் பெற்றேன்.

பெற்றோரின் அன்பினால்.

ப‌ருவ‌த்தில் என்னைத் தொலைத்தேன் உன்னிட‌ம்.

திரும்ப‌ பெற‌வே இல்லை.

என்னை ம‌ட்டும‌ல்ல‌, பெற்றோரின் அன்பையும்.




யாரோடோ கொண்டு விட்ட‌
காத‌லால்-

கைகுழ‌ந்தை பெறும்
முத்த‌ம்,

யாரோ நட்டுச் சென்ற‌
ம‌ர‌த்தால்-

ந‌டைப‌ய‌ணி பெறும்
நிழ‌ல்,

யாரோ பொழுதுபோகாம‌ல் த‌ன்
மெய்ஞான‌த்தால் தொட‌ர்ந்திட்ட‌
விஞ்ஞான‌ம்,

பொறாமை பொங்கிட‌ வ‌ள‌ரும்,
விஞ்ஞான‌ம் த‌ரும் ப‌ல‌ன்
இதோ! இன்று ம‌னித‌ இன‌த்தின்
வ‌ர‌வான‌

அந்த‌ கைக்குழ‌ந்தையே, உட‌ல்க‌ள்
சேராம‌ல்

தேவைக்கு ஏற்ப‌ செய்ய‌ச் சொல்லுத‌லை
என்ன‌வென‌ சொல்வ‌து?.
விஞ்ஞான‌த்தின் சாத‌னை
என்றா?இல்லை

இறைவ‌ன் இவ‌னுக்கு இட்ட‌ சோத‌னை
என்றா?



த‌பால் த‌லைக‌ளை சேக‌ரித்த‌வ‌ன் பைத்திய‌மாய்.

இன்று உன் த‌லை உதிர்ப்பூக்க‌ளை சேக‌ரிக்கிறேன்

வைத்திய‌மாய்.உன்னை காத‌லிப்ப‌தால்.




சிரித்து சூரிய‌ஒளி வீசிய‌ போது
அறிய‌வில்லை குடிசைவாசி,
கூரையின் ஓட்டையை.
அழுது வான‌ம் பொழிந்த‌ போது ம‌ழை
அறிய‌வில்லை குடிசையும்
இல்லாத‌வ‌ர்க‌ளை.




நீ க‌விதை ப‌டிப்ப‌தால், நான் க‌விதை ப‌டைக்கிறேன்.

அப்ப‌டியாவது என் பெய‌ரை நீ உச்ச‌ரித்திட‌.


நீ அழ‌காய் இருப்ப‌தால் நான் உன்னை

காத‌லிக்க‌வில்லை.

உன் காத‌லால் காத‌ல் அழ‌காகிற‌தே,

அத‌னால் உன்னை காத‌லிக்கிறேன்.


ஆடை அது எத்த‌னையோ முறை த‌டையாய்

உன் வெட்க‌த்தினைப் போல‌.

மூடி நீ வைத்திருந்தும் காற்றால் ச‌ற்றே

வில‌கி ச‌லாம் போடும் நீ மூடி வைத்த‌ முன்ன‌ழ‌கு.

ஆனால் என்னை க‌ண்ட‌தும் உன் வெட்க‌த்திற்கே

முலாம் போடும் உன் விர‌லும் இத‌ழும்


நாத்தீக‌ம் பிடித்த‌ என்னை ஆத்தீக‌ம் பிடித்த‌

நீ பிடித்தாய்.உன் தாம‌த‌த்தால் உத‌டுக‌ள்

தானாக‌ ஓதுது ம‌ந்திர‌ம் உன் வ‌ர‌வுக்காக‌.


நான் அமைதியாய் ப‌டிப்ப‌தாய் என் பெற்றோர்க‌ள்.

நான் உன் பெய‌ரை உச்ச‌ரிப்ப‌து அறியாம‌ல்.


எறும்புக்கு இனிப்பு பிடிக்கும் என்ப‌தால்

இர‌வெல்லாம் நான் உற‌ங்காம‌ல் உன்அருகில்.

காவ‌ல் இருக்கிறேன் உன்னை காதலிப்ப‌தால்.


திரும‌ண‌த்தில் சாப்பிடாம‌லையே எழுந்து

வ‌ந்த‌தில் பொல‌ம்பிய‌வ‌ன் அறிய‌வில்லை.

எடுத்துச் சென்று திண்ற‌ ஏழை வாழ்த்திய‌தை.


ஆண்டுக‌ள் மாறியும் மாறாத‌ புண்ண‌கையோடு

அவ‌ள் ம‌ட்டும் அதே சுவ‌ற்றில்.என்னை போல‌வே

என் அறைத்தோழ‌ர‌யும் நிர்வாண‌மாய் ர‌சிக்கிறாள்.


நான் சொன்ன‌துக்கெல்லாம் த‌லையாட்டி

சிரித்த‌வ‌ள் நீ.இதோ இன்று என்னை க‌ண்டாலே

சிரித்திடும் ஊரார் ம‌த்தியில் நீ ம‌ட்டும் க‌ண்க‌ள்

க‌ல‌ங்கி செல்வ‌தை அறியாத

நிலாக் காத‌ல‌ன் அல்ல‌- நான் உன் நிழ‌ல் காத‌ல‌ன‌டி.

Thursday, September 20, 2007

வாழ்த்துகிறேன் நீ தழைத்த இந்நந்நாளில


இந்த உலகில் நான் பிறக்கும் முன்னே கேள்விகள் தான் பிறந்தனவோ என்னவோ!என்னுள் அத்தனை ஆயிரம் கேள்விகள்
தாயின் ம‌டியில் க‌ருத்த‌ரித்த‌வுட‌னே என் தாய்க்கு ஒரு கேள்வி எழுந்த‌து.அது நான் ம‌ண் க‌ண்டு அல‌றிய‌தில் ம‌றைந்த‌து
இப்ப‌டி தோன்றிய‌ ஆயிர‌மாயிர‌மான‌ கேள்விக‌ள் அவ்வ‌ப்போது ம‌றைந்து போயின‌ம‌றையாத‌ கேள்விக‌ள் ம‌ட்டும் ம‌ன‌தில் குடிகொண்டு தாண்ட‌வ‌மாடின‌ உன்னை அறியாத‌ வ‌ரையில்
நில‌வு யாசித்திடும் முக‌ம்சூரிய‌ன் ப‌ய‌ந்து ந‌டுங்கிடும் பார்வைவிண்மீன்க‌ள் விய‌ந்திடும் புண்ண‌கைக‌ழுத்து க‌ண்ட‌தில் க‌ட‌லுக்க‌டியில் ஒளிந்த்திட்ட‌ ச‌ங்குஇத‌ழ்க‌ள் க‌ண்ட‌ சிப்பியும்,ப‌ல்வ‌ரிசை க‌ண்ட‌ முத்தும் கூட‌ க‌ட‌லுக்க‌டியில் க‌ல‌ந்துஆலோசித்த‌ப‌டி இருக்க‌
உருவ‌ம‌ற்ற‌ காற்றோ உருவ‌ம் கேட்டு உன்னை தொட‌ர்வ‌தால் இவ்வுல‌கே வாழ்ந்து கொண்டுநிறமற்ற நீரும் உன் நிறம் கேட்டுத் தானே மழையை தூது அனுப்புது உன் காலடி பட்ட இடங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டுஇவையெல்லாம் சரி கடவுள் ஏன் புவி வரவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வரவில்லை.பதிலாய் வாதம் தான் வந்ததுவாதத்தில் வலுத்தது நாத்தீகமே.நானும் நாத்தீகனே கடவுளை காணாத வரையில்உன்னை கண்டவுடன் நானும் ஆத்தீகன் ஆனேன்.அந்த கடவுள் ஏன் புவி வரவில்லை என்ற காரணமும் கண்டேன்.அந்த கடவுளின் அவதாரமாய்புவியில் நீ இருப்பதால் என்பதால் என உணர்ந்தேன்இதோ உன்னை கண்டதால் நான் ஆத்தீகன் ஆனதுபோல இவ்வையமே நாத்தீகம் அற்று ஆத்தீகம் தழைக்க தரணீயில் நீ வளர்ந்து தரணியை வாழ வைக்க வந்தவளே என வாழ்த்துகிறேன் நீ தழைத்த இந்நந்நாளில்.

Thursday, September 06, 2007

கவித்துளிகள்


என்னிள் உன்னைத் தொலத்ததால்
உன்னுள் புது உயிர். குழந்தை




உன் மை விழிப்பார்வையால்
myவிழிப்பார்வை இழந்தது



கவிதை! நீ கண்ணீர் சிந்தினால்
என் பேனா சிந்தும் மை
கூட‌ கவிதையே

தான் விழித்துக் கொண்ட‌தால்

அனைவ‌ரையும் விழித்திட‌ச் செய்யும்விடிய‌ற்காலை
விரோதி.



