

கலங்கரைவிளக்கம் திசை அறிந்திடத்தான்

உன் பிரிவினில் நிலவின் வருகை
சனி போனா தனியா போகாது என்பது
எத்தனை முறை எட்டிப்பார்த்திருப்போம்
தோழிகளுடன் நீ அமர்ந்து உணவருந்திய போதும்,

சாகப்போன என்னை,தடுத்து
கருப்பு நிறத்தை கொளரவித்தவள் நீ.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
வேலை தேடி அலைந்ததை விட
உன்னைத் தேடி அலைந்ததே
அதிகம்.
இரண்டுமே கிடக்கவில்லை.
வேலை இல்லாமல் அவளும்-
அனுபவம் இல்லாமல்
வேலையும்.
பொய் முன்னே மெய் தோற்ற உணர்வு.
உன்னை அழகி என்ற போது.
அழகு போலி என
எனக்கு உணர்த்திய வனப்பூ நீ.
சின்னதாய் நீ சிரித்த சிரிப்பில்
சிறையில் அறையப்பட்டவன் நான்.
யேசுவவும் நாங்களும் ஒன்று தான்.
உன் நினைவென்னும் சிலுவை சுமப்பதால்.
சின்னதாய் புண்ணகைத்து புயலாய்
புகுந்து கொண்டவள் புதிர்
போடுகிறாள்.
"முடிந்தால் கண்டுபிடி"நான் வந்த வழியை
என?
பெண்ணே உறக்கமும் நீயும் வேறில்லை.
இரக்கமற்று வராமல் துடிக்கச் செய்வதும்
வந்ததும் சுகமாய் என்னை மறக்கச் செய்வதும்.
பிரசவ வலியில் துடித்தவள் அமைதியானாள்,
குழந்தையின் அலறல் கேட்டதில்.
குழந்தையின் அலறல் மட்டும் ஓயவே இல்லை
ஒருத்தனை மணந்த பின்னும்.
கோழையின் முதல் முயற்சி தற்கொலை.
யாரோடோ கொண்டு விட்ட
காதலால்-
கைகுழந்தை பெறும்
முத்தம்,
யாரோ நட்டுச் சென்ற
மரத்தால்-
நடைபயணி பெறும்
நிழல்,
யாரோ பொழுதுபோகாமல் தன்
மெய்ஞானத்தால் தொடர்ந்திட்ட
விஞ்ஞானம்,
பொறாமை பொங்கிட வளரும்,
விஞ்ஞானம் தரும் பலன்
இதோ! இன்று மனித இனத்தின்
வரவான
அந்த கைக்குழந்தையே, உடல்கள்
சேராமல்
தேவைக்கு ஏற்ப செய்யச் சொல்லுதலை
என்னவென சொல்வது?.
விஞ்ஞானத்தின் சாதனை
என்றா?இல்லை
இறைவன் இவனுக்கு இட்ட சோதனை
என்றா?
சிரித்து சூரியஒளி வீசிய போது
அறியவில்லை குடிசைவாசி,
கூரையின் ஓட்டையை.
அழுது வானம் பொழிந்த போது மழை
அறியவில்லை குடிசையும்
இல்லாதவர்களை.
என்னிள் உன்னைத் தொலத்ததால்
உன்னுள் புது உயிர். குழந்தை
உன் மை விழிப்பார்வையால்
myவிழிப்பார்வை இழந்தது
கவிதை! நீ கண்ணீர் சிந்தினால்
என் பேனா சிந்தும் மை
கூட கவிதையேதான் விழித்துக் கொண்டதால்
அனைவரையும் விழித்திடச் செய்யும்விடியற்காலை
விரோதி.
சிறைக்குள் சில்மிஷம் செய்யும்
காதல் ஜோடிகள் கடிகாரம்
ஊர்,பெயர் தெரியாத தேடி வந்த
எல்லோருக்கும்
ஆம்பள அம்மா.
சமையல்காரன்
ஆடையும் வெட்கமும் ஒன்று
தான்.
எத்தனையோ முறை தடைகளாய்
நமக்குள்.
தடைகளை தகர்த்திட உன் முந்தானை
பிடித்து இழுத்தேன். புறமுதுகுகாட்டி நின்றாய்,
முகத்தினைப் பொத்தி வெட்கத்தில்.
கத்தியால் என்னை குத்தும்போதும்
காலாட்டியபடி நான். கனவில்
விசா இல்லை,விமானப் பயணம் இல்லை.
நான் மட்டும் அயல்நாட்டில்,
ஜந்து நிமிடப் பயனத்தில்.
கனவில் சிரித்துப் பேசியவள்
முறைத்துப் போகிறாள் நேரில்.
வாங்கிய முத்தத்தைதிருப்பிக் கொடுக்காததால்.
செய்யாத கொலைக்கு,இல்லாத நீதிமன்றத்தில்
வாதாடும் எல்லாக் குடிமகனும் அம்பேத்கார் தான்.
நிலவில் வடைசுட்டு விற்பதாய்,
பாட்டி கதை சொன்னாள்.
பாட்டியும் மறந்து போனாள்.
கதையும் மறந்து போனது,
நிலவு உன்னை நேரில் கண்டதால்.
யார் வைத்த மரமோ?.நம் பெயர் இணைந்திட
வளர்ந்து நிற்கிறது தனிமையாய்,
நம் எதிர்காலம் சொல்லியபடி.
சிரித்தால் ஆயுள் கூடும் என்பது
அறியாத வரைகுழந்தையும் சிரித்தது.
என் பாட்டியின் பாட்டி, என்
பாட்டிக்கு கதை சொல்லிஉறங்க வைத்து அவளும் உறங்கிப்
போனாள்அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் பாட்டிக்கு, என் பாட்டியின்
தாய் தாலாட்டு பாடி,சீராட்டி அவளும் சீராய் இருக்க
மறந்ததில்லைஅதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்.
என் தாய்க்கு என் பாட்டி கதிர்
அறுத்து,அரிசி குத்தி அழகாய் சமையல்
செய்துஅவளையும் சமைந்திடச்
செய்தாள்அதே இருபத்திநான்கு மணி
நேரத்தில்..இன்றும் அதே
இருபத்திநான்குமணிநேரம்தான்ஆனாலும் தாலாட்டு இல்லை,தாய்ப்பால்
இல்லைஅவ்வளவு ஏன் குழந்தையே வீட்டில்வளர வில்லை
காப்பகத்தில் பாதுகாப்பாய் வளர்ந்த
குழந்தை,படிப்பு மட்டுமே பெற்றது பாசத்தை
இழந்து,பண்டிகை தேதிகளில் மட்டுமே பாசத்தை
பெற்றது,கடைகளில் வாங்கிய இனிப்பு
காரங்களுடன்கைகளில் திணிக்கப்பட்டஇரு நூறு ருபாய்
தாள்களில்.
தாய் தந்தை அறியவில்லை
முந்தையபண்டிகையின் போது திணிக்கப்பட்ட
தாளேகசங்காமல் கணக்குப் புத்தகத்தில்புதிதாய் புதைந்து
கிடப்பதை.
வளர்ந்த குழந்தைக்கு தோழன்
இல்லை,தோழியும் இல்லை,தம்பி
இல்லை,அண்ணன் இல்லை தனிமை
மட்டுமேதுணையாய் நாள் ஜந்தும்
விடுமுறை என வீடு வந்தால் அண்டைவீட்டுக்காரனிடம் பழகிடவும் அனுமதி
இல்லை,அது ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும்
சரி.
தொலைகாட்சிப் பெட்டி மட்டுமேதுணையானது பகல்வேளை
முழுதும்.தொடர்கள் பாசத்தின் ஏக்கம்
கூட்டிட,அண்டை நாட்டு
அலைவரிசகள்ஆசை தூண்டின.பாடல்கள்
மாறின.
ஆங்கிலத்தில் அசிங்கமான வரிகளைகொண்ட பாடல்கள் பகல் முழுதும்
ஒலித்தனபாடிய போது கைத்தட்டல்
கிட்டியதுவரிகளின் வன்மம்
மறந்து.
எல்லாம் மாறி மாறிப் பழகிடதனிமை மட்டுமே இவனுக்கு
தேவையானதுஉடன் பெண் இல்லாத
போதும்
பெண் உடன் வந்த பின்னே
தாய்தந்தையரும் தேவையில்லை
என்றானது.
அன்று பண்டிகைத் தேதிகளில்
பிள்ளைகளைபார்க்கச் சென்றனர்
பெற்றோர்கள்.ஆனால்இன்றோ பாடையில் சென்றிடும்வேளையிலும் பிள்ளைகள் செல்வதில்லைபணம் மட்டும் அனுப்பபடுகிறதுஒரு அனாதைப்
பிணத்திற்கு.முதியோர் இல்லங்களில் இன்னமும்ஒலிக்கின்றன ,காணாமல் போனதாலாட்டுக்கள்
ஒப்பாரிகளாய்.
ஆனாலும் கூட இன்றும்அனுமதி சீட்டு வாங்குவதுகுறையவில்லை என்றோமுதியோர் இல்லத்தில்கைவிட்டுச்
செல்லப்போகும்பிள்ளைகளுக்காக.
அந்த நிலவும் ஓய்வு தேடிடும்உன் முகத்தினில் இளைப்பாறிட,அந்த அலைகள் ஓய்வு தேடிடும்உன் பாதத்தில் பள்ளி கொண்டிட,அந்த காற்றும் ஓய்வு தேடிடும்உன் சுவாசத்தில் கலந்திட,அந்த பிரம்மனும் ஓய்வு தேடுவான்.உன்னிடம்உன் போல ஒருத்தியை படைத்திட, ஆனால்நான் மட்டும் ஓய்வு கொள்ள மாட்டேன்உன்னை காதலிப்பதை விட்டு.
நீ நடந்திட, பாதைக்கு மலர்களைவிரித்திட எண்ணினேன்.ஆயிரம் அழகிகள் என்னிடம்வாளேந்தி போருக்கு அழைத்தபடி.ஆம்! நீ நடந்திடும் பாதையில்பாயாய் விரிந்திட,தாங்கள் மலர்களை விடஎவ்விதத்தில் குறைகொண்டோர்என குமுறலோடு.மலருக்கும்-மங்கையருக்கும்நம்மால் வேண்டாம் இனபாகுபாடுஎன்றெண்னி என் கையேந்திஎடுத்துச் சென்றேன் பஞ்சுமெத்தைக்கு.
அங்கே பருத்திக்கும்-
பட்டுப்பூச்சிக்கும்இடையே பயங்கர கலவரம்.உலகிற்கு இன்னும்
பல்லாயிரம்பஞ்சுமெத்தைகள்
தேவைபடும்,அதனால் நம்மால் பிரிவினைவேண்டமென்று உன்னைஎன் மார்பில் தாங்கினேன்.
நீ நீராடிட காவேரி கூட்டிச்
சென்றேன்.மழையோ கோபத்துடன் தரை
இறங்கியது,வெண்மேகத்தின் வேலியினைத்
தாண்டி.நம்மால் மழைக்கும்-மேகத்துக்கும்கூடாது உட்பூசல் என எண்ணி,சமாதான கொடி காட்டினேன்என் வெண்ணிற வேட்டி கழட்டி.
உன் கூந்தல் ஈரம் போக்கிடமுடி அவிழ்த்ததில், நெகிழ்ந்துபோனபூங்காற்று, முடி
உலர்த்திடஊர்ந்து வந்திட, சூரியன்
கோபமாகிகாற்றோடு கை கலக்கப்
பார்த்திட,வேண்டாம் நம்மால்
நாட்டினருக்கு"பகலும் ஒரு இரவாய்" என்றெண்ணிஎன்
மூச்சுக்காற்றினிலேயேஉன் கூந்தல் ஈரம்
உலர்த்தினேன்.
உடை உடுத்தி
பொருட்காட்சிகூட்டிச்
சென்றேன்.அழகுக்கு வைத்திருந்த
பொம்மைகள்உயிர்கொண்டு அதன்
ஆடைகள்கழட்டி உனக்கு தந்திட துணியவேவேண்டாம்
பொம்மைக்கும்-பொதுமக்களுக்கும்,பொதுக்காட்சியாய் என எண்ணி
வெளிவந்தோம்.
மகராணி உனக்காய் மதிய
உணவுக்காகஉய்ர்தர உணவு விடுதி
நுழைந்திட,உன் செவ்விதழ் உரசி
உட்ச்சென்ற,உணவு உற்சாகம்
கொண்டிட,உதடு உரசாமல் உள்சென்ற குடிநீர்
குமுறிட,வேண்டாமே
உணவுக்கும்-குடிநீருக்கும்உறவுமுறிவு என எண்ணிநானே உணவு
ஊட்டினேன்.
கடற்சுவாசம் வாங்க கடற்கரை
சென்றிட,உன்னை கண்டதால் உவப்பு
மிகுதியில்வெண்ணுரையோடு நுரம்பி
நெருங்கிட,உன்னை கொண்டதால் கடற்கரையோ
மின்னிட,கடற்கரைக்கும்-நுரையலைக்கும்வேன்டாமே மல்யுத்தம் என
எண்ணிஎழுந்து நடந்தோம் எல்லை
நோக்கி.
ஆஹா! என்ன அழகான காது,
இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்
என பலமுறை நன்றி சொல்லி
இருக்கிறேன்
இறைவனுக்கு.ஆம்
ஆயிரம் இரைச்சலிலும் பெண்களின்
குரல் மட்டும் கவர்ந்து,அந்த
குரலினை ரசிக்க வைத்ததால்.
ஆஹா! என்ன அழகான்
கண்கள்,
இறைவன் எனக்கு இட்டிருக்கிறான்
என எவ்வளவோ முறை நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்
ஆயிரம் பெண்களில் அழகான்
பெண்களை மட்டும் கண்டறிந்து
களிப்படைய செய்த்தால்.
ஆஹா! என்ன உயர்வான நாசி,
இறைவன் எனக்கு நட்டிருக்கிறான்
என
நாட்கணக்கில் நன்றி சொல்லி
இருக்கிறேன் இறைவனுக்கு.ஆம்
என்னைச் சுற்றி என்னென்னவோ நடந்து
வந்தாலும் பெண்ணின் வரவு
மட்டும்
முகர்ந்து-முகம் கண்டு, மலரச்
செய்வதால்.
ஆஹா! என்ன இதமான நாவினை
தந்திருக்கிறான், என தவம் கிடந்து
நன்றி சொல்லி இருக்கிறேன்,
இறைவனுக்கு. ஆம் சுவைக்காமலையே
பெண்னை சுவையானவள் என,
சொல்லிடச் செய்ததால்.
ஆஹா! என்ன வலிமையான வாய்,
இறைவன் அளித்திருக்கிறான்
என
அயராது அல்லும் பகலும் நன்றி
சொல்லி இருக்கிறேன் இறைவனுக்கு.
