நீண்ட கருங்கூந்தல் அழகு- மேகத்தினை
விட,
நான் பார்ப்பதை உளவு
பார்க்கும்கண்கள் அழகு- காத்திருக்கும் கொக்கினை
விட,
ஆசையின் அளவாய் நீ சுழிக்கும்
முகச்சுழிப்பு அழகு- தேய்கின்ற நிழவினை
விட,
நாசி நுனிவரை
வந்துசெல்லும்
கோபம் அழகு- பாம்பு சீறுவதை
விட,
எனை கண்டதும் விரியும்
இதழ்கள் அழகு - மொட்டு மலர்வதை
விட,
நான் தரும் மஞ்சள் கயிறு
தாங்கிட
காத்திருக்கும் கழுத்து அழகு-
கடல் கொண்டசங்கினை விட,
வெண்மையோடு மென்மையான
கைகள் அழகு- வென்பஞ்சினை
விட,
சிக்கனத்திற்கு சிறப்பான
சிற்றிடை அழகு- புள்ளியை
விட,
வாலிபம் கூறிடும் வழவழப்பான
கால்கள் அழகு -பச்சை வாழைத்தண்டினை
விட,
பாதங்கள் கொண்ட விரல்கள்
பத்தும் அழகு- விரிந்து சென்றிடும் கிளைகளை
விட,
மறைத்து வைத்த அங்கமோ அழகோ
அழகு-
அருங்காட்சிய
பொருள்களைவிட,
இத்தனை அழகும் கொண்ட உன் மனம்
என்னை விரும்பியதே அதுதான் உலக
அழகு,
அந்த ஆண்டவனே அறியாத
அழகு.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Friday, July 20, 2007
ஆண்டவன் அறியாத அழகு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment