Search This Blog

Wednesday, July 25, 2007

உன் அப்பனுக்கு மரியாதை



சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.

உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்

சிலைகள் சிலைகளாகவே.








தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.









நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய

அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,

உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .






விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்

இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது









இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின

உன்னுடன் என்னை
கண்டதால்.

ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்

உன் அப்பனை
கண்டவுடன்.

காதலோடு இறந்தால்











உன் புன்னகையில் தொலைந்ததால்
என் புன்னகையை
தொலைத்தவனானேன்.



உன் கண்களில் காதலை கண்டதால்
என் கண் பார்வையை இழந்தவனானேன்.


உன் சிற்றிடையின் அகலம் அறிந்ததில்
எண் கணித நீள அகல விகிதம் மறந்தவனானேன்.



உன் கூந்தல் பாயில் படுத்திருந்த‌தில்
என் ஆயுள் பாதி இழந்தவனானேன்.




உன் பார்வை பட்டதால் பறந்த நான்
இறகுகள் கிள்ளியதை அறியாதவனானேன்.



உன் கண்களில் நீர் கசிந்ததால்
அழகு மழையும் ரசிக்க கசந்தவனானேன்.



உன் உடன் இருந்த போது இழந்ததை
எண்ணி அழவில்லை ஒருநாளும்.


நீ உன் மாமன் மகனுக்கு தான் என
பெற்றோர் உயில் சொல்வதாய் சொன்னபோதே
என்
உயிரும் போய்விட்டது.




இனி இழந்திட ஏதுமில்லை வாழ்வில் .
நான் கர்ணன் ஆகவும் பிறக்கவில்லையடி,
கவச
குண்டலம் கூட இல்லையடி என்றேன்.


என்னை கர்ணன் ஆக்கி,
காதலை கவசகுண்டலமாக்கி
காதலை கொடுத்திடு என்றாய்.
நானும் கொடுத்து விட்டேன்.
நீயும் எடுத்து செல்கிறாய்.
எடுத்து செல்வது என் உயிர்
என தெரியாமலையே.
காதலோடு இறந்தால் காதலித்தவன்
எல்லாருமே கர்ணன் தான்.

Friday, July 20, 2007

ஆண்டவன் அறியாத அழகு









நீண்ட கருங்கூந்தல் அழகு‍- மேகத்தினை
விட‌,



நான் பார்ப்பதை உளவு
பார்க்கும்


கண்கள் அழகு- காத்திருக்கும் கொக்கினை
விட‌,



ஆசையின் அளவாய் நீ சுழிக்கும்
முகச்சுழிப்பு அழகு- தேய்கின்ற நிழவினை
விட‌,



நாசி நுனிவரை
வந்துசெல்லும்

கோபம் அழகு- பாம்பு சீறுவதை
விட‌,



எனை கண்டதும் விரியும்
இதழ்கள் அழகு - மொட்டு மலர்வதை
விட‌,



நான் தரும் மஞ்சள் கயிறு
தாங்கிட

காத்திருக்கும் கழுத்து அழகு-
கடல் கொண்டசங்கினை விட‌,



வெண்மையோடு மென்மையான
கைகள் அழகு- வென்பஞ்சினை
விட‌,



சிக்கனத்திற்கு சிறப்பான
சிற்றிடை அழகு- புள்ளியை
விட‌,



வாலிபம் கூறிடும் வழவழப்பான
கால்கள் அழகு -பச்சை வாழைத்தண்டினை
விட‌,



பாதங்கள் கொண்ட விரல்கள்
பத்தும் அழகு- விரிந்து சென்றிடும் கிளைகளை
விட‌,



மறைத்து வைத்த அங்கமோ அழகோ
அழகு-

அருங்காட்சிய
பொருள்களைவிட‌,



இத்தனை அழகும் கொண்ட உன் மனம்



என்னை விரும்பியதே அதுதான் உலக‌
அழகு,

அந்த ஆண்டவனே அறியாத
அழகு.


Monday, July 09, 2007

சகலமாய் நீ வாழ







ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்ச

இடமெல்லாம் என்னோட கண்ணீரால

நிரம்பி போச்சுடி கொதிக்கிற‌ கோடையிலும்
கூட

பாதியில‌ விட்டுபுட்டு ப‌ரிஸ‌ம் போட்டு
ம‌றுவீடு போன மாம‌ன் ம‌வ‌ளே உன‌க்கு

ம‌ட்டும் வ‌யிறு நிற‌ம்பிப் போச்சுடி
நான் வாடையிலும் கூட‌
ப‌ய‌புள்ள‌ நீ வ‌ந்த ப‌ச்ச‌ வ‌ய‌
ம‌ன‌சு
த‌றுசா தான்டி போச்சு உன்
நினைவூத்துச் சொற‌ந்த‌
போதும்
நெஞ்சுகுள்ள‌ வாரிசும்கூட வ‌ந்தாச்சு
நான் உன்னைய திரும‌ண‌ம்
செஞ்சிகிடாத‌ போதும்

யார‌டிப் புள்ள‌
குத்த‌ஞ்சொல்ல?

உன்னையா? இல்லை
என்னையா?

இல்லை உதிர‌ம் சுண்ட‌
சுண்ட‌

உற‌வுக‌ள்
குறைந்த‌தையா?
ம‌டியில‌ த‌லவெச்சி
கெட‌ந்த‌ப்ப‌வே
பாவிம‌வ‌ நீ,
கெஞ்சிக்கேட்டும்

த‌ந்திட‌ல‌ உன‌க்கொரு
ம‌ஞ்ச‌க்க‌யிறு

தாலிகொடி கேட்ட‌
உன‌க்கு ஒரு கொடில‌
ம‌ல‌ர்ந்த‌ ம‌ல‌ர் ஒட்டி
உற‌வாட கொடி

ஒன்னும் தேவையில்லடி

காற்று போதும் உரசி
உறவாட என்றேன்.
அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
பாலாப்போன மனுச சாதிக்கு

கயிறு தான் முக்கியம்னு சொல்லிப்புட்டு

கயிறு தந்த பங்காளி பயலோட நீ போயிட்ட.

நீ சொன்னதாலையே என்னவோ

புலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்

உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறை

என் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டி

இன்னோரு ஜென்மம்தேடி
சகலமா நீ வாழ‌
நான் சாகுறேன் சாதியால‌

Friday, June 29, 2007

காதல்-கத்திவெட்டுஅல்ல-அது கல்வெட்டு







ஊரினில் உள்ள வாலிப பட்டாளமே
பின்
தொடர்ந்திடும் கட்டழகி நீயடி.ஆனால்
நானோ பறந்திடும் காகமும் கறைந்திடும்
தன்
இனமோ?! இவன்! எனுமளவு கருப்புமண்ணு .

என்மீது எப்படியடி காதல் கொண்டாய்
என்றேன்.
ஒன்றா? இரண்டா? எதனைச் சொல்ல,
எப்படிச் சொல்ல
என்றாய்?
ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தேன்
என்றேன்

வாலிப பட்டாளமே என் பின்னே வர
நீ மட்டும் முன்னே
நடந்தாயே பாராமல்,
அதனை சொல்லவா என்றாய்.நானோ
சில்மிசத்தோடு சிரித்தேன்
கோபமாய் வினவினாய் காரணத்தை.

உன் பின்னே நடந்து வந்தால் உன் பின்னழகில்
மயங்கி மதியற்ற கற்பனையில் காமத்துப்பாலில்
வள்ளுவரிடம்
வாக்குவாதம் கொண்டு உன்
பின்னழகுக்கு இன்னுமொரு அத்தியாயம்
கேட்டு
இறந்தவன் கையில் என் எழுத்தானி
தினிக்கிறது
என்றதும்,புரிந்ததோ-‍புரியலையோ,
புரிந்தும் புரியாத
மாதிரி கோலம் போடுவதற்கு
பதிலாய் விரலால் கோடுகள்
தீட்டினாய்

உனக்கு முன்னமே நடந்து சென்றிட்ட நேரம்
என்
பாதம் முள் தைத்திட பதறிப் போய்
பார்த்து நடந்திட கூடாதா என்றாய்?
பார்த்து
தான் நடந்தேன். நீ என் பாதச்சுவடு
மிதித்து நடந்து வருவதை,
என்றதும்
பைத்தியம் போல வழிந்தாய்

பள்ளி செல்லும் போதும் சரி,பேருந்து ஏறிட,
நீ ஏறிச் சென்றிடும் பேருந்துக்கு முன்னமே ஏறி,
நீ ஏறிடும் நிறுத்தம் தாண்டி
இறங்கி- நீ ஏறிடும்
பேருந்துக்காக காத்திருந்திருக்கிறேன்
காலை
வேளைகளில்

ஜன்னலோரம் அறிந்த பாவைகள்
அமர்ந்திருந்தும் கூட
அளித்ததில்லை.
நான் கொண்டு வரும் புத்தகத்தினை.ஆம்
புத்தகம் முழுதும்
புதைந்திருப்பாய்
நீ உன் பெயரால

தியேட்டருக்கு சென்றிடுவாய்
திருட்டுதனமாக-
தோழிகளுடன், தோழிகள் தொல்லை
என
நினைத்தவாறு.