சிறைக்குள் சில்மிஷ‌ம் செய்யும்

காத‌ல் ஜோடிக‌ள் க‌டிகாரம்


ஊர்,பெய‌ர் தெரியாத தேடி வ‌ந்த‌
எல்லோருக்கும்

ஆம்ப‌ள‌ அம்மா.
ச‌மைய‌ல்கார‌ன்



காலையில‌ மூதேவின்னு திட்டுன‌ புருச‌ன்,
ராத்திரி ராசாத்தின்ன‌தும் சொக்கிப் போயி
ம‌டியில‌ விழுகிறாள்.
இன்னொரு ராச‌த்தி வ‌ராதிருக்க‌.


என்னைப் ப‌ற்றி நானே க‌வ‌லைப்ப‌டாத‌
போது என்னைப் ப‌ற்றி க‌வ‌லை கொண்ட‌வ‌ள்
காத‌லை கொண்ட‌தால்.

ஆடையும் வெட்க‌மும் ஒன்று
தான்.

எத்த‌னையோ முறை த‌டைக‌ளாய்
ந‌ம‌க்குள்.



தடைக‌ளை த‌க‌ர்த்திட‌ உன் முந்தானை
பிடித்து இழுத்தேன். புற‌முதுகுகாட்டி நின்றாய்,
முக‌த்தினைப் பொத்தி வெட்க‌த்தில்.


க‌த்தியால் என்னை குத்தும்போதும்
காலாட்டிய‌ப‌டி நான். க‌ன‌வில்


விசா இல்லை,விமான‌ப் ப‌ய‌ண‌ம் இல்லை.
நான் ம‌ட்டும் அய‌ல்நாட்டில்,
ஜந்து நிமிட‌ப் ப‌ய‌ன‌த்தில்.


க‌ன‌வில் சிரித்துப் பேசிய‌வ‌ள்
முறைத்துப் போகிறாள் நேரில்.
வாங்கிய‌ முத்த‌த்தைதிருப்பிக் கொடுக்காத‌தால்.


செய்யாத‌ கொலைக்கு,இல்லாத‌ நீதிம‌ன்ற‌த்தில்
வாதாடும் எல்லாக் குடிம‌க‌னும் அம்பேத்கார் தான்.

நில‌வில் வ‌டைசுட்டு விற்ப‌தாய்,
பாட்டி க‌தை சொன்னாள்.
பாட்டியும் ம‌ற‌ந்து போனாள்.
க‌தையும் ம‌ற‌ந்து போன‌து,
நில‌வு உன்னை நேரில் க‌ண்ட‌தால்.


யார் வைத்த‌ ம‌ர‌மோ?.ந‌ம் பெயர் இணைந்திட‌
வ‌ளர்ந்து நிற்கிற‌து த‌னிமையாய்,
ந‌ம் எதிர்கால‌ம் சொல்லிய‌ப‌டி.

சிரித்தால் ஆயுள் கூடும் என்ப‌து

அறியாத‌ வ‌ரைகுழந்தையும் சிரித்தது.

Wednesday, August 22, 2007

ஒரு முடிந்துபோன த‌லைமுறைத் தாயின் க‌டைசி ஆசை.


ந‌ண்ப‌ர்க‌ளே என் த‌லைமுறைக‌ளே! இது ஒரு தாய் என்னுள்
விட்டுச் சென்ற‌ க‌ண்ணீர்த் துளியின் ஒரு சொட்டு.
அவ‌ள் சிந்திய‌ க‌ண்ணீர் துளிக‌ள் க‌ட‌லையும்
ம‌ட்ட‌ப்ப‌டுத்தும்.அவ‌ள் சிந்திய‌ துளியில்
தெரித்த‌ என் சிந்த‌னைத் துளிக‌ள்.


