Search This Blog

Wednesday, August 08, 2007

நீ என்னைத் தாங்கிட‌

நீ நடந்திட, பாதைக்கு மலர்களை
விரித்திட எண்ணினேன்.
ஆயிரம் அழகிகள் என்னிடம்
வாளேந்தி போருக்கு அழைத்தபடி.
ஆம்! நீ நடந்திடும் பாதையில்
பாயாய் விரிந்திட,தாங்கள் மலர்களை விட
எவ்விதத்தில் குறைகொண்டோர்
என குமுறலோடு.
மலருக்கும்‍-மங்கையருக்கும்
நம்மால் வேண்டாம் இனபாகுபாடு
என்றெண்னி என் கையேந்தி
எடுத்துச் சென்றேன் பஞ்சுமெத்தைக்கு.


அங்கே பருத்திக்கும்-
பட்டுப்பூச்சிக்கும்
இடையே பயங்கர கலவரம்.
உலகிற்கு இன்னும்
பல்லாயிரம்
பஞ்சுமெத்தைகள்
தேவைபடும்,
அதனால் நம்மால் பிரிவினை
வேண்டமென்று உன்னை
என் மார்பில் தாங்கினேன்.

நீ நீராடிட காவேரி கூட்டிச்
சென்றேன்.
மழையோ கோபத்துடன் தரை
இறங்கியது,
வெண்மேகத்தின் வேலியினைத்
தாண்டி.
நம்மால் மழைக்கும்-மேகத்துக்கும்
கூடாது உட்பூசல் என எண்ணி,
சமாதான கொடி காட்டினேன்
என் வெண்ணிற வேட்டி கழட்டி.

உன் கூந்தல் ஈரம் போக்கிட
முடி அவிழ்த்ததில், நெகிழ்ந்துபோன
பூங்காற்று, முடி
உலர்த்திட
ஊர்ந்து வந்திட, சூரியன்
கோபமாகி
காற்றோடு கை கலக்கப்
பார்த்திட,
வேண்டாம் நம்மால்
நாட்டினருக்கு
"பகலும் ஒரு இரவாய்" என்றெண்ணி
என்
மூச்சுக்காற்றினிலேயே
உன் கூந்தல் ஈரம்
உலர்த்தினேன்.


உடை உடுத்தி
பொருட்காட்சி
கூட்டிச்
சென்றேன்.
அழ‌குக்கு வைத்திருந்த‌
பொம்மைக‌ள்
உயிர்கொண்டு அத‌ன்
ஆடைக‌ள்
க‌ழ‌ட்டி உன‌க்கு த‌ந்திட‌ துணிய‌வே
வேண்டாம்
பொம்மைக்கும்-பொதும‌க்க‌ளுக்கும்,
பொதுக்காட்சியாய் என‌ எண்ணி
வெளிவ‌ந்தோம்.
ம‌க‌ராணி உன‌க்காய் ம‌திய‌
உணவுக்காக‌
உய்ர்த‌ர‌ உண‌வு விடுதி
நுழைந்திட‌,
உன் செவ்வித‌ழ் உர‌சி
உட்ச்சென்ற‌,
உண‌வு உற்சாக‌ம்
கொண்டிட‌,
உத‌டு உர‌சாம‌ல் உள்சென்ற‌ குடிநீர்
குமுறிட‌,
வேண்டாமே
உண‌வுக்கும்‍-குடிநீருக்கும்
உறவுமுறிவு என‌ எண்ணி
நானே உண‌வு
ஊட்டினேன்.
க‌ட‌ற்சுவாச‌ம் வாங்க‌ க‌ட‌ற்க‌ரை
சென்றிட‌,
உன்னை க‌ண்ட‌தால் உவ‌ப்பு
மிகுதியில்
வெண்ணுரையோடு நுர‌ம்பி
நெருங்கிட‌,
உன்னை கொண்ட‌தால் க‌ட‌ற்க‌ரையோ
மின்னிட‌,
க‌ட‌ற்க‌ரைக்கும்-நுரைய‌லைக்கும்
வேன்டாமே ம‌ல்யுத்த‌ம் என‌
எண்ணி
எழுந்து ந‌ட‌ந்தோம் எல்லை
நோக்கி.
வீடு திரும்பிய‌ வ‌ழியெல்லாம்
வாடிக்கிட‌ந்த‌ன‌ ம‌ல‌ர்க‌ள்.

விட்டுப்பிரிய‌ ம‌ன‌மின்றி க‌ன‌ன்ற‌
க‌ண்க‌ளோடு ம‌றைந்திடும் க‌திர‌வ‌ன்.
வீதியில் நீ நுழைந்த‌தும் தெரு விள‌க்கும்,
க‌ண்ண‌டித்து பிர‌காசிக்கும்
உன்னை க‌ண்ட‌ ம‌கிழ்ச்சியில்

உண‌வு முடித்து, த‌ரை இற‌ங்கிய‌,
ஆடைக‌ட்டிய‌ வெண்ணில‌வாய்
அறை நுழைந்தாய்.
வ‌ந்த‌வ‌ள் உன்னை க‌ண்ட‌தும்
காம‌ன் உயிர்கொண்டான்.
உன்னை மார்பில் தாங்கிய‌ என்னை
உன் ம‌டியினில் தாங்கினாய்.
ம‌டியில் கிட‌ந்த‌ என்னை
ம‌ன்ம‌த‌ன் தூன்டிவிட்டான்.
ம‌ன்ம‌த‌ன் தூண்டிய‌தில் தூண்டில்
மீனாய் நீ துடித்துப் போனாய்.
நீ துவ‌ண்டு போன‌தில்
மிர‌ண்டு போனேன் நான்.
நாளெல்லாம் நான் உன்னைத்
தாங்கிய‌ போது ,கானாத சுக‌ம்
க‌ண்டேன் நீ நாழிகை நேர‌ம்
என்னைத் தாங்கிய‌தில்.
இந்த‌ நாழிகை நேர‌த் தாங்க‌லுக்காக‌வே
நாடு முழுதும் நாளெல்லாம்
பெண்க‌ளை ராணியாக்கி
தேனியாகின்ற‌ன‌ர் ஆண்க‌ள்.

No comments: