நினைத்தாலே கண்கள் மட்டுமல்ல என்
பேனாவும்
கண்ணீர் சிந்தும் நிகழ்ச்சி அது. நீ வீடு காலி செய்து
பக்கத்து
டவுனுக்கு பயணப்பட்ட நேரம், பள்ளிவிடுமுறை
நாளான போதும்கூட நண்பர்கள் உடன்
அரட்டை அடிக்க
ஆற்றங்கறை சென்றிடாமல், அத்தனை தட்டுமுட்டுச்
சாமான்களுடன்,
நீயும் ஏறும்வரை கண்கள் கலங்கிட
காத்திருந்தேன். உன் அப்பா கொடுத்த ஜ்ம்பது
ரூபாயைவாங்க மறுத்த என் கைகள், நீ
கொடுத்த ஜந்துரூபாயைஅழுதகண்ணோடு வாங்கி
கொன்டேன.இன்னமும் உன்கைரேகை அழியாமல் உறையிட்டு
பத்திரப்படுத்தி வருகிறேன்.நீ பெரியவளாகிவிட்டாய் என்று விசேஷ
அழைப்புவீட்டுக்கு வர, அம்மாவிடம்
ஆயிரம்முறைவிசாரித்திருக்கிறேன்
உன்னைப்பற்றி.எத்தனையோ தடைகளுக்குப் பிறகு உன்னை,உன்வீட்டில் சந்தித்திட உன்
அண்ணனின்திருமனநிச்சயம் வழிசெய்தது.வீட்டில்அத்தனையும் புதியமுகங்களாயின
உன்னைத்தவிர.யாரிடமும் விசாரிக்க மணம்இன்றி
உன்னைத்தேடிஅலைந்த விழிகள் இதயத்தை
இரும்பாக்கியது.நான் உன்னைத்தேடி வருவேன் எனஅறிந்தவள் போலே-கரைஒதுங்கிய
வெண்சங்காய்,மாமரத்தின் கீழே கிடந்த இலைகளை
கிள்ளிஎறிந்தவாறே தலைகுனிந்தபடி இமைகள்
விரித்தாய்.விண்மீன்களை எண்ணி சொல்லச்சொல்லி
இருந்தால்கணநொடியில் எண்ணி சொல்லி
இருப்பேன்.ஆனால்நான் பேச வந்த வார்த்தைகள்,அதை
எவ்வளவு எனஎழுதினால் யுகங்கள் பல
வேண்டும்.எழுதிட, கடல்நீரே!"மை" ஆனாலும் கூட போதுமா என்பது
சந்தேகமே!.ஆனால் அத்தனை வார்த்தையும்
இரண்டுநிமிட மெளனத்தில்
இடம்மாறின.எப்படியோ!! உன்னைப்பற்றி வருகின்ற
செய்திகளைமட்டுமே என்காதுகள் கேட்பது போல,
மற்றன எதையுமேகேளாமல்-நீ படித்திடும் பள்ளியில்
சேர ஆசைப்பட்டேன்.என்ன செய்ய நான் "ஆடவன்" ஆனதால்
உன்னுடன்சேர்ந்து படிக்க இயலாது உன்னை
மட்டுமேபடித்தேன் பள்ளிவாசல்களில்
காத்திருந்து.உன் அண்ணன் அயல்நாடு சென்றிட,
உன்னையும்அயல்நாட்டிற்கு அழைத்திட, அவன்
நண்பனை உன்னை-கேட்காமலையே உறுதி செய்யத்
தொடங்கினார்கள்.இந்த விசயம் அறிந்த நீயோ படிப்பினை
தவிர்த்தாய்.நானோ விசயம் அறிந்து
துடித்தேன்.நீயோ விஷத்தை
கையிலெடுத்தாய்.என் உயிர் கெட்டியோ என்னவோஉனக்கு ஒன்றும் ஆகிடவில்லை அன்று.என் அம்மா-அப்பா எவ்வளவோ
சொல்லியும்கேட்காமல் உன்னைத்தேடி உன்
இல்லம் வந்தநான் அசிங்கப்படுத்தப்பட்டேன்
உன்பெற்றோர்களால்.நீ மண்டியிட்டு கேட்டும்
மசியாத உன்பெற்றோர்கள்,கையில் அட்சதைக்குப் பதிலாய் உயிர்
மாய்த்திடும்வழியில் விஷம் கையிலெடுக்க,
விதியை நொந்துநீ சொன்ன சொல் எல்லாம்
தானேஇன்றைய என்
செல்வங்கள்.திருமணம் ஆகியும் உன் மனம்
மாறவில்லை.பணம் பலகண்டும் என்னுடைய
காதல்மனமும்மாறவில்லை.!"இன்னமும்
காதலிக்கிறேன்-உன்னைப் போலவே
நானும்,"அந்த ஜந்து ருபாய் தாளை
தடவியவண்ணம்.உன்னை
மணக்காததால்!!நானோ கல்யாணம் ஆகாத
பிரம்மச்சாரி. நீயோமணமாகியும் மங்கலம் சூடிடாத
நெற்றிக்காரி-திலகம் நான் இடாததால்.நீ குங்குமம் சூடிடாதற்கு மதம்
காரணமாம்.நான் மணம் கொள்ளாதற்கு ஜாதகம்
காரணமாம்.காதலை அறியாத
அறிவாளிகளுக்கு.
நகத்தினைப் போல நீ பிரிந்து சென்று விட்டாய். உன்னுடைய நினைவு போல வளரும் நகத்தினை நான் நகையினைப் போல சேமிக்கிறேன். நீ என்னைத் தேடி இங்கே வருவாய் என தெரிந்த்திருந்தால் கருவரையிலும் கூட காத்திருந்திருக்கமாட்டேனடி மாதங்கள் பத்தும். நட்பை பற்றி நானும் கூட நாலாயிரம் எழுதியிருப்பேன். அன்புடன் என்றும் காவியன்77
Search This Blog
Tuesday, December 05, 2006
அறியாத அறிவாளிகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hi kaavi,
engernthu ungalukku ivlo arivu thidirnu pongi vanthathu? enaku kavithai padika theriyathu.athanaala puriyaathu. so sorry for this.
Post a Comment