ஆம்
நான் பேசிட ஆயிரம் விசயங்கள்
இருந்தாலும் பெண்களிடம்
மட்டுமே
பேசி
சிரித்திருந்ததால்.
ஜம்புலனும் அடக்கி பெண்களை மட்டுமே
பார்த்து,பேசி,கேட்டு,சுவைத்து,உணர்ந்து வந்த
நான் அடங்கிப் போனேன்.பெரியோரின்
"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற விளம்பரம்
கண்டு.
ஆயிரம் பெண்களில் ஒருத்தியைத்
தேடினேன்.
ஆயிரத்தில் ஒருத்தியாய் அவள் வந்தாள்.
ஜம்புலனையும் அடக்கி அதிசயித்து
நன்றி சொன்ன என்னையும் அடக்கி
விட்டாள்,
என் புலன்களையும் அடக்கி
விட்டாள்.
ஆம் என் காதுகளை
செவிடாக்கினாள்,
ஆம் அவளின் குரலை மட்டுமே ஏற்றுக்
கொண்டு.
என் கண்கள் பார்வை இழந்தன,ஆம்
அவளின் உருவம் மட்டும் ஏற்றுக்கொண்டு.
மற்றன யாவும் காணாமல்.
என் நாசிகளும் உணர்விழந்தன. ஆம்
அவளின் வரவு மட்டும் உணர்ந்து
கொண்டு
மற்றன யாவும் மறந்து.
.
என் நாவும் ருசியிழந்தன.ஆம் மற்றவர்
யாரையும் சுவைத்திடாமல்
போனதால்
என் வாயும் பேச்சிழந்தன.ஆம்
அவளை
மட்டுமே பேசச்
சொல்லி,
பேச்சினை கேட்டிருந்ததால்.
ஆஹா எப்படி இருந்த நான் இப்படி
ஆயிட்டேனேஎன என்னைப் பற்றிய
ஏச்சுக்கள் கூட அறியாதவனா
இருந்தேன்.
இப்படி உன் ஒருத்தியால் ஊரில்
உள்ள
அனைவருக்கும்
குருடனானேன்,
செவிடனானேன்
ஊமையானேன்,
உணர்ச்சியும் இழந்து நடைபிணமானேன்.
ஜம்புலனும் அடக்கி
ஆண்டவனுக்கு,
ஜம்புலனும் அடங்கிப் போயின-
அவளின் வருகையால்.
வேண்டாம் இப்படி ஒரு காதல்
என,
ஒருநாள் ஒதுக்கிட
நினைத்து
ஒதுங்கி இருந்தேன்.அந்த ஒரு நாளில்
நான் ஒழிந்தே
போனேன்.
சாலையோர சிலைகளும் உன்னுடன்
கைகோர்த்து நடந்திடும் உத்தியில்
உயிர்கொள்ளும்.
உன் விரல்களை நான் பற்றி
நடந்திடுவதால்
சிலைகள் சிலைகளாகவே.
தோட்டத்து மலர்களும் கால் முளைத்து
செடி உதறி கீழே உதிர்கின்றன
உன்னை தொடர்ந்திட
துணிந்து.
நடுக்கடலில் எங்கோ தொடராய்
கிளம்பிய
அலைகளும் ஏமாந்து செல்கின்றன
தோல்வியில்,
உன்னுடன் நான் கைகோர்த்து
நடந்து வருவதால் .
விண்விட்டு இறங்கிய
வின்மீன்களும்
இடையினில் என் கைகள், உன் இடை பிடித்து
நடப்பதை கண்டதாலே காணாமல்
போய்விட்டது
இப்படி உன்னுடன் தொடர்ந்து நடந்து வர
விரும்பிய அனைத்தும் அலறியடித்து
ஓடின
உன்னுடன் என்னை
கண்டதால்.
ஆனால் நானே அலறியடித்து
ஓடுகிறேன்
உன் அப்பனை
கண்டவுடன்.
உன் புன்னகையில் தொலைந்ததால்
என் புன்னகையை
தொலைத்தவனானேன்.
உன் கண்களில் காதலை கண்டதால்
என் கண் பார்வையை இழந்தவனானேன்.
உன் சிற்றிடையின் அகலம் அறிந்ததில்
எண் கணித நீள அகல விகிதம் மறந்தவனானேன்.
உன் கூந்தல் பாயில் படுத்திருந்ததில்
என் ஆயுள் பாதி இழந்தவனானேன்.
உன் பார்வை பட்டதால் பறந்த நான்
இறகுகள் கிள்ளியதை அறியாதவனானேன்.
உன் கண்களில் நீர் கசிந்ததால்
அழகு மழையும் ரசிக்க கசந்தவனானேன்.
உன் உடன் இருந்த போது இழந்ததை
எண்ணி அழவில்லை ஒருநாளும்.
நீ உன் மாமன் மகனுக்கு தான் என
பெற்றோர் உயில் சொல்வதாய் சொன்னபோதே
என்
உயிரும் போய்விட்டது.
இனி இழந்திட ஏதுமில்லை வாழ்வில் .
நான் கர்ணன் ஆகவும் பிறக்கவில்லையடி,
கவச
குண்டலம் கூட இல்லையடி என்றேன்.
என்னை கர்ணன் ஆக்கி,
காதலை கவசகுண்டலமாக்கி
காதலை கொடுத்திடு என்றாய்.
நானும் கொடுத்து விட்டேன்.
நீயும் எடுத்து செல்கிறாய்.
எடுத்து செல்வது என் உயிர்
என தெரியாமலையே.
காதலோடு இறந்தால் காதலித்தவன்
எல்லாருமே கர்ணன் தான்.
நீண்ட கருங்கூந்தல் அழகு- மேகத்தினை
விட,
நான் பார்ப்பதை உளவு
பார்க்கும்கண்கள் அழகு- காத்திருக்கும் கொக்கினை
விட,
ஆசையின் அளவாய் நீ சுழிக்கும்
முகச்சுழிப்பு அழகு- தேய்கின்ற நிழவினை
விட,
நாசி நுனிவரை
வந்துசெல்லும்
கோபம் அழகு- பாம்பு சீறுவதை
விட,
எனை கண்டதும் விரியும்
இதழ்கள் அழகு - மொட்டு மலர்வதை
விட,
நான் தரும் மஞ்சள் கயிறு
தாங்கிட
காத்திருக்கும் கழுத்து அழகு-
கடல் கொண்டசங்கினை விட,
வெண்மையோடு மென்மையான
கைகள் அழகு- வென்பஞ்சினை
விட,
சிக்கனத்திற்கு சிறப்பான
சிற்றிடை அழகு- புள்ளியை
விட,
வாலிபம் கூறிடும் வழவழப்பான
கால்கள் அழகு -பச்சை வாழைத்தண்டினை
விட,
பாதங்கள் கொண்ட விரல்கள்
பத்தும் அழகு- விரிந்து சென்றிடும் கிளைகளை
விட,
மறைத்து வைத்த அங்கமோ அழகோ
அழகு-
அருங்காட்சிய
பொருள்களைவிட,
இத்தனை அழகும் கொண்ட உன் மனம்
என்னை விரும்பியதே அதுதான் உலக
அழகு,
அந்த ஆண்டவனே அறியாத
அழகு.
ஆறு ,ஏரி,கம்மா என நாம சுத்தித் திரிஞ்சஇடமெல்லாம் என்னோட கண்ணீராலநிரம்பி போச்சுடி கொதிக்கிற கோடையிலும்
கூட
பாதியில விட்டுபுட்டு பரிஸம் போட்டு
மறுவீடு போன மாமன் மவளே உனக்குமட்டும் வயிறு நிறம்பிப் போச்சுடிநான் வாடையிலும் கூட
யாரடிப் புள்ள
குத்தஞ்சொல்ல?உன்னையா? இல்லை
என்னையா?இல்லை உதிரம் சுண்ட
சுண்டஉறவுகள்
குறைந்ததையா?
பாவிமவ நீ,
கெஞ்சிக்கேட்டும்தந்திடல உனக்கொரு
மஞ்சக்கயிறுதாலிகொடி கேட்ட
உனக்கு ஒரு கொடில
மலர்ந்த மலர் ஒட்டி
உறவாட கொடிஒன்னும் தேவையில்லடிகாற்று போதும் உரசி
உறவாட என்றேன்.அது செடி கொடிக்கு சரி மச்சான் ஆனா
நீ சொன்னதாலையே என்னவோபுலம்பலை எழுதி காத்துல விட்டுபுட்உன் கழுத்துக்கு கொடுக்காத கயிறைஎன் கழுத்துல கட்டி இடுகாடு போறேன்டிஇன்னோரு ஜென்மம்தேடிசகலமா நீ வாழநான் சாகுறேன் சாதியால
ஊரினில் உள்ள வாலிப பட்டாளமே
பின்
தொடர்ந்திடும் கட்டழகி நீயடி.ஆனால்
நானோ பறந்திடும் காகமும் கறைந்திடும்
தன்
இனமோ?! இவன்! எனுமளவு கருப்புமண்ணு .
என்மீது எப்படியடி காதல் கொண்டாய்
என்றேன்.
ஒன்றா? இரண்டா? எதனைச் சொல்ல,
எப்படிச் சொல்ல
என்றாய்?
ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தேன்
என்றேன்
வாலிப பட்டாளமே என் பின்னே வர
நீ மட்டும் முன்னே
நடந்தாயே பாராமல்,
அதனை சொல்லவா என்றாய்.நானோ
சில்மிசத்தோடு சிரித்தேன்
கோபமாய் வினவினாய் காரணத்தை.
உன் பின்னே நடந்து வந்தால் உன் பின்னழகில்
மயங்கி மதியற்ற கற்பனையில் காமத்துப்பாலில்
வள்ளுவரிடம்
வாக்குவாதம் கொண்டு உன்
பின்னழகுக்கு இன்னுமொரு அத்தியாயம்
கேட்டு
இறந்தவன் கையில் என் எழுத்தானி
தினிக்கிறது
என்றதும்,புரிந்ததோ-புரியலையோ,
புரிந்தும் புரியாத
மாதிரி கோலம் போடுவதற்கு
பதிலாய் விரலால் கோடுகள்
தீட்டினாய்
உனக்கு முன்னமே நடந்து சென்றிட்ட நேரம்
என்
பாதம் முள் தைத்திட பதறிப் போய்
பார்த்து நடந்திட கூடாதா என்றாய்?