என் பாட்டியின் பாட்டி, என்
பாட்டிக்கு கதை சொல்லி
உறங்க வைத்து அவளும் உறங்கிப்
போனாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் பாட்டிக்கு, என் பாட்டியின்
தாய் தாலாட்டு பாடி,
சீராட்டி அவளும் சீராய் இருக்க
மறந்ததில்லை
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் தாய்க்கு என் பாட்டி கதிர்
அறுத்து,
அரிசி குத்தி அழகாய் சமையல்
செய்து
அவளையும் சமைந்திடச்
செய்தாள்
அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
இன்றும் அதே
இருபத்திநான்
குமணிநேரம்தான்
ஆனாலும் தாலாட்டு இல்லை,தாய்ப்பால்
இல்லை
அவ்வளவு ஏன் குழந்தையே வீட்டில்
வளர வில்லை
.
காப்பகத்தில் பாதுகாப்பாய் வளர்ந்த
குழந்தை,
படிப்பு மட்டுமே பெற்றது பாசத்தை
இழந்து,
பண்டிகை தேதிகளில் மட்டுமே பாசத்தை
பெற்றது,
கடைகளில் வாங்கிய இனிப்பு
காரங்களுடன்
கைகளில் திணிக்கப்பட்ட
இரு நூறு ருபாய்
தாள்களில்.
தாய் தந்தை அறியவில்லை
முந்தைய
பண்டிகையின் போது திணிக்கப்பட்ட
தாளே
கசங்காமல் கணக்குப் புத்தகத்தில்
புதிதாய் புதைந்து
கிடப்பதை.

வளர்ந்த குழந்தைக்கு தோழன்
இல்லை,
தோழியும் இல்லை,தம்பி
இல்லை,
அண்ணன் இல்லை தனிமை
மட்டுமே
துணையாய் நாள் ஜந்தும்
விடுமுறை என வீடு வந்தால் அண்டை
வீட்டுக்காரனிடம் பழகிடவும் அனுமதி
இல்லை,
அது ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும்
சரி.
தொலைகாட்சிப் பெட்டி மட்டுமே
துணையானது பகல்வேளை
முழுதும்.
தொடர்கள் பாசத்தின் ஏக்கம்
கூட்டிட,
அண்டை நாட்டு
அலைவரிசகள்
ஆசை தூண்டின.பாடல்கள்
மாறின.
ஆங்கிலத்தில் அசிங்க‌மான வ‌ரிக‌ளை
கொண்ட‌ பாட‌ல்க‌ள் ப‌க‌ல் முழுதும்
ஒலித்த‌ன‌
பாடிய‌ போது கைத்த‌ட்ட‌ல்
கிட்டிய‌து
வ‌ரிக‌ளின் வ‌ன்ம‌ம்
ம‌ற‌ந்து.
எல்லாம் மாறி மாறிப் ப‌ழ‌கிட‌
த‌னிமை ம‌ட்டுமே இவ‌னுக்கு
தேவையான‌து
உட‌ன் பெண் இல்லாத‌
போதும்
பெண் உட‌ன் வ‌ந்த‌ பின்னே
தாய்
த‌ந்தைய‌ரும் தேவையில்லை
என்றான‌து.
அன்று ப‌ண்டிகைத் தேதிக‌ளில்
பிள்ளைக‌ளை
பார்க்க‌ச் சென்ற‌ன‌ர்
பெற்றோர்க‌ள்.ஆனால்
இன்றோ பாடையில் சென்றிடும்
வேளையிலும் பிள்ளைக‌ள் செல்வ‌தில்லை
ப‌ணம் ம‌ட்டும் அனுப்ப‌ப‌டுகிற‌து
ஒரு அனாதைப்
பிண‌த்திற்கு.
முதியோர் இல்ல‌ங்க‌ளில் இன்ன‌மும்
ஒலிக்கின்ற‌ன‌ ,காணாம‌ல் போன‌
தாலாட்டுக்க‌ள்
ஒப்பாரிக‌ளாய்.
ஆனாலும் கூட‌ இன்றும்
அனும‌தி சீட்டு வாங்குவது
குறையவில்லை என்றோ
முதியோர் இல்ல‌த்தில்
கைவிட்டுச்
செல்ல‌ப்போகும்
பிள்ளைக‌ளுக்காக‌.














Friday, August 10, 2007

ஓய்வில்லா காதல்

அந்த நிலவும் ஓய்வு தேடிடும்
உன் முகத்தினில் இளைப்பாறிட‌,
அந்த அலைகள் ஓய்வு தேடிடும்
உன் பாதத்தில் பள்ளி கொண்டிட‌,
அந்த காற்றும் ஓய்வு தேடிடும்
உன் சுவாசத்தில் கலந்திட‌,
அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்
உன் போல ஒருத்தியை படைத்திட‌, ஆனால்
நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்
உன்னை காதலிப்பதை விட்டு.