புரிந்தும் படம் பார்க்காமல் பார்வை
பரிமாறுவாய்.
நானோ புரியாத படத்தினை புரிந்தவன் போல
கற்பனை
கொண்டு பரிமாறிய பார்வையொடு
பாரிஸில் இளைப்பாறி இருப்பேன்
.
திருமணத்துக்கே சென்றிடாதா
செல்லாக்காசு நான்.
நீ ஒரு ஞாயிற்றுகிழமை திருமணத்துக்கு
சென்றிட யாரென்றே
அறியாதவர் திருமணத்துக்கே
ஜிவ்வென கிளம்பியவனுக்கு ஜாக்பாட் அடித்தது.ஆம்
அன்று தான் என்னை பலநாள் பழகியவன் போல
உன் தோழியிடம்
அறிமுகம் செய்துவைத்தாய்.
எனக்கே தெரியாமல் எத்தனையோ முறை
வாழ்த்தி
இருக்கிறேன் அந்த தம்பதிகளை.

உனக்கென நான் என‌ ஆன பின்னே
தொடர்ந்த
வாலிப கூட்டம் வழிவிட்டு விலகி நின்றது,
மச்சக்காரன் நான் என மனதில் கருவியபடி

எப்படியடி என்னை இத்தனை நாளாய்
மனதில்
மறைத்திருந்தாய் என கேட்டேன்.
நீயோ மெளனம் காத்தாய்.
பதில்
இல்லாத வருத்தத்தில் மெல்லமாய்
புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்
என்
குழல் இசை கேட்டு தென்றலும் ஓடி வந்திட
விலகிய உன்
தாவனியில் என் விடை கிடைத்தது
ஆம் மெல்லிய நூலாடையில் இருமலைகளை
மறைத்திருக்கும் உனக்கு இம்மலையை
மறைத்திருந்ததில்
வியப்பென்ன
!

மணி நேரம் குளித்துப் பழகிய நாம்,
நம்
கடவுளின் வரவால் ஒரு பத்து நிமிடம்
கூட குளிக்காமல் மணிக்கணக்கில்
மறைந்திருந்தோம் குளியலறையில்
தண்ணீர் திறந்துவிட்டபடியாய்

சோப்பு மறக்காமல் எடுத்து செல்வோர் மத்தியில்

செல்போன் எடுத்து சென்று
காக்கை இனமானோம் குளித்திடும்
முறையினால்

கடவுள் கண்டாலே கேள்வி கேட்டிடும்
பெரியார்
வழிவந்த திராவிடன் நான்
காதல் வந்ததில் கடவுளை கண்டவன்
ஆனேன்
கிரஹாம் பெல் கடவுள் ஆனார்.
அழைப்பு மணி ஆலயமணி
ஆனது
.வரும் அழைப்பு உனதானதால்
அது கடவுளின் குரல்
ஆனது.




எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம்
பெற்றோர்களை,
எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம் நண்பர்களை,
எப்படி தோன்றுமோ
தெரியவில்லை
எண்ணங்கள் நமக்குள்ளே
எல்லோரையும் ஏமாற்றினோம்
ஏமாறுகிறோம் எனத் தெரியாமலையே
இதயத்தை திருடிட திருட்டினை கற்று கொண்டேன்
பேசாது
தொடர்ந்த நாட்களில் பொய்
பேச கற்றுகொண்டேன்
கற்று கொண்ட எல்லாமே
மறந்து
போயின காதல் வந்த பின்னே


காதல் வந்த பின்னே சொந்தமும் மறந்தது
பந்தமும்
மறந்தது கல்யானம் வந்த போது
ஏனோ காதலும் மறந்தது‍ கூடவே
காதலனும் மறந்துபோயினான் அவளுக்கு

அவளின் கல்யாணத்தின் போது மறைத்த
காதல்
மட்டும் மறக்க முயன்றும் முடியாமல்
மண்டிக் கிடக்கு மலை போல
மனதுக்குள்ளே


கவிதைத்தாள் தானேன்னு கசக்கி
எறிய
முடியவில்லை
கத்தி வெட்டுன்னு மருந்தும்
போட முடியவில்லை
முறிஞ்சி
போன காதல் கவிதையுமல்ல
கத்திவெட்டுமல்ல‌ அது கல்வெட்டு.
காதலி
மண்ணோடு மடிந்த பின்னும்
தோண்டி எடுக்கப்படும்
நினைவுகளால்
.