பார்த்து
தான் நடந்தேன். நீ என் பாதச்சுவடு
மிதித்து நடந்து வருவதை,
என்றதும்
பைத்தியம் போல வழிந்தாய்பள்ளி செல்லும் போதும் சரி,பேருந்து ஏறிட,
நீ ஏறிச் சென்றிடும் பேருந்துக்கு முன்னமே ஏறி,
நீ ஏறிடும் நிறுத்தம் தாண்டி
இறங்கி- நீ ஏறிடும்
பேருந்துக்காக காத்திருந்திருக்கிறேன்
காலை
வேளைகளில்ஜன்னலோரம் அறிந்த பாவைகள்
அமர்ந்திருந்தும் கூட
அளித்ததில்லை.
நான் கொண்டு வரும் புத்தகத்தினை.ஆம்
புத்தகம் முழுதும்
புதைந்திருப்பாய்
நீ உன் பெயரால
தியேட்டருக்கு சென்றிடுவாய்
திருட்டுதனமாக-
தோழிகளுடன், தோழிகள் தொல்லை
என
நினைத்தவாறு.புரிந்தும் படம் பார்க்காமல் பார்வை
பரிமாறுவாய்.
நானோ புரியாத படத்தினை புரிந்தவன் போல
கற்பனை
கொண்டு பரிமாறிய பார்வையொடு
பாரிஸில் இளைப்பாறி இருப்பேன்
.
திருமணத்துக்கே சென்றிடாதா
செல்லாக்காசு நான்.
நீ ஒரு ஞாயிற்றுகிழமை திருமணத்துக்கு
சென்றிட யாரென்றே
அறியாதவர் திருமணத்துக்கே
ஜிவ்வென கிளம்பியவனுக்கு ஜாக்பாட் அடித்தது.ஆம்
அன்று தான் என்னை பலநாள் பழகியவன் போல
உன் தோழியிடம்
அறிமுகம் செய்துவைத்தாய்.
எனக்கே தெரியாமல் எத்தனையோ முறை
வாழ்த்தி
இருக்கிறேன் அந்த தம்பதிகளை.உனக்கென நான் என ஆன பின்னே
தொடர்ந்த
வாலிப கூட்டம் வழிவிட்டு விலகி நின்றது,
மச்சக்காரன் நான் என மனதில் கருவியபடிஎப்படியடி என்னை இத்தனை நாளாய்
மனதில்
மறைத்திருந்தாய் என கேட்டேன்.
நீயோ மெளனம் காத்தாய்.
பதில்
இல்லாத வருத்தத்தில் மெல்லமாய்
புல்லாங்குழல் எடுத்து ஊதினேன்
என்
குழல் இசை கேட்டு தென்றலும் ஓடி வந்திட
விலகிய உன்
தாவனியில் என் விடை கிடைத்தது
ஆம் மெல்லிய நூலாடையில் இருமலைகளை
மறைத்திருக்கும் உனக்கு இம்மலையை
மறைத்திருந்ததில்
வியப்பென்ன!மணி நேரம் குளித்துப் பழகிய நாம்,
நம்
கடவுளின் வரவால் ஒரு பத்து நிமிடம்
கூட குளிக்காமல் மணிக்கணக்கில்
மறைந்திருந்தோம் குளியலறையில்
தண்ணீர் திறந்துவிட்டபடியாய்
சோப்பு மறக்காமல் எடுத்து செல்வோர் மத்தியில்
செல்போன் எடுத்து சென்று
காக்கை இனமானோம் குளித்திடும்
முறையினால்
கடவுள் கண்டாலே கேள்வி கேட்டிடும்
பெரியார்
வழிவந்த திராவிடன் நான்
காதல் வந்ததில் கடவுளை கண்டவன்
ஆனேன்
கிரஹாம் பெல் கடவுள் ஆனார்.
அழைப்பு மணி ஆலயமணி
ஆனது
.வரும் அழைப்பு உனதானதால்
அது கடவுளின் குரல்
ஆனது.
எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம்
பெற்றோர்களை,
எத்தனை முறை ஏமாற்றி
இருப்போம் நண்பர்களை,
எப்படி தோன்றுமோ
தெரியவில்லை
எண்ணங்கள் நமக்குள்ளே
எல்லோரையும் ஏமாற்றினோம்
ஏமாறுகிறோம் எனத் தெரியாமலையே
இதயத்தை திருடிட திருட்டினை கற்று கொண்டேன்
பேசாது
தொடர்ந்த நாட்களில் பொய்
பேச கற்றுகொண்டேன்
கற்று கொண்ட எல்லாமே
மறந்து
போயின காதல் வந்த பின்னே
காதல் வந்த பின்னே சொந்தமும் மறந்தது
பந்தமும்
மறந்தது கல்யானம் வந்த போது
ஏனோ காதலும் மறந்தது கூடவே
காதலனும் மறந்துபோயினான் அவளுக்கு
அவளின் கல்யாணத்தின் போது மறைத்த
காதல்
மட்டும் மறக்க முயன்றும் முடியாமல்
மண்டிக் கிடக்கு மலை போல
மனதுக்குள்ளே.கவிதைத்தாள் தானேன்னு கசக்கி
எறிய
முடியவில்லை
கத்தி வெட்டுன்னு மருந்தும்
போட முடியவில்லை
முறிஞ்சி
போன காதல் கவிதையுமல்ல
கத்திவெட்டுமல்ல அது கல்வெட்டு.
காதலி
மண்ணோடு மடிந்த பின்னும்
தோண்டி எடுக்கப்படும்
நினைவுகளால்
பிடிக்கலை! பிடிக்கலை!! எனக்கு
பிடித்தவளின்
குடும்பத்துக்கு என்னை பிடிக்கலை, பிடிக்கவே
இல்லை.
துடிக்கலை! துடிக்கலை!! கண் அசைத்தவள்
கைவிட்டு
சென்றதும் துடிக்கலை இதயம் துடிக்கவே
இல்லை.அடங்கலை! அடங்கலை!! அவள் நினைவென்னும்
துடிப்பு வாழ்க்கையில் அடங்கவேயில்லை.முடியலை! முடியலை!! அவள்
நினைவுதனை
மறந்திட
முடியலை.முடியவேயில்லை.வழியில்லை! வழியில்லை!! வந்துவிடு
என்னோடு என
சொல்வதற்கு ஒரு வழியும்
வாய்க்கவேயில்லைதுணிவில்லை த்ட்டிச்சென்றவனை எட்டி
மிதித்து
தாலி கட்டி அணைத்திட துணிவில்லை.
துணிவுசொல்ல அவளும் உடன்
இல்லை.பிழையில்லை! பிழையில்லை!! அது
பிழையேயில்லை,
அவளை கொன்றால் அது கொலையும் இல்லை.மனமில்லை மனமில்லை மணமேடையை
பினமேடையாய்
மாற்றி இணைந்திறந்திட மனமில்லை.புரியலை! புரியலை!! என்ன செய்வது என
புரியவே இல்லை,
தெரியலை! தெரியலை!! எவருக்குமே விடை
தெரியவேயில்லை,
விடையில்லை! விடையில்லை!! காதல் தோல்விக்கு
விடையேயில்லை.விடியலை! விடியலை!! விஞ்ஞானம் வளர்ந்த
பின்னும் விடியலை.
விருப்புண்ட மனங்கள் இணைந்து இன்புற்றிட
இதுவரை ஒரு
விடியல் விடியவே இல்லை.
லைலா மஜ்னு தொட்டு நம் காதல்
வரை.
என்னைச் சுற்றி ஆயிரம வண்ணத்துப் பூச்சிகள்,
என்னை சிறை எடுத்திட
.ஆமாம்!!
உன் இதழில் நான் தேன் எடுத்ததால்.
மலர்களுக்கு கூட நாம்
குற்றவாளி ஆனோம்.
ஆமாம்- மகரந்தச் சேர்க்கையின் மகத்துவம்
குறைகின்றதாம்
நாம் கூடும்போது.
காற்றுக்கு கூட நாம் இருவரும் பகைவர்களானோம்.
ஆம் நம்
நெருக்கத்தில் காற்றின் பயணம்
இடர்படுகிறதாம் இறுக்கியணைத்த வேளைகளில்.
சுடும் தீக்கும் கூட திருடர்களானோம். ஆம்-நம்
காமச் சூட்டின் அனல்
நாம் தீயிடம் திருடியதாம்.
அனைத்தால் அணைந்து போகும் அந்த
தீ அறியுமா?
அணைத்தால் கூடிப்போகும்
நம் சூட்டின் ரகசியம்.
நீருக்கும் கூட தீராத
கோபம் . ஆமாம்-
நீரும் புகுந்திடாத இடங்களில் நான்
அத்து மீறி நுழைந்து
ஆட்டம் போடுவதால்.
நான் என்ன செய்ய!!
இன்று சிறை எடுக்க வரும்
வண்ணத்துப்பூச்சிகள்,
அன்று ஆள் அரவம் கேட்டு நமக்காய்
காவல் காத்தது ஏன்?
இன்று குறை சொல்லும் மலர்கள் அன்று
உனக்காய் பறித்தபோது
சிரித்திருந்தனவே.
சிரித்த மலர்கள் சினம் கொள்வதில் நியாயம் என்ன?
காற்று,நாம் அன்று தள்ளித் தள்ளி அமர்ந்திருந்த
வேளைகளில் உன்
துப்பட்டா பறந்து வந்து
என் முகம் மூடியிருக்கக் கூடாது.
உன்னை
தொடர்ந்ததால் விழுந்த தீச் சூட்டிற்கு
வலி வழிமாறி போனதே உன் இதழ் அணைப்பில்.
