NET-இல் வந்த உன்னை நேரில் அழைத்தேன்.
நேரில் வர வெட்கப்பட்ட நீயோ!
வெண்ணிலவாய் எட்டா உயரத்தில் தோன்றினாய்.
எட்டவில்லை உன்னை தொட என்றேன்.
வானம் தொட்டு விடும் தூரம் தான் என்றாய்.மூச்சு முட்ட பொய் சொன்னேன்.
வான் இறங்கி நிழலாய் வந்தாய்.
அய்யோ! நிழல் மிதி படுகிறதே என்று,
உன் நிழல் என்மேல மட்டுமே விழுந்திட,
நிழலுக்கு குடை பிடித்து நடந்து வந்தேன்.
இப்படி உன் நிழலுக்கே குடை பிடித்தவன்
இன்று இடி இல்லை,மின்னல் இல்லை
இருந்தாலும் நனைகின்றேன் உன் நினைவுகளால்.
வெண்ணிலா! நீ என்றேன்.
முடிந்தால் தொட்டுக்கொள்
என்றாய்.
இந்த ஏழைக்கு ஏணி கிடையாதா
என்றேன்.
நீயோ இறங்கி வந்தாய்.
இறங்கி வந்த உன்னால் நான்
உயரத்தில் நின்றேன் உன் மனதில்.
என்னை ஏற்றி வைத்த உனக்கு
நெற்றிப்பொட்டிட
பொட்டாக நட்சத்திரத்தை திருடித்
தந்தேன்.
என்னைத் திருடிய திருடி-
உனக்காக,
நானும்
திருடனானேன்.
இதோ இன்னமும் திருடிக்
கொண்டிருக்கிறேன்
உனக்காக
நட்சத்திரங்களை.
நட்சத்திரங்களும்
குறையவில்லை.
உன்மேல் கொண்ட காதலும்
குறையவில்லை.
No comments:
Post a Comment