இன்று கோபம் கொள்ளும் நீர் அன்று காவிரியில்
குளிக்கயில் நீர் அள்ளி
இறைத்து பேசிக் கொண்டநேரம்
நெருங்கி இருக்கக் கூடாது உன் மார்பினை.
இப்படி எல்லாமே எதிர்க்கின்றன
தீ, நீர்ப்பரப்பினைப் போல- உன் அப்பனைப்
போல
ஆனால் நான் கேட்கிறேன் இதேப் பிறப்பினை அடுத்தப் பிறப்பிலும்.
நீ சுற்றி வலம் வந்த கோயில் பிரகாரம்-
உடன் சுற்றி வந்த போதே,
உலகையே சுற்றிய உணர்வோடு உட்கார்ந்து
ரசித்த போது தான் உணர்ந்தேன்.
ஏன்? எல்லா தெய்வங்களும்
வெவ்வேறு இடங்களில்,
வெவேறு திசைகளில் இருக்கின்றன,
ஓ அவைகளும் உன்னை காதலிப்பதாலா?
கடவுள் மட்டுமல்ல, கன்னிகளும்
காதல் கொள்ளும் காந்தாரம் நீயடி.
நீ மன்னில் வந்த பின்புதான்
பென்னினம் இரட்டிப்பானது. ஆமாம்,
உன்னைப் போல ஒருத்தியை படைத்திட
முயன்று பிரம்மன் தோற்றுப் போனதால்.
ஆயிரம் அழகிகள் அரைகுறையாய்
அலைகளுக்காக ஏங்கி, ஓடி ஓடித் தேடிட-
உன் ஒருத்தி வரவில் மட்டும்,
சுனாமியாய் அலைகள் பொங்கி கரை வந்து,
உனக்கு பாத பூசை செய்து
கண்ணீர் விட்டு கரைந்து செல்கின்றனவே.
ஏன்?என கடல் உற்று நோக்கினேன் வெகுநேரம்.
கண்ணீர் சிந்தியது கண்கள்-
வெகுநேரம் உற்று நோக்கியதால்.
ஓ!என்போல உன்னை காதலித்தவர்களின்
சிந்தனைத் துளிகள்தான் கடல்நீரானதோ.
இந்த துளிகள், சிந்தனைத்துளிகள் அல்ல,
என் கண்ணீர்த் துளிகள்.
கடலில் கலந்திடவிடாதே.
நானும் கரைந்து விடுவேன்.
மழைகாலத்தில் நீ நடந்திடும் நேரம்
மழைத்துளி மண்விறைந்து உன்மீது
சிதறுண்டால் விண்ணையே
சிறைவைப்பேன் உன் கூந்தலில்.
குளிரில் நீ நடுங்கிட நேர்ந்தால் அந்த
சூரியனையே இரவிலும் விழித்திருக்க
வைத்து சூரியனுக்கே தண்டனை
அளிப்பேன்உன் வேல்விழி வாங்கி .
இவை அனைத்தும் சாத்யமா! சாமன்யனே?
என கேட்காதே. என்னருகில் நீ இருந்தால்,
அரபிக் கடலும் கூட ஆறு அடி ஆழம்தான் எனக்கு.
NET-இல் வந்த உன்னை நேரில் அழைத்தேன்.
நேரில் வர வெட்கப்பட்ட நீயோ!
வெண்ணிலவாய் எட்டா உயரத்தில் தோன்றினாய்.
எட்டவில்லை உன்னை தொட என்றேன்.
வானம் தொட்டு விடும் தூரம் தான் என்றாய்.மூச்சு முட்ட பொய் சொன்னேன்.
வான் இறங்கி நிழலாய் வந்தாய்.
அய்யோ! நிழல் மிதி படுகிறதே என்று,
உன் நிழல் என்மேல மட்டுமே விழுந்திட,
நிழலுக்கு குடை பிடித்து நடந்து வந்தேன்.
இப்படி உன் நிழலுக்கே குடை பிடித்தவன்
இன்று இடி இல்லை,மின்னல் இல்லை
இருந்தாலும் நனைகின்றேன் உன் நினைவுகளால்.
வெண்ணிலா! நீ என்றேன்.
முடிந்தால் தொட்டுக்கொள்
என்றாய்.
இந்த ஏழைக்கு ஏணி கிடையாதா
என்றேன்.
நீயோ இறங்கி வந்தாய்.
இறங்கி வந்த உன்னால் நான்
உயரத்தில் நின்றேன் உன் மனதில்.
என்னை ஏற்றி வைத்த உனக்கு
நெற்றிப்பொட்டிட
பொட்டாக நட்சத்திரத்தை திருடித்
தந்தேன்.
என்னைத் திருடிய திருடி-
உனக்காக,
நானும்
திருடனானேன்.
இதோ இன்னமும் திருடிக்
கொண்டிருக்கிறேன்
உனக்காக
நட்சத்திரங்களை.
நட்சத்திரங்களும்
குறையவில்லை.
உன்மேல் கொண்ட காதலும்
குறையவில